வியாழன், 14 ஏப்ரல், 2016

சீமான்:எந்த தாய் தன்மகனை குடிக்க சொல்லுவார் ? இந்த தமிழக (ஈழத்தாய்?) தாய் குடி குடி குடிச்சு சாவு என்கிறாரே?

தமிழகத்தை ஒரு தாய் போன்று ஆட்சி செய்வதாக கூறுகிறார் ஜெயலலிதா. எந்த தாய் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தனது மகன்களை குடிக்கச் சொல்வார்? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி கோவையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தேர்வு நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை, வாக்கு கேட்டு உங்களிடம் வந்து நிற்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக படித்துவிட்டு தற்போது தேர்வுக்காக வந்துள்ளோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. உங்களின் குறைகளை தீர்க்க வந்துள்ளோம்.

ஜெயலலிதாவின் காலில் விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவரின் கார் டயரில் விழுவதை எல்லாம் என்னவென்று கூறுவது? ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடு போட்டால் பரவாயில்லை. அந்த ஹெலிகாப்டரின் நிழலை கும்பிடுகிறார்கள்.
டாஸ்மாக் தமிழகத்தை ஒரு தாய் போன்று ஆட்சி செய்வதாக கூறுகிறார் ஜெயலலிதா. எந்த தாய் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தனது மகன்களை குடிக்கச் சொல்வார்? ஊழல், லஞ்சம், மது ஆகியவை தான் தற்போது பிரச்சனையாக உள்ளது.
மாநிலத்தை ஆளும் ஜெயலலிதாவுக்கும், ஆட்சி செய்த கருணாநிதிக்கும், ஆள விரும்பும் விஜயகாந்துக்கும் என்ன பொருளாதார கொள்கை உள்ளது. 94 வயதில் ஒருவரும், 70 வயதில் ஒருவரும் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தையே மாற்றுவோம்.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக