வெள்ளி, 15 ஏப்ரல், 2016

வேட்பாளர்கள் தேர்வு எதை மையமாக வைத்து நடந்தது? இளங்கோவன் பதில்

இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் வேட்பாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. 41 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் என கூறினோம். வெற்றி வாய்ப்பு பற்றி விவாதித்தோம். இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றார்.
 கேள்வி: வேட்பாளர்கள் தேர்வு எதை மையமாக வைத்து நடந்தது?

பதில்: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் கிடைக்கும். யார் உண்மையான காங்கிரஸ் கட்சிக்கு உழைக்கக் கூடியவரோ, அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
கேள்வி: தேர்தல் பிரச்சாரங்களுக்கு ராகுல், சோனியா வருவார்களா?<பதில்: நிச்சயமாக ராகுல், சோனியா ஆகியோர் வருவார்கள். திமுக தலைவர்களோடு அவர்கள் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளது.
கேள்வி: உங்கள் கட்சி பிரச்சாரம் எப்போது ஆரம்பிக்கும்?
பதில்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டவுடன் பிரச்சாரம் ஆரம்பிக்கும். மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

கேள்வி: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.
;பதில்: திமுக - காங்கிரஸ் - முஸ்லீம் லீக் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.
;திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்ய 27 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரை தேர்வு செய்துள்ளனர். அந்த பட்டியலை இளங்கோவன் கட்சி மேலிடத்தில் கொடுத்துள்ளார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக