வெள்ளி, 15 ஏப்ரல், 2016

ஜெயலலிதா: என் ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்திருக்கிறது ... மக்களுக்காக நான். மக்களால் நான்


அருப்புக்கோட்டை : இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக., பொதுசெயலர் ஜெ., கருணாநிதியை கடுமையாக தாக்கினார்.இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் மேலும் பேசியதாவது:
வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சியின் பயன் அனைவரும் அடைய வேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை தலைநிமிர செய்வதே அ.தி.மு.க.,வின் லட்சியம். கல்வி, மருத்துவம் விவசாயம் உள்ளிட்டவைகளில் தமிழகம் வளர்ச்சி பெற செய்வதே அ.தி.மு.க.,வின் லட்சியம். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருண்ட தமிழகம் என்ற நிலை மாறி, மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.  தொழில் வளர, விவசாயம் விருத்தி அடைந்திட, தமிழக உரிமைகள் நிலை நாட்ட அமைதி , வளர்ச்சி பாதையில் பீடு நடை போட எங்களை வெற்றி பெற செய்யுங்கள// அப்போ 5 வருஷமா இதுக்கெல்லாம் ஒன்னும் கிழிக்கலேன்னு அவரே ஒத்துகுராறு. சாராயக் கடைகளை பெருக்கிறதிலேயே நேரத்தை செலவு பண்ணினா மத்ததுக்கு நேரம் இருக்காது.


தமிழகத்தின் வளர்ச்சியே முக்கியம். மக்களுக்காக நான். மக்களால் நான் என்பதன் அடிப்படையில் தான் எனது வாழ்வு. அம்மா திட்டங்கள் பல வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டம், விவசாயிகள் புரட்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் எதிர்பார்க்காத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உங்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து வைத்துள்ளேன். 54 தலைப்புகளின் கீழ் அறிவிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவோடு மீண்டும் ஆட்சியேற்றதும் இன்னும் பல மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் .

மதுக்கடைகள் குறித்து எந்த கட்சி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் கருணாநிதிக்கு அந்த அருகதை கிடையாது. அவர் தான் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தவர். அவர் மது விலக்கு குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பாகும். நாங்கள் படிப்படியாக மது விலக்கை கொண்டு வருவோம். 1991 ல் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்தோம். வழக்கு தொடர்ந்தோம். மத்திய அரசுக்கு அழுத்தம் கெடுத்தோம் .இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இதன் படி கோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது .

கச்சத்தீவு தாரை வார்க்க கருணாநிதி உடந்தையாக இருந்தார். இதனை அவர் வேடிக்கை பார்த்தார். ஒவ்வொரு நாளும் யோசித்து பாடுபடுகிறேன், மக்களுக்காகவே நான் மக்களுக்காக நான். உங்கள் வாழ்க்கை தரம் உயரும் வகையில் நான் செயல்படுத்துவேன். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத கற்பனை செய்ய முடியாத திட்டங்களை இந்த தாயாகிய நான் உங்களுக்காக செய்வேன். எங்களின் சாதனைகளை விடிய, விடிய சொல்லி கொண்டிருக்கலாம். அனைத்து மக்களும் என் மக்கள், அனைத்து தொகுதிகளையும் நான் சமமாக பாவிக்கிறேன். திறமை வெற்றியை கொடுப்பது போல், எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்துள்ளது. மின் வெட்டு இல்லாத நிலை தொடர, தொழில் வளர, விவசாயம் விருத்தி அடைந்திட , தமிழக உரிமைகள் நிலை நாட்ட அமைதி , வளர்ச்சி பாதையில் பீடு நடை போட எங்களை வெற்றி பெற செய்யுங்கள. இவ்வாறு ஜெ., பேசினார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக