சனி, 16 ஏப்ரல், 2016

கோவில்பட்டி....வைகோ போட்டியிடுகிறார்..மதிமுக தொகுதிகள் விபரம்...

சென்னை : மதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டு நேற்று மாலை முதல் இரவு வரை நேர்காணலும் நடத்தப்பட்டது.  இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் இன்று காலையில் தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கினார். அப்போது மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வைகோ வெளியிட்டார். மதிமுக வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நாகை திருவள்ளுவனும் பம்பரம் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். மதிமுக வேட்பாளர் பட்டியல்: 
1. கோவில்பட்டி - வைகோ
 2. திருப்போரூர் - மல்லை சத்யா 
3. காரைக்குடி - செவந்தியப்பன்
 4. ஆலங்குடி - மருத்துவர் சந்திரசேகரன் 
5. செஞ்சி - ஏ.கே. மணி 
6. சங்கரன்கோயில் - சதன் திருமலைக்குமார் 
 7. குளச்சல் - சம்பத் சந்திரா
 8. திருச்சி மேற்கு - ரொகையா 
9. அண்ணாநகர் - மல்லிகா தயாளன் 
10. தூத்துக்குடி - பாத்திமா பாபு 
11. மதுரை தெற்கு - கோபிநாதன் 
12. ஆற்காடு - உதயகுமார் 
13. ஆயிரம் விளக்கு- ரெட்சன் அம்பிகாபதி 
 14. கிணத்துக்கடவு - ஈஸ்வரன் 
15. நாகர்கோவில் - ராணி செல்வி 
16. பாளையங்கோட்டை - நிஜாம் 
17. உசிலம்பட்டி - பாஸ்கர சேதுபதி
 18. சாத்தூர் - ரகுராமன் 
19. ஆவடி - ஆந்திரிதாஸ் 
20. துறைமுகம் - முராத் புகாரி 
21. பூந்தமல்லி- கந்தன் 
22. ஈரோடு மேற்கு - முருகன் 
 23. ஜெயங்கொண்டம் - கந்தசாமி
 24. முதுகளத்தூர் - பொ. ராஜ்குமார் 
 25. பல்லடம் - க. முத்துரத்தினம் 
26. அரவக்குறிச்சி - கோ. கலையரசன்
 27. சிங்காநகல்லூர் அர்ஜூன ராஜ் 
28. தாராபுரம் - வழக்குரைஞர் நாகை. திருவள்ளுவன் ( தமிழ் புலிகள் கட்சி) 
29. பல்லாவரம் - கி. வீரலட்சுமி பி.ஏ. ( தமிழர் முன்னேற்றப்படை) முன்னதாக அண்ணாநகரில் பிரச்சாரத்தை தொடங்கிய வைகோவிற்கு ஏராளமானோர் பூரணகும்ப மரியாதை அளித்தனர்.

Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக