வெள்ளி, 15 ஏப்ரல், 2016

ஒன்றாக (சாராய) தொழில்செய்த வளர்மதியும் கு.க,செல்வமும் ஆயிரம் விளக்கு.....வெளக்கெண்ணெய் அடுக்குமா .....?

12963730_952440278202581_2672602238198555608_n-horzவேட்பாளர் தம்பட்டம் – வளர்மதி & கு.க.செல்வம்s avukkuonline.com :இந்தத் தேர்தலில் மிகவும் துரதிருஷ்டம் செய்தவர்கள் யாரென்றால் அவர்கள் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள்தான்.    சனியனுக்கும் சாத்தானுக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளார்கள்.   அதிமுகவில் வளர்மதி என்றால், திமுகவில் கு.க.செல்வம். இந்த குடும்பக் கட்டுப்பாடு (கு.க) செல்வமும், வளர்மதியும், அதிமுக ஜெயலலிதா ஜானகி அணியாக பிரிந்து இருந்தபோது, ஜானகி அணியில் இருந்தவர்கள்.   போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டில் சாணி வீசும் போராட்டம் நடந்தபோது, சாணியை வீசியவர் வளர்மதி.   அப்போது வளர்மதிக்கு இரு புறமும் தளபதியாக இருந்தவர்கள் சைதை துரைசாமி மற்றும் கு.க.செல்வம். கு.க.செல்வத்துக்கு மற்றொரு பின்னணி உண்டு.   சாராய அதிபர் ராமச்சந்திர உடையாருக்கு “தேவையானவற்றை” செய்து தரும் நபராக இருந்தார் செல்வம்.    அப்போது அவருக்கு தேவையானவற்றை சப்ளை செய்து வந்தவர் வளர்மதி.   பின்னாளில் வளர்மதியின் தொழிலுக்கும் உதவியாளராக மாறிப் போனார் செல்வம்.

செல்வத்துக்கு தெரியாத வளர்மதி ரகசியங்கள் கிடையாது.   வளர்மதிக்கு தெரியாத செல்வத்தின் ரகசியங்கள் கிடையாது.  இருவரும் நகமும் சதையுமாக, பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து இருந்தவர்கள்.    வளர்மதி, செல்வம் ஆகிய இருவரும் இணைந்து என்னென்ன செய்தார்கள் என்பது, திமுக அதிமுகவில் உள்ள மூத்தவர்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் இவை அத்தனையையும் அறிந்திருந்தும், வளர்மதிக்கு எதிராக செல்வத்தை நிறுத்தியுள்ளது திமுக.    அதிமுகதான் கழிசடை அரசியலைச் செய்கிறது என்றால், அதற்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதத்தில், திமுக செயல்படுகிறது.   அதிமகவின் வேட்பாளருக்கு மாற்றாக, ஒரு நல்ல தரமான வேட்பாளரை நிறுத்த வேண்டிய இடத்தில் இருந்த திமுக, நாங்களும் அதே கழிசடை அரசியலைத்தான் செய்வோம் என்று கச்சைக் கட்டிக் கொண்டுள்ளது.
ஆயிரம் விளக்கு வேட்பாளர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான்.
வேட்பாளர் தம்பட்டம் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக