வெள்ளி, 15 ஏப்ரல், 2016

வரலட்சுமிக்கு மவுசு கூடியது.....தாரை தப்பட்டை ஊத்திகிட்டாலும்..

வரலட்சுமியின் சினிமா கரியர் அவர் எண்ணப்படி இப்போதுதான் அமைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு. படம் டப்பா என்றாலும், வரலட்சுமியால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் என்பதை தாரை தப்பட்டை உணர்த்தியது. தற்போது நிபுணன் மற்றும் மம்முட்டியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். வரலட்சுமி ஆக்ஷன் கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார், அடிதடி உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார் என அவரைப் பற்றி ஒரு வதந்தி உலவுகிறது. அதனை வரலட்சுமி மறுத்துள்ளார். அதிரடியான வேடங்களில் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்காக அந்த மாதிரி படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன் என்பது உண்மையில்லை. அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன் என்றார். வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக