சனி, 16 ஏப்ரல், 2016

மதிமாறன்: அனல்காற்று ....தெரு கூட்டுபவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை...கர்பிணிகள்...

இன்று சென்னையில் அனல் காற்று வீசும். பகல் 12 லிருந்து 3 வரை வெளியில் செல்லாதீர்கள். பாதிப்பை ஏற்படுத்தும். தவிர்க்க முடியாதபோது பாதுகாப்பாகச் செல்லுங்கள்’ என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.
அரசும் அதைப் பரிந்துரைத்து மக்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது.
நாமும் வேலையிருந்தாலும் அந்த நேரத்தில் வெளியில் போவதை தவிர்க்க விரும்புகிறோம். தவிர்த்தும் விடுகிறோம். நம் குடும்ப உறுப்பினர்களையும் அக்கறையோடு பாதுகாக்கிறோம். இது முறையானதுதான்.
ஆனால், கல்குவாரியில், சாலைபணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த வெப்பத்தை தவிர்க்கவும் முடியாது, தப்பிக்கவும் முடியாது.
குறிப்பாகப் பெண்கள், அதிலும் நிறைமாத கர்பிணிகள், குழந்தைப் பெற்று 10 நாட்கள் கூட ஆகாமல் வேலைக்கு வந்திருக்கும் பெண்களின் துயரம் கொடூரம்.

பொதுவாக எப்போதுமே இவர்களுக்குக் கர்பகால விடுறையும் கிடையாது. பேறுகால விடுப்பும் கிடைக்காது. இடையில் இந்த கூடுதல் துன்பங்கள்தான் இவர்களுக்கு கிடைக்கும் ஒரே ‘போனஸ்’
குறைந்தபட்சம் இதுபோன்ற அதிக வெப்பமான நாட்களில் சம்பளத்துடன் அவர்களுக்கு விடுமுறை அளிப்பது அவசியம். அப்படிச் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்ற உத்தரவை பிறப்பித்துவிட்டு, பிறகு அரசு இந்த வானிலை அறிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்தால் அது உண்மையான அக்கறையாக இருக்கும்.
அரசின் மக்களுக்கான அறிக்கைகளில் எப்போதும் கடின உழைப்பில் ஈடுபடுகிற மக்கள் கணக்கில் வைக்கப்படுவதே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக