வெள்ளி, 15 ஏப்ரல், 2016

JNU கண்ணையா குமார் மீது செருப்பு வீச்சு...மகாராஷ்ட்டிரா...நாக்பூர்


I request the person who threw shoe at me to give me a complete pair. Some poor man can use it. I lost my slippers at Deekshabhoomi this morning and I know it’s heating outside so if someone wants to throw anymore shoes at me, please bring a pair so that I can use it outside,” he said. நாக்பூர் : மகாராஷ்ட்டிராவில் நடந்த அம்பேத்கர் விழாவில் பங்கேற்று பேசிய டில்லி பல்கலை மாணவ தலைவன் கண்ணையா குமார் மீது செருப்பு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவ தலைவர் கண்ணையாகுமார். இவர் சமீபத்தில் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசியதால் தேசவிரோத வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து அவரும் அவரது கூட்டாளி மற்றும் துணை போன பேராசிரியர் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமினில் இருந்து வருகின்றனர். 
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, அம்பேத்கர் பிறந்த நன்னாளில் அவரின் இனத்திற்கு ஏற்பட்ட இகழ்வாகவே இதை கருத வேண்டியிருக்கிறது,
இந்நிலையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தொடர்பாக நாக்பூர் தான்வாடே கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்க கண்ணையா சென்றார். இந்நேரத்தில் விழாவுக்கு செல்லும் வழியில் பஜ்ரங்தள் தொண்டர்கள் காரை மறித்தனர். கல்லும் வீசப்பட்டது. தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு ஷூ பறந்து வந்தது. ஆனால் அது அவர் மீது படவில்லை. இதனால் இந்த கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக