சனி, 16 ஏப்ரல், 2016

BBC :ஜப்பானில் 7.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து இரண்டு தடவை. 7.4 and 7.0 Earth quake strikes Japan

7.4  and 7.0 Earth quake strikes Japan; rescuers try to free residents
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் குமமோட்டா-ஷி என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன. இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர். கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் கூறுகிறது. இப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிந்ததில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று ஜப்பானின் கியூசூ தீவுப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆகப் பதிவானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக