வேட்பாளர் தம்பட்டம்
மதிமுக கூட்டணியில் மதிமுகவின் பம்பரம்
சின்னத்தில் நிற்பவர்தான் தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி. இவரது
தமிழர் முன்னேற்றப்படையில் பொதுச் செயலாளராக இருப்பவர் கணேசன். இவர்
பூந்தமல்லி, நசரத்பேட்டை, ஜெயபிரகாஷ் நாராயணன் தெரு, எண் 740 என்ற வீட்டில்
குடியிருந்து வருகிறார். இது வாடகை வீடு.
ஆறு மாதங்களுக்கு முன், இவரது வீட்டின் உரிமையாளர் வீரலட்சுமியை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். நான் தமிழகமே அஞ்சி நடுங்கும் ஒரு இயக்கத்தின் தலைவி. என்னையா வீட்டை காலி செய்யச் சொல்கிறாய் என்று வீரலட்சுமியும், கணேசனும் சேர்ந்து, வீட்டு உரிமையாளரை அடித்துள்ளனர். அது நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாராகியுள்ளது. நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் அலெக்சாண்டர், சட்டப்படி நியாகமாக நடவடிக்கை எடுத்து, கணேசன், வீரலட்சுமி ஆகிய இருவரையும் எச்சரிக்கை செய்துள்ளார்.