வெள்ளி, 15 ஏப்ரல், 2016

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது மத்திய அரசு! எத்தனையாவது?

வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்த தொழில் அதிபர் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர். அவர்களின் பரிந்துரையை ஏற்று வெளியுறவு அமைச்சகம் விஜய் மல்லையாவின் பாஸ்போர்டை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், விஜய் மல்லையா ரூ. 4,000 கோடி ரூபாயை வங்கிகள் கூட்டமைப்புக்கு திருப்பி தர முன்வந்தார், எனினும் அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விஜய் மல்லையாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  puthiyathalaimurai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக