வெள்ளி, 15 ஏப்ரல், 2016

அம்பேத்கார் சிலைக்கு திருமாவளவன் ஸ்டாலின் மாலை அணிவிப்பு...(எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தேகம் )

அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தை திருமாவளவன் வரவேற்று அழைத்து சென்ற சம்பவம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி நேற்று, தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்களின் வருகைக்காக காத்திருந்தார்கள். தொல். திருமாவளவனும் அங்கு நின்றிருந்தார். அப்போது, அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க, திமுக பொருளாலர் மு.க. ஸ்டாலின் அங்கு வந்தார். அவரைக் கண்டதும், திருமா கை குலுக்கி வரவேற்று அழைத்துச் சென்றார். மு.க.ஸ்டாலின் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து போது திருமா, அவரின் அருகிலேயே நின்றார். அதன்பின் மு.க.ஸ்டாலின் திருமாவுடன் கை குலுக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.webdunia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக