சனி, 15 நவம்பர், 2014

அரசு வக்கீல் ஆச்சார்யா : ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் ! வழக்கை எப்படி ஒத்தி வைக்கலாம் என்று அவர்களிடம் படிக்கலாம்.

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் முன்பு ஆஜரான அரசு வக்கீல் ஆச்சார்யா புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழக்கில் இருந்து தாம் விலகியதற்கு பாஜக தந்த நெருக்கடியே காரணம் என புகார் தெரிவித்துள்ளார். பாஜக தலைமை உத்தரவின் பேரில், கர்நாடக பாஜக அரசு நெருக்கடி கொடுத்தது என ஆச்சார்யா குற்றஞ்சாட்டியுள்ளார். தாம் எழுதியுள்ள புத்தகத்தில் பாஜக மீது ஆச்சார்யா புகார் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஆதரவாளர்கள் தமக்கு நேரில் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆச்சார்யா விலகிய பிறகு பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஒத்திவைப்புச் சட்டம் ஒரு வழக்கை ஒத்திவைக்கச் செய்வது எப்படி என்பது பற்றி புத்தகம் எழுதலாம் என ஆச்சார்யா கூறியுள்ளார். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது பற்றி ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். புத்தகம் எழுதினால் அதற்கு ஒத்திவைப்புச் சட்டம் என்று பெயர் வைக்கலாம், மேலும் ஒத்திவைப்புகள் பற்றி விளக்கி எழுதினால் குற்றவாளிகள் பலர் தப்பிவிடக் கூடும் என கூறியுள்ளார். ஜெயலலிதா வழக்கில் ஆஜரானபோது பல புதிய தகவல்களைக் கற்றுக் கொண்டேன்  மேலும் 2011-ல் ஜெ. முதல்வரான பிறகு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் போக்கு மாறிவிட்டது என பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

தீயாகப் பரவும் Kiss போராட்டம் முத்தம் கொடுப்பதை பெருசுப்படுத்தாதீங்க...

நாங்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்? ஒழுக்கத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை'' என்று மதவாத அமைப்புகளுக்கு எதிராக அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர் கல்லூரி இளைஞர்கள். நாடு முழுவதும் பரவிவரும் 'அன்பின் முத்தம்’ (கிஸ் ஆஃப் லவ்) போராட்டம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளதுடன், கடுமையான எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது!

சமசுகிருதமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்: வைகோ

மத்திய அரசு இந்தி மொழி திணிப்பு, சமசுகிருதமயமாக்குதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அதன் நிர்வாக அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்காதன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், ‘கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தற்போது கற்பிக்கப்படும் ஜெர்மன் மொழியை அறவே நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக சமசுகிருத மொழியைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் அக்டோபர் 27-ல் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது என்ற நோக்கத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவிங்க இதைதான் செய்வாங்கன்னு எல்லோருக்கும் தெரியும். கூட்டணி சேர்ந்து கோவிந்தா போடுகையில் எங்கே போச்சு உமது வீரம் வாய் சவடால்? குத்துது குடையுதுன்னா ? 

பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளே விபசாரம் லஞ்சம் மற்றும் தாதாக்கள் உதவியோடு அடாவடிகள்.

பெங்களூரு: கர்நாடக மாநில பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக பெண் கைதிகள் புகார் கடிதம் எழுதியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து 15 நாட்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பெண் கைதிகள் ஒரு குழுவாக சேர்ந்து புகார் கடிதம் எழுதி கையெழுத்திட்டு, கர்நாடக தலைமை நீதிபதிக்கு, சிறை வளாகத்தில் உள்ள கைதிகள் குறைதீர்க்கும் பெட்டியில் போட்டு உள்ளனர். பரப்பன அக்ரஹாரா சிறையில் விபச்சாரம்: விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு சிறையில் விபச்சாரம் அதில், சிறைக்காவலர்களே இதில் ஈடுபட்டு, ஆண் கைதிகளை, பெண் கைதிகளுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதற்காக ரூ.300 முதல் 500 வரை சிறைக் காவலர்கள் வசூலிப்பதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வடிவேலு சார் நீங்க காமடியனா? கதாநாயகனா?.....தெரியல்லையே?

எலி' படத்தில் நாயகனாகவும், விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் படத்தில் காமெடியனாகவும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் வடிவேலு.
நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, 'தெனாலிராமன்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். வடிவேலு நாயகனாக நடித்த 'தெனாலிராமன்' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், வடிவேலுவிடம் பல படங்களில் காமெடியனாக நடிக்கும்போது "இனிமேல் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன்." என்று கூறிவருவதாக தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், 'தெனாலிராமன்' இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், அப்படத்தின் தலைப்பு 'எலி' என்றும் தெரிவித்தார் வடிவேலு.

ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும்? ராஜேந்திர சோழனே பார்ப்பன அடியாள்தான்!

images
16-11-2014 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ராஜேந்திர சோழனுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விழா எடுத்ததைக் குறித்து, பெ. மணியரசன் அவர்கள்:
“சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அம்பேத்கர் விழாவைக் கொண்டாடினார்கள். ஆனால், இவர்களின் பல்வேறு கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். பிறகு எப்படி அவர்கள் அம்பேத்கரை கொண்டாடுகிறார்கள்? அதாவது அவரின் விழாவைக் கொண்டாடி தங்களுக்கு பெருமை தேடிக் கொண்டார்கள்.
ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் இவர்கள் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக அறிவிக்க போராடுவார்களா?” என்று கேட்டு இருக்கிறார்.
ஒரு அம்பேத்கரிஸ்ட்டை போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குற்றம் சாட்டுவது இருக்கட்டும். இவரே சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் சின் அவதூறை நியாயப்படுத்துவது போல், ‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார். அதனால் அவர் இந்துத்துவ ஆதரவாளர்’ என்று அவதூறு செய்தவர் தானே.
அப்படியிருக்க இப்போது மட்டும் எப்படி டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவ எதிர்ப்பாளராக தெரிகிறார்?

ராமதாஸ்: அன்பை வெளிபடுத்த முத்தம் கொடுப்பதா? பின்னே அரிவாளையா தூக்கணும்?


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘அன்பு முத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அரங்கேற்றியுள்ள செயல் அதிர்ச்சியளித்தது மட்டுமின்றி, கலாச்சாரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கோழிக் கோட்டில் தேனீர் விடுதி ஒன்றில் சில இளைஞர்களும், இளம்பெண்களும் முத்தமிடுவதை அங்குள்ள சில அமைப்புகள் கண்டித்தன. கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.ஜாதி தலைவர்களுக்கு  பயம் எங்கே நம்ம வன்னிய பிள்ளைங்க ஜாதி விட்டு ஜாதி மாறி முத்தம் குடுத்துருவாய்ங்களோ?

Chennai IIT Kiss of Love கட்டிப்பிடித்து முத்தமிட்ட சென்னை ஐஐடி மாணவர்கள் !

சென்னை ஐஐடியில் மாணவர்களில் ஒரு தரப்பினர் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாச்சாரம் என்ற பெயரில் தங்களது சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கிஸ்
ஆஃப் லவ்" என்ற தலைப்பில் அன்பை வெளிப்படுத்தும் முத்தமிடும் போராட்டம் நடத்தினர். இதன்படி மாணவ, மாணவியர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டதுடன் முத்தமிட்டும் கொண்டனர். கட்டிப்பிடித்து முத்தமிட்ட சென்னை ஐஐடி மாணவர்கள் இதற்கு ஒரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர். கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரு உணவகத்தில் முறையற்ற செயல்கள் நடப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி ஒளிபரப்பியதும், அந்த உணவகத்தை சிலர் அடித்து நொறுக்கினர். அதனைக் கண்டிக்கும் வகையில், கிஸ் ஆஃப் லவ் புரடெஸ்ட் என்ற பெயரில் ஒரு இயக்கம் துவங்கப்பட்டது.

சத்தீஷ்கர் கருத்தடை மரணம், மயக்க மருந்தில் Zinc phosphide எலி விஷம் !

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து விஷத்தன்மை கொண்டதாக இருந்ததாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிலாஸ்ப்பூரில் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உடல்நலக்குறைவால் அப்பாவிப் பெண்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற 48 பேர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், அறுவை சிகிச்சைக்கு முன்னர் பெண்களுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து விஷத்தன்மை கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எலி விஷம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜிங்க் பாஸ்ஃபைட் (Zinc phosphide) அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய மருந்துகளில் இருந்தது என்று சட்டீஸ்கர் சுகாதார துறை நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தணிகாச்சலம் கொலை! மணல் மாபியாக்கள் ? நீர்வழி பாதைக்காக போராடிய சமுக ஆர்வலர்......

வேலூர்: மணல் திருட்டை தடுத்தவர்களை மாப்பியாக்கள் கொலை செய்த செய்திகள்தான் இதுவரை அதிகமாக வெளி உலகத்திற்கு சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏரி தண்ணீர் வரும் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வந்த வேலூர் மாவட்டம், மாதனூர் கிராமத்தைச் சேர்ந்த தணிகாச்சலம் கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மக்களை பீதியடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தைப் பற்றி பேசிய தணிகாச்சலத்தின் உறவினர் அசோகன், ’’ தணிகாச்சலம் பி.டெக் லெதர் டெக்கானாலஜி முடிச்சிட்டு, ஒரு தனியார் கம்பெனியில வேலைப் பார்த்தார். வேலையில திருப்தி இல்லாம  சொந்த ஊருக்கு வந்து, ஒன்னரை வருஷம் சொந்தமா புங்கம் எண்ணெய் எடுக்குற ஆயில் மில் நடத்தினார். அதுல எதிர்பார்த்த அளவுக்கு லாபமில்லாததால் மில்லை மூடிட்டு, சென்னைக்கு வேலைக்கு போனார். வேலை நேரம் போக மற்ற நேரத்துல, பள்ளி மாணவர்களுக்கும், பி.டெக் மாணவர்களுக்கு இலவசமா டியூசன் எடுத்தார்.

ஈரான்:வாலிபால் விளையாடியதற்காக பெண் Ghoncheh Ghavami க்கு சிறை!


The international volleyball federation (FIVB) announced its decision to ban Iran from hosting international tournaments a week after a British-Iranian woman, Ghoncheh Ghavami, was reportedly jailed by a Tehran court for trying to attend a men’s match.ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட 2012ம் ஆண்டு முதல் அரசாங்கம் தடை விதித்துள்ளது. 'ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கத்தான் இந்தத் தடை’ என்கிறது ஈரான் அரசாங்கம். இதை எதிர்த்து பந்தும் கையுமாகக் களத்தில் குதித்திருக்கிறார் ஒரு பெண்.
லண்டனைச் சேர்ந்த கோன்ச்சே கவாமி, இப்போது ஈரானில் வசித்துவருகிறார். லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்த கவாமி, ஆண் பெண் இருவருக்கும் விளையாட்டுத் துறையில் சம உரிமை தர வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்து வருகிறார். ஜூன் மாதம் 20ம் தேதி ஈரானில் உள்ள ஆசாதி விளையாட்டு அரங்கில் நடந்த வாலிபால் லீக் போட்டியின்போது, தனது நண்பர்களுடன் இணைந்து ஆண் பெண் இருவருக்கும் விளையாட்டு உரிமை சமமாக இருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். போலீஸார் இவரையும் இவர் குழுவினரையும் தாக்கினர். பிறகு விடுவித்துவிட்டாலும் உலகின் பல பகுதிகளில் ஈரான் போலீஸின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

சுனந்தாவின் உடலில் விஷம் கண்டு பிடிக்கபட்டுள்ளது! சசிதரூரின் மனைவி மரணத்தில் சந்தேகங்கள் வலுக்கிறது?

டெல்லி,நவ.14 (டி.என்.எஸ்) மர்மமான முறையில் மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்தில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கும் டெல்லி போலீஸ், அது குறித்த விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறது.சுனந்தாவின் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் குடலுக்குள் விஷம் படிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு தடவை பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்த பிறகும், அந்த விஷம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை.அந்த விஷத்தை அவரே சாப்பிட்டாரா? அல்லது அவருக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா? என்பது தெரியவில்லை. அவர் அறையில் கிடைத்த பொருட்கள் மற்றும் செல்போன்கள் மூலம் இதில் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

முல்லை பெரியாறில் 140 அடி நிரம்பியது! 38 ஆண்டுகளில் முதல் முறை!

வட கிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகத்தின் முக்கிய அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த 38 ஆண்டுகளில் முதல் முறையாக 140 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் டெல்டா மாவட்ட விவசாயத்துக்கு நீர் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 101.80 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணையில் கடந்த ஆண்டு 79.16 அடி நீர் மட்டம்தான் இருந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையான பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 85.78 அடியாக உயர்ந்துள்ளது.

வண்டலூர் பூங்காவிலிருந்து 2 புலிகள் தப்பியோட்டம்?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 புலிகள் தப்பி விட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அதை உயிரியல் பூங்கா அதிகாரிகள் மறுத்தனர்.
புலிகள் தப்பிய செய்தி காட்டுத் தீ போல பரவியதால் அந்தப் பகுதியில் கடும் பீதி நிலவுகிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கே சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் இயற்கைச் சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கூண்டுகளில் புலிகள் அடைக்கப்படுகின்றன. அவை சுற்றித் திரிய பெரிய சுற்றுச் சுவருடன் கூடிய திறந்த வெளி வளாகமும் உள்ளது.

அமைச்சர் ஸ்மிருதி :சமஸ்கிருதம் கட்டாயம்! மூன்றாவது மொழி அந்தஸ்து சமஸ்கிருதத்துக்கே! கே வி பள்ளிகளில் படிக்கும் 70 ஆயிரம் மாணவர் பாதிப்பு!

புதுடில்லி : 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனால், 70 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கே.வி.எஸ்., என, அழைக்கப்படும், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின், ஆளுனர்கள் குழும (போர்டு ஆப் கவர்னர்ஸ்) கூட்டம், அதன் தலைவரான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கடந்த மாதம், 27ம் தேதி நடைபெற்றது.  தாய் மொழி படிப்பதோடு ஆங்கிலம் மற்றும் ஒரு சர்வேதேச மொழி படித்தால் மட்டுமே இன்றைய உலகமயமாக்கலில் வேலை பெற முடியும். பிரெஞ்சு, German போன்ற மொழிகளை படிப்பது நல்லது. இது எல்லோருக்கும் வாய்ப்பு கிடைபதில்லை. எனவே வாய்ப்பு கிடைப்பவர்கள் வீனா போன ஹிந்தி சமஸ்கிருதம் தவிர்த்து உலக மொழிகளை தாய் மொழியுடன் படிக்க வேண்டும்.காட்டுறான் காட்டுறான் சுயரூபத்தை காட்டுறான்!

வெள்ளி, 14 நவம்பர், 2014

கமலஹசன்: கதை திருட்டை தேடி தேடி கண்டு பிடிக்கும் ரசிகன் வளரவே மாட்டான்!

அதானே திருட்டு டிவிடியையும் தேடி தேடி கண்டுபிடிக்கும் சினிமாகாரனும்  வளரவே மாட்டான்யா? ''
ஆனா, இப்போ எந்தப் படம் வந்தாலும் காப்பி, இன்ஸ்பிரேஷன்னு ஒரே சர்ச்சையா இருக்கே! இன்ஸ்பிரேஷன் எப்போ காப்பி ஆகுது? அதைத் தவிர்க்க முடியாதா?''
''சினிமா பண்றவன் பண்ணிட்டே இருக்கான். அவன் எங்கே இருந்து என்ன காப்பி அடிக்கிறான்னு சிலர் தேடிட்டே இருக்காங்க. அதை நானும் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒரு பிராயத்தில் வரும். ஜெயகாந்தன் கதையைப் படிச்சுட்டு, 'இந்த மாதிரி படம் எடுக்கணும்’னு ஆரம்பிப்பேன். இது சினிமாவில் மட்டும் அல்ல... 'டைம்’ பத்திரிகையும் 'நியூஸ் வீக்’ பத்திரிகையும் கிட்டத்தட்ட ஒரே தலைப்போடு வரும். அது ஒருவகையான உத்வேகம். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் போட்டி.
ஒரு விஷயம்... நான் இதுவரை வெளியே சொன்னது இல்லை. இப்போ சொல்லலாம். சுஜாதா இப்போ இருந்தாலும் கோவிச்சுக்க மாட்டார். 'தினமணி கதிர்’ல 'சொர்க்கத் தீவு’னு ஒரு கதை எழுதிட்டு இருந்தார் சுஜாதா. அந்தக் கதை பாதியில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான நாலைஞ்சு பேரில் நானும் ஒருவன்.

நீதிமன்றினால் தேடப்படும் பாலியல் குற்றவாளி மத்திய இணை அமைச்சர் ! Nihal Chand Meghwal Summoned to Court in Rape Case


புதுடில்லி, நவ.12_ ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்த பெண், 2012 இல் நிகல் சந்த் மேக்வால் மற்றும் அவரது கூட்டா ளிகள், தன்னை பாலியல் வன்முறை செய்ததாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறை விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு நியா யம் கிடைக்காததால், அவர், ஜெய்ப்பூர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான அமைச்சரவை யில், ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்த மேக்வால், வழக்கு விசாரணையில் ஆஜரா காததால், அவரைத் தேடி கண்டுபிடிக்குமாறு, காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட் டது.

அமெரிக்க சிறுவன் முற்பிறவி விபரங்களை தெளிவாக கூறுகிறான்.!அமெரிக்க ராணுவத்தில் மரைன் படைவீரனாம்,


அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள்.
இப்போது அவர்  விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவனாக உள்ளார்.. ஆண்ட்ரு  தனது  கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான்.
லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

அர்ச்சனா : கோவா திரைப்பட விழா! ரவுடிசத்தை படம் எடுத்தால் கௌரவம் எப்படி கிடைக்கும்?

இடது: திரைப்பட விழா லோகோ | வலது: நடிகை அர்ச்சனா
இடது: திரைப்பட விழா லோகோ | வலது: நடிகை அர்ச்சனா
சர்வதேச பட விழாக்களில் நல்ல படைப்புகளை அரங்கில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆராதிப்பது, அந்தக் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டுமின்றி, அந்தப் படைப்புகளின் மொழி பேசும் ரசிகர்களும் பெருமிதம் கொள்ளும் தருணங்கள். ஆனால், அத்தகைய வாய்ப்புக்கு தமிழ் சினிமா வகை செய்கிறதா என்பது கேள்விக்குறி.
சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா எனப் பல்வேறு நகரங்களிலும் ஆண்டுதோறும் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் களைக்கட்டுகின்றன. எனினும், மத்திய அரசின் அங்கீகாரத்தோடு கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாதான் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பிரதிபலிப்பாக கவனிக்கப்படுகிறது.

Palm Oil க்காக காடுகள் அழிக்கப்படுகின்றன வனவிலங்குகள் தீயில் கருகி காபரேட்டுக்களுக்கு காசு தருகின்றன?


பனை எண்ணெய் பயங்கரம்!
ந.கீர்த்தனா, ஓவியம்: ஹாசிப்கான்
காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்!

சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ முடிவு! 2ஜி: ஸ்வான் டெலிகாம்- எடிசலாட் விவகாரம்?

டெல்லி: ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம் அபுதாபியின் எடிசலாட் நிறுவனத்துக்கு தனது நிறுவன பங்குகளை விற்பனை செய்ததற்கு அனுமதி அளித்தது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏற்கெனவே ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதாவது தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அவர் கொடுத்த நெருக்கடியால் ஏர்செல் நிறுவனம் தனது பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றது
சன் டைரக்ட்.. இதனைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன், சில துணை நிறுவனங்கள் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

நடிகை மம்தா கைது ! கென்யாவில் போதை பொருள் கடத்தில் சந்தேகத்தில் ....

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி கைது செய்யப்பட்டார். மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்தவர் நடிகை மம்தா குல்கர்னி (வயது 42). இவர், தமிழில் 1991-ம் ஆண்டு, ஷோபா சந்திரசேகர் இயக்கிய ‘நண்பர்கள்’ படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இந்தி, வங்காளம், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார். இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். கடந்த 1993-ம் ஆண்டு, ஆங்கில சினிமா பத்திரிகை ஒன்றில் அரை நிர்வாண ‘போஸ்’ கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் இந்தியில் மிகவும் கவர்ச்சியாக துணிச்சலுடன் நடித்த ஆஷிக் அவாரா, சாப்சே படா கிலாடி, கரண் அர்ஜூன் படங்கள் பேசப்பட்டன. கடைசியாக 2001-ம் ஆண்டு தேவ் ஆனந்தின் ‘சென்சார்’ படத்தில் நடித்தார்.

சேலம் மாணவி தேஜாஸ்ரீ கொலையில் ஒரு வாலிபர் சிக்கினார்

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலையில் வாலிபர் ஒருவர் சிக்கினார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் அழகாபுரத்தை அடுத்த பெரிய புதூர் வன்னியர் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). இவர் சேலம் சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (38).
இவர்களுக்கு ஹரிணி (20), தேஜாஸ்ரீ (14) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இதில் ஹரிணி பி.இ. முடித்து விட்டு சென்னையில் கடந்த ஒரு ஆண்டாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ராகுல் : மோடி துடைப்பத்துடன் போஸ் கொடுக்கிறார் ஆனால் மதவாத விஷத்தை பரப்புகிறார்!

தில்லியில் ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழாவில், உறுதிமொழி ஏற்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர்ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமர் நரேந்திர மோடி மதவாத விஷத்தைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. ஜவாஹர்லால் நேருவின் சுதந்திர இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்போரை எதிர்த்துப் போராடுமாறும் தனது கட்சியினரை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

சதீஷ்கார் டாக்டர் கைது ! Doctor who operated on 83 women in police custody


சத்தீஸ்கரில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது, 12 பெண்கள் இறக்க காரணமாக கருதப்படும், அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட டாக்டர் ஆர்.கே.குப்தா நேற்று கைது செய்யப்பட்டார்.நண்பர் வீட்டில் மறைந்திருந்த அவரை, போலீசார் பிடித்துச் சென்றனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் துருப்பிடித்தவை அல்ல; அறுவை சிகிச்சையிலும் எந்த குறைபாடும் இல்லை; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்கப்பட்ட மருந்தில் தான் கோளாறு இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.nakkheera.in

ஸ்டாலின் அணியோடு கலைஞர் அணி போட்டியாம்? உட்கட்சி பூஸல் நம்புறதா நம்பாம விடுறதா? தெரியல்லையே?

உட்கட்சி தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில், கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னையில் உள்ள, 4 மாவட்ட செயலர்கள் பதவியையும், தேர்தல் நடத்தாமலேயே, தன் ஆதரவாளர்கள் கைப்பற்ற வேண்டும் என, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். அவரது திட்டத்தை முறியடிக்கும் வகையில், மாவட்ட செயலர் பதவிகளுக்கு, முறையாக தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என, கருணாநிதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால், இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும், தீவிரமான மல்லுக்கட்டு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க., உட்கட்சி தேர்தலை, இம்மாத இறுதிக்குள் முடித்து விட்டு, அடுத்த மாதம் கட்சி பொதுக்குழுவை கூட்டி, மாநில நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு முடிவெடுத்து உள்ளனர். ஏற்கனவே, கட்சி சீரமைப்புக் குழு பரிந்துரையின் பேரில், நிர்வாக வசதிக்காக, 35 மாவட்டங்களாக இருந்தது, 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் நோக்கோடு, உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் தான், பதவியை பிடிக்க கட்சிக்குள் போட்டா போட்டி நடக்கிறது.  ஒரு ஜனநாயக கட்சியில்  இம்மாதிரி விஷயங்கள் நடப்பது சகஜம். இதை பூதாகரமாக்கி, பலூன் போல் ஊதி பெரிதாக்கி, பயம் காட்டுவது தேவை இல்லாதாது. வேண்டும் என்றால், அ தி மு க என்ற துருப்பிடித்த இரும்பு கோட்டைக்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பாருங்களேன்.அங்கு ஒரு ஜெ(யில்)லலிதாவுக்கு  முன்னால்  அடிமை கூட்டம்?

14 சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிய ஒரு வயதே ஆன குட்டி யானை ! படங்களுடன்

தென்னாப்ரிக்காவின் வனப்பகுதியில் ஜாம்பியா என்ற இடத்தில் ஒரு வயதே ஆன குட்டி யானை, தன்னை கோரப் பசியுடன் தாக்கிக் கொல்ல முயன்ற 14 சிங்கங்களின் பிடியில் இருந்து போராடி தப்பியிருக்கிறது. வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற பயணிகளால் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.ஒரு குட்டி யானையை 14 சிங்கங்கள் சுற்றி வளைத்து தாக்குகின்றன. ஒரு சிங்கம், அந்த குட்டி யானையின் மீது ஏறி அதனை கடித்துக் குதறுகிறது. முதலில் சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறும் குட்டி யானை, பிறகு சினிமா ஹீரோ போல வீறுகொண்டு எழுந்து

வியாழன், 13 நவம்பர், 2014

திருமாவளவன் ஆர்ப்பாட்டம்:மும்பை, பெங்களூரு ,ஹைதரபாத் ,விஜயவாட. இடுக்கி ஆகிய இடங்களில் ....

The brutal murders took place in Jawkhede Khalsa village on the night of October 20, and the mutilated bodies of Sanjay Jadhav, 49, his wife Jayashree, 46, and their son Sunil, 22, were found dumped in a village well the next morning (October 21), deputy superintendent of police (DSP) Lakhmi Gautam said.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மராட்டிய மாநிலம், அகமது நகர் மாவட்டம், ஜலகிபே எனும் கிராமத்தில் கடந்த அக்டோபர் 20 அன்று தலித்துகள் மூன்று பேர் சாதிவெறியர்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  ஜாதவ் எனும் தலித் வகுப்பைச் சார்ந்த மூவரும் தாய், தந்தை மற்றும் மகன் என ஒரே குடும்பத்தினர் ஆவர்.  தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தனியே வசித்து வந்த அவர்களை நள்ளிரவில் சென்று துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.சுமார் ஒரு வார காலத்திற்குப் பின்னரே அவர்களின் உடற்கூறுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். படுகொலை நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் காவல்துறையினர் ஒரே ஒரு கொலையாளியைக்கூட அடையாளம் காணவில்லை என்பது வெட்கக்கேடானதாகும்.குற்றவாளிகள் யார் என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை என்று காரணம் சொல்லி காவல்துறை காலந்தாழ்த்தி வருவதுடன் விசாரணை என்ற பெயரில் படுகொலையானவர்களின் உறவினர்களுக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு கதைகளால் நடிகரும் இயக்குனரும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர்?

நடிகர்களே திருட்டு கதைகளை இயக்குனர்களுக்கு சொல்வதும் ,இயக்குனர்களே திருட்டு கதைகளை ஏதோ சொந்தத கதை போல முழக்குவதும் இனி பிரச்சனைதான் , திருட்டு டிவிடி யை விட இது இவர்களை அதிகமாக பாதிப்பதாக தெரிகிறது , ஏனெனில் முக்கால் வாசி கதைகள் திருட்டு கதைகள் தானே. ஆனால் மாட்டிக்கிறது அரிது. கத்தி கோஷ்டி மட்டும் நன்றாக மாட்டி கொண்டது .விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா, ஸ்ரீதேவி நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கத்தி திரைப்படம் அதிக வசூல் செய்து விஜய்யின் இமேஜை தூக்கி நிறுத்தினாலும், ‘கதை திருட்டு’ என்கிற விமர்சனம் அவரை அதிகமாகவே பாதித்துவிட்டது.இனி நம் படத்திற்கு இப்படிப்பட்ட அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ! படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக இயக்குனர் சிம்புதேவனிடம் ”இந்த கதை உங்களுடையது தானே? கத்தி படத்திற்கு வந்தது போன்ற பிரச்சனை இந்த படத்திற்கு வராது என உறுதுமொழிகொடுங்கள்” என்று கேட்டாராமஇது என்னோட கதை தான் என்று விஜய்யிடம் சொல்லிவிட்டாலும், இப்படி கேட்டுவிட்டாரே என சிம்புதேவன்

காஞ்சி சங்கர ஆச்சாரியின் Rs 3,994 கோடி கறுப்புப்பணம் பற்றி ஊடகங்கள் மறைப்பதேன்? காசுக்காக சூத்திரர்களும் ஊமையாகினர்?

The Bangalore City Police are investigating a money laundering complaint against a financial consultancy and eight individuals for raising donations for a religious institution in Tamil Nadu.  / DH file photo only for representation கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!டந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நீலகண்டாச்சாரி சுவாமிகள் என்பவர் பெங்களூரு விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2011 – 2012-ம் ஆண்டில் தானும் தனக்கு வேண்டியவர்கள் எட்டு பேருமாக சேர்ந்து ஜெனிசிஸ் என்கிற நிதி அலோசனை நிறுவனத்திற்கு சுமார் 3,994 கோடிகள் அளவுக்கு நன்கொடை வசூலிக்க உதவியதாகவும், இதற்கான கழிவுத் தொகை இரண்டு சதவீதம் வர வேண்டியிருப்பதாகவும், அந்த தொகையை ஜெனிசிஸ் தர மறுத்து மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஜெனிசிஸ்? எதற்கான நன்கொடை வசூல் இது? – நீலகண்டாச்சாரியின் புகார் மனு மேலும் சில விளக்கங்களை அளிக்கிறது.
தங்களை காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தர்கள் என்று குறிப்பிடும் நீலகண்டாச்சாரி, தனக்கும் மடத்தில் உள்ள சிரீதரன் என்பவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கிறார். சிரீதரன் என்பவர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால் மடத்தின் சார்பாக 10,000 கோடி வரை நன்கொடை வசூலிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரீதரனை ஜெனிசிஸ் நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் நீலகண்டாச்சாரியும் அவரது எட்டு நண்பர்களும், மடத்திற்காக ஜெனிசிஸ் நிறுவனம் நன்கொடை வசூலித்துக் கொடுப்பது அதிலிருந்து இரண்டு சதவீதத்தை கழிவாக தமக்குக் கொடுப்பது என்று பேசி வைத்திருக்கிறார்கள்.  இந்த விவகாரம் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன.

ஸ்ரீ ரங்கம் இடைதேர்தலில் சு,சாமி களமிறக்கும் ஆசிர்வாதம் ஆச்சார்யா? ராஜாவுக்கு எதிராக சாட்சி சொன்னவர் ,

திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்று சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்ததால் காலியாகியுள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அத்தொகுதியில் பாஜக சார்பில் ஆசிர்வாதம் ஆச்சாரி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆச்சாரி வேறு யாருமல்ல, முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முன்னாள் உதவியாளராக இருந்தவர். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவுக்கு எதிராக திரும்பியவரும் கூட. கனிமொழி, ராசாவுக்கு எதிராக வலுவான சாட்சியம் அளித்தவரும் கூட இவர் ராசாவுக்கு திரும்பியதுமே, சுப்பிரமணியம் சாமி பக்கம் வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜகவிலும் சேர்ந்துள்ளார் ஆச்சாரி.
சாமியின் சிபாரிசால் பாஜகவில் சேர்ந்த ஆச்சாரி தற்போது அரசியல் வியூகக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

தோரியம் கொள்ளை பல லட்சம் கோடி! வைகுண்டராஜனை தமிழக அரசு பாதுகாப்பதன் மர்மம் அம்பலம்!

Judge Michael Cunha’s Judgement on the Disproportionate Assets case has brought to light very clearly that S.Vaikundarajan who is involved in large scale illegal mining in the southern districts of TamilNadu is Jayalalitha’s Benami.தேச துரோக குற்றவாளி ? யுரேனியத்துக்கு மாற்று தோரியமாகும். தோரியத்தின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். இதனால் அரசுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றம் தேசத்துரோகமாகும். இருப்பினும் வைகுண்டராஜனை தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.
தூத்துக்குடி: சிபிஐ அதிகாரிகள் ரெய்டு வரலாம் என்ற பயத்தில் வைகுண்டராஜன் வீடு, அலுவலகங்களில் 3 நாட்களாக வக்கீல்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வைகுண்டராஜன் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதே சமயம் தூத்துக்குடி துறைமுக கழக முன்னாள் தலைவர் சுப்பையாவுக்கு ரூ.7.5 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, சொத்துக்களை முடக்க சிபிஐக்கு தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் துறைமுக பொறுப்புக்குழு தலைவராக இருந்த சுப்பையா வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக சிபிஐ கடந்த 2012ம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இவர் சொத்து குவிப்பதற்கு தாது மணல் அதிபர் வைகுண்டராஜனும், அவரது சகோதரர் ஜெகதீசனும் உதவியதாக அவர்களை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ இறங்கியது. இருவருடைய முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டதால் திடீரென தலைமறைவாயினர்.

தமிழகமெங்கும் சகாயத்தின் அலை! கூட்டமாக திரளும் ஆதரவாளர்கள் ! Next CM ? why not?

சகாயத்துக்கு தமிழக அரசு தடைகள் போடப்போட அவருக்கான ஆதரவு மாநிலம் முழுவதும் பெருகிவருகிறது. தமிழகத்தின் கிரானைட், தாது மணல் கொள்ளைகளைப் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டு இரண்டு மாதங்கள் நெருங்கிவிட்டன. தமிழக அரசு சகாயத்தை இன்னமும் வேலை செய்யவிடாமல் நீதிமன்ற மேல்முறையீடு, நியமனத்தில் தாமதம் என்று பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பைத் தாண்டி தண்டனைத் தொகையான 10 ஆயிரம் ரூபாயையும் கட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் அரசு சாதனை(?) புரிந்துள்ளது.
இந்த நிலையில் புதிதாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது. ''சகாயம் தலைமையிலான குழு மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட், தாது மணல் கொள்ளைகளை மட்டும் விசாரித்தால்போதும். மற்ற மாவட்டங்களில் விசாரிக்கத் தேவை இல்லை'' என்ற சூழலை அரசு உண்டாக்கியது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள், விவசாய - தொழிலாளர் சங்கங்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து சகாயத்துக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளனர். மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சகாயத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன.

மகாராஷ்ட்ராவில் பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு நிரந்தரமா? மைனோரிட்டி அரசு எல்லாம் கலைஞர் அரசு ஆகுமா?

புதுடில்லி : 'சிவசேனா உடனான கூட்டணி தேவையே இல்லை' என, பாரதிய ஜனதா முடிவு செய்தால், பார்லிமென்டில் சட்டங்களையும், அரசியல் சட்ட திருத்தங்களையும் நிறைவேற்றுவதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பிரச்னைகளை சந்திக்கலாம் என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவசேனா:மகாராஷ்டிராவில், சிவசேனா - பா.ஜ., இடையே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து விட்டது. எதிர்க்கட்சியாக அமர சிவசேனா முடிவு செய்து விட்டது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பாக, சிவசேனா இன்னும் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை.   முதுகில் குத்திய செயல் பா ஜ கவின் செயல். மத்தியில் அசுர பலத்தில் ஆட்சியில் உள்ளதால்..மோடி பெயரை சொல்லி ஓட்டுவேட்டை ஆடிடலாம் என்கிற தப்புக்கணக்கே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அதனால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு பா ஜ கவின் ஆதிக்கம் அதிகம் இருக்க காண்கின்றோம். சிவசேனாவை வைத்துதான் பா ஜ க மும்பையில் வளர்ந்துள்ளது. இப்போது வேண்டுமானால் அதனை மறைக்கலாம்..அல்லது மறக்கலாம்..ஆனால் இதுவே உண்மை. பா ஜ கவின் வீழ்சிக்கு மும்பையே ஆரம்பமாக இருக்கும். ஏனென்றால் அவ்வளவு அரசியல் கூத்துகளும் இனி அங்கே நிறைவேறும். குதிரை பேரம் துவங்கப்பட்டு மத்தியில் அப்படி விலைக்கு வாங்கியவருக்கு உடனடியாக மந்திரி பதவி கொடுத்த முறை பா ஜ கவின் அருவருப்பான அரசியலுக்கு சிறந்த உதாரணம்..அதனால்தான் பா ஜ க சிவசேனையின் முதுகில் குத்திவிட்டு இப்போது தவிக்கின்றது...தவறான முன்னுதாரணம்..வீழ்ச்சிக்கு வித்திட்டுவிட்டது பா ஜ க..உறுதியாக..

இன்சூரன்ஸ் மசோதா: வெளிநாட்டு முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த...

பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இன்சூரன்ஸ் மசோதாவை, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதில், எதிர்பாராத முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதனால், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுவதில், காலதாமதம் ஆகுமோ என்ற சந்தேகம் எழுந்தள்ளது.கடும் முயற்சி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், கடும் முயற்சி செய்தது. அப்போதும் வழக்கம்போல எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ராஜ்யசபாவின் தேர்வுக்குழுவுக்கு, இந்த மசோதா, அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு முதலில் முட்டுக் கட்டை போட்டது அன்று எதிர்க்கட்சியாக இருந்த பா ஜ க தான். இன்று, அன்று எதிர்த்த அதே மசோதாவை நிறைவேற்ற முடியாது தவிக்கின்றது. மக்களுக்கு விரோதமான இந்த மசோதா நிறைவேறா விட்டால் ,ஒன்றும் கெட்டுவிடாது.

ஓமான் மன்னர் சுல்தானுக்கு மங்களூரில் சிறப்பு யாகம்! யாகங்கள் மூலம் அரசியல் பார்முலா அங்கும்?

Royal Yagna in Kodyadka Temple for Oman Sultan's Health
Mangalore: This was no ordinary yagna  but one meant for a king.
Performed at the Hosanadu Kodyadka Sri Annapoorneshwari Temple, around 40 km from Mangalore, it was intended to pray for the  recovery of ailing Oman sultan, Qaboos bin Said al Said.
The unusual Chandika Yaga was performed for the 73-year-old Sultan
பெங்களூரூ: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் ஓமன் நாட்டு மன்னர் நலமாக வேண்டி கர்நாடக மாநிலம் மங்களூரூவில் விஷேக யாகம் நடந்து வருகிறது.
ஓமன் நாட்டின் மன்னராக கடந்த 1970-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சுல்தான் குவாபூஸ் பின் சையத் அல் சையத் (72), இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் முதல் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு பின்னர் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஓமன் நாட்டு அரண்மணை வட்டாரம் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.
இந்நிலையில் , மன்னர் பூரண நலமாக வேண்டி சிறப்பு யாகம் நடத்திட முடிவு செய்யப்பட்டு அதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த சந்திரசேகர சுவாமி என்ற ஜோதிடரின் ஆலோசனைப்படி அவரது தலைமையில் வேத விற்பன்னர்கள் சமீபத்தில் மஸ்காட் சென்று சிறப்பு ஹோமம் நடத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர். இப்படிப்பட்ட யாகங்கள் மூலம்  பெற்ற பலன்களை வாய்தா அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்வது நலம். ஏதோ ஜோதிடர்களுக்கு வந்த மட்டும் லாபம் .

டெல்லி பாலியல் தொழிலாளி பலாத்காரம்! நால்வருக்கு பத்து ஆண்டுகள் சிறை!

Being a sex worker doesn't confer right to violate her: Delhi Court
புதுடில்லி : 'ஒரு பெண் விலை மாதராக இருந்தாலும், அவரின் விருப்பத்தை மீறி, பாலியல் பலாத்காரம் செய்ய, யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை' என, தெரிவித்துள்ள டில்லி நீதிமன்றம், விபசார பெண்ணை, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, நான்கு பேருக்கு, தலா, 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.ருவாண்டா நாட்டிலிருந்து அகதியாக வந்த பெண் ஒருவர், டில்லியில் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார். இருப்பினும், அப்பெண்ணின் விருப்பத்தை மீறி, அவரை நான்கு பேர் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர்; 2012 டிசம்பரில், இந்த சம்பவம் நிகழ்ந்தது.  ஒருவேளை இவர   நம்ம அமைச்சர்கள் யாருக்கும் மிக நெருக்கமானவராக இருக்கலாம், அதுனால் தான் என்னவோ இவ்வளவு சீக்கிரம் குற்றவாளிக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள்?மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியாச்சா?

வால் நட்சத்திரத்தில் இறங்கிய ஆய்வுக் கலம்; மாபெரும் சாதனை!


அறிவியல்புரம் என்.ராமதுரை :
67P  வால் நட்சத்திரம் எங்கே உள்ளது என்பதைக் காட்டும் படம்
மணிக்கு சுமார் 65 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்ற சிறிய வால் நட்சத்திரம் ஒன்றில் மனிதன் அனுப்பிய ஆய்வுக்கலம் வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளது.   வால் நட்சத்திரம் (Comet) ஒன்றில் ஆய்வுக் கலம் மெதுவாகத் தரை இறங்குவது என்பது விண்வெளி வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ( ESA) அனுப்பிய ரோசட்டா (Rosetta) என்னும் விண்கலம் புதன்கிழமை ( நவம்பர் 12 ஆம் தேதி)  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக ரோசட்டா அந்த வால் நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்ற லாரியின் பின் புறத்தில் ஒரு ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பது மிகக் கடினமானது. ஆளில்லா விண்கலத்திலிருந்து ஒரு சிறிய ஆய்வுக் கலம் ஒன்று வால் நட்சத்திர்த்தில் இறங்குவது அதை விடக் கடினமானது.

புதன், 12 நவம்பர், 2014

நடிகை பத்மபிரியா குஜராத் அமெரிக்க மாப்பிள்ளை Jasmin Shah எளிமையான திருமணம்,

திடீர் திருமணம் செய்துக்கொண்ட நடிகை பத்மபிரியா""திடீர் திருமணம் செய்துக்கொண்ட நடிகை பத்மபிரியா" (டி.என்.எஸ்) ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’, ‘தங்க மீன்கள்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பத்மபிரியா தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், தற்போது மலையாளப் படங்களில் பத்மபிரியா நடித்து வருகிறார். இந்த நிலையில், பத்மபிரியாவுக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் இன்று மும்பையில் திருமணம் நடைபெற்றது. ஜாஸ்மின் ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு, நியூயார்க்கில் மேல் படிப்பு படித்த போது இவருக்கும் நடிகை பத்மபிரியாவும் காதல் மலர்ந்துள்ளது.
இவர்களுடைய காதலுக்கு இரு விட்டாராம் சம்மதம் தெரிவிதத்தையடுத்து, இவர்களது திருமணம் குடும்பத்தார் சம்மத்துடன் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை மும்பையில் மிக எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திடீர் திருமணத்திற்கு இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் : காவிரியில் தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கூடாது!

 காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க முடியும் என அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) எழுதிய கடிதத்தில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு தடுப்பணைகளை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆய்வு நடத்த, சர்வதேச அளவிலான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக ஜனநாயாக படுகொலை! அடிதடி! ஆளுநருக்கு காயம்! 5 காங் MLAக்கள் 2ஆண்டுகள் சஸ்பென்ட்!

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு ஆளுநருக்கு காயம் ஏற்படக் காரணமாக இருந்ததாக கூறி 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 ஆண்டுகாலத்துக்கு அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற பாஜகவின் பட்நவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று காலை கூடியது. முதல் நடவடிக்கையாக பாஜகவின் பக்தே சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தாமல் குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு சிவசேனா, காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குரல் வாக்கெடுப்பில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் இதனை ஏற்க முடியாது என்று சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் போர்க்கொடி தூக்கின.tamil.oneindia.com

தருண் விஜய்க்கு வாய்த்த வைரமுத்து ! தமிழை ஆரிய கமண்டலத்திற்குள் அடைக்க ஒரு அவதாரம்?

தருண் விஜய் - வைரமுத்துரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்.
ஆரியப் பார்ப்பன தமிழ் அழிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக உயர்தனிச் செம்மொழியை ஒரு வாளாக உயர்த்திப்பிடித்த கால்டுவெல்லுக்கோ, இல்லை பார்ப்பனிய திரிபுக்கு எதிராக தமிழ்ச்சமர் புரிந்த பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவணர் போன்றவர்களையெல்லாம் புதிய தலைமுறைகளுக்கு போற்றிச் சொல்லவோ, விழா எடுக்கவோ விரும்பாத வைரமுத்து, தமிழுக்காக உயிரையே கொடுத்த தாளமுத்து, நடராசனுக்காகவெல்லாம் ஒரு போஸ்டர் கூட அடிக்காத ‘வெற்றித் தமிழர் பேரவை’ இப்போது தமிழுக்காக ஒரு குரலை கொடுத்ததற்காக காவி தருண் விஜய்க்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது என்றால், வைரமுத்துவுக்கு “வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுது” என்பது நமக்கு புரிகிறது. “ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்
ஈழத்தமிழர் படுகொலை, மீனவர் படுகொலை, ஆரம்ப வகுப்பிலேயே தமிழ்வழிக் கல்வி அழிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு… என நீளும் அநீதிகளின் போது எங்கேயும் தலையைக் காட்டாத இந்த வெத்துத் தமிழ்ப் பேரவைக்கு பா.ஜ.க. தருண் விஜய் போலவே திடீர் தமிழ்க் காதல் வந்தது திகைக்க வைக்கிறது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டால் தனக்குத்தானே கால் அமுக்கு பேரவை, கை அமுக்கு பேரவை என்று அல்லக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் காட்டிக் கொள்ள தமிழகத்தில் பஞ்சமா என்ன? அன்புள்ள வைரமுத்து அண்ணன் அவர்களே கொஞ்சம்  வரலாற்றை  பாருங்கள் இனிக்க பேசி இருப்பதை பறிக்கும் கூட்டம்அது .

ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் ! எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும் திராவிட இயக்கம் என்றுகூறும் பார்பன சூழ்ச்சியை ......

mss pandian 3ய்வாளர் எம்.எஸ்.எஸ் பாண்டியன்
டில்லியில் நவம்பர் 10 அன்று மாலை மறைந்து விட்டார். 1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் பற்றிய கட்டுரை ஒன்றை எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் அவர் எழுதியிருந்தார். ம.க.இ.க வின் அந்தப் போராட்டத்தைப் பற்றி மட்டுமின்றி, அதன் அரசியல் பின்புலத்தையும் விளக்கிச் சென்றது அக்கட்டுரை. அந்தக் கட்டுரையின் வழியாகத்தான் எம்.எஸ்.எஸ் பாண்டியன் எங்களுக்கு  அறிமுகமானார்.
1990 களின் துவக்கத்தில் நாங்கள் முன்வைத்த பார்ப்பன பாசிசம் என்ற கருத்தாக்கத்தையும், அதனை கருத்தியல் ரீதியாக முறியடிப்பதற்கு இந்து மதத்தின் ஆன்மாவான பார்ப்பனியத்தை தாக்க வேண்டும் என்பதையும் மார்க்சிய லெனினிய அமைப்புகளே ஏற்றுக்கொள்ளத் தயங்கிய அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. (இப்போதும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை). தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மரபு குறித்து கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத, அதே நேரத்தில் “மைய நீரோட்டத்தில் சேர மறுக்கும்” தமிழகம் குறித்து ஒருவித வெறுப்பும் கசப்புணர்ச்சியும் கொண்டிருந்த “வட இந்திய மனோபாவத்தை” அசைப்பதற்கும், வட இந்திய அறிவுத்துறையினருக்கு திராவிட இயக்கம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்கும் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் பெரிதும் உதவின.
90 களில் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இல் அவர் பணியாற்றிய காலத்தில்  அவரை சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்தைக் கொண்டிருந்தபோதும், புலிகள் இயக்கத்தையும் பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கமற்ற தமிழினவாத அரசியலையும் அவர் விமரிசினக் கண்ணோட்டத்துடனேயே அணுகினார்.

திண்டுக்கல் மாணவன் அடித்து கொலை! சக மாணவன் கைது!

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நோட்டுப் புத்தகத்தைக் கிழித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிளஸ் ஒன் மாணவர் வகுப்பறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சக மாணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். நிலக்கோட்டை அருகே உள்ளது விளாம்பட்டி. இந்த ஊரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் ஒன் படித்து வந்தவர்கள் வினோத் மற்றும் சுந்தரபாண்டி.  இன்று வகுப்பில் இருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. சுந்தரபாண்டியின் நோட்டுப் புத்தகத்தை வினோத் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவரும் வகுப்பறையிலேயே மோதிக் கொண்டனர். இருவரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர். அதில் சுந்தரபாண்டியன் கடுமையாகத் தாக்கியதில் வினோத் மயக்கமடைந்து விழுந்தார். சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அனைத்து கனிமவள முறைகேட்டையும் சகாயம் குழு விசாரிக்க வேண்டும்: ஹைகோர்ட்டில் புதிய வழக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள அனைத்து கனிமவள முறைகேட்டையும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு நடந்த கனிமவள முறைகேடு குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சகாயம் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் விசாரணையை மதுரையில் விரைவில் துவக்க உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கனிமவள ஆய்வுக்கு உத்தரவிட்ட பின்பே, ஆய்வுப்பணியை துவக்க வேண்டும்' என, சகாயம் ஆதரவு குழு வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொது நல மனுவில், மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், சட்ட விரோத அனைத்து வகையான கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விபசார விடுதியில் தெலுங்கு பட கதாநாயகி கைது!


விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு பட நடிகைகள் அடிக்கடி கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் சுவேதா பாசு பிடிபட்டார். நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது கையும் களவுமாக போலீசார் இவரை பிடித்தனர். படவாய்ப்புகள் இன்றி பண கஷ்டம் ஏற்பட்டதால் விபசாரத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார். இந்த நிலையில் இன்னொரு பட கதாநாயகியும் போலீசில் சிக்கியுள்ளார். புனேயில் போலீசார் விபசார வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அந்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. எல்லோரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் தெலுங்கு படத்தில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் என்பதை போலீசார் அறிந்தனர். ஆனாலும் அவர் யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை. அந்த நடிகையின் முகத்தை துணியால் மூடி போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றார்கள்.cinema.maalaimalar.com

கத்தி கதை திருட்டில் முருகதாஸ்! கோபி ஏன் வழக்கை வாபஸ் வாங்கினார்? மீண்டும் வேறுவிதத்தில் தொடர திட்டம் ?


கத்தி’ கதை திருட்டு வழக்கை கோபி வாபஸ் பெற்றது ஏன்?‘கத்தி’ கதைத்திருட்டு விவகாரம் தொடார்பான வழக்கு நேற்றுய் நீதிமன்றத்திற்கு வந்தது.  அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போடப்பட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி.  நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.  பொருளாதார சிக்கலில் இருக்கும் கோபிக்கு கோர்ட் வழக்கு செலவு செய்வதற்கெல்லாம் சக்தி இல்லை.  ஆனால் அவரது  வாதத்திலிருக்கும் உண்மையை புரிந்துகொண்ட வழக்கறிஞர்கள் குழு ஒன்று உதவிக்கு வந்திருக்கிறது.இந்த வழக்கை வேறு மாதிரி கொண்டு போகவேண்டும்.  அதனால் இப்போது சற்று வலுவில்லாமல் இருக்கும் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று அறிவுருத்தினர்.  ஆக, மீஞ்சூர் கோபிய்யால் வாபஸ் பெறப்பட்டிருக்கும் இந்த வழக்கு முன்னிலும் வேகமாக விஸ்வரூபம் எடுக்ககூடும் என்கிறார்கள். இதை தெரிந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், டெல்லியிலிருந்து பிரபல வழக்கறிஞரை  அழைத்து வரப்போகிறாராம்.nakkheeran.in ;

பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற தருண் விஜய் தமிழை புகழ்கிறாரா? முதல்ல பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பேச அனுமதி கொடுங்கள் !அழகிரி பட்ட வேதனை போதும்?


தமிழுக்குக் குரல் கொடுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் (உத்தராகண்ட்) தருண் விஜய்-க்கு வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேரவையின் தலைவர் கவிஞர் வைரமுத்து, தருண் விஜய்-க்கு நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கினார். மேடையில் இடமிருந்து: க.திருவாசகம், க.ப.அறவாணன், கே.என்.பாஷா, அவ்வை நடராசன், ம.ராசேந்திரன். படம்: ம.பிரபு
தமிழுக்குக் குரல் கொடுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் (உத்தராகண்ட்) தருண் விஜய்-க்கு வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேரவையின் தலைவர் கவிஞர் வைரமுத்து, தருண் விஜய்-க்கு நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கினார். மேடையில் இடமிருந்து: க.திருவாசகம், க.ப.அறவாணன், கே.என்.பாஷா, அவ்வை நடராசன், ம.ராசேந்திரன். படம்: ம.பிரபு

தமிழ் உட்பட பாரம்பரிய மொழிகளை ஒதுக்குவது தேசத்துக்கு நல்லதல்ல என்று உத்தராகண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய் கூறியுள்ளார். தனது சொந்த ஊரில் விரைவில் தமிழ்ப் பள்ளி தொடங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். ஆரியக்கூத்து ஆடினாலும் பெரியார் பூமி என்ற காரியத்தில் கண் வையடா வயிரமுத்து !  

மாணவிகள் நூலகத்துக்கு செல்ல தடை ! காதல் வருமாம் அலிகார் Aligarh Muslim university banned girls to library ! shame!


அலிகார் : உ.பி., மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு செல்ல, அதே பல்கலையில் படிக்கும் மாணவியருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 'நூலகத்திற்கு மாணவியர் சென்றால், மாணவர்களுக்கும், மாணவியருக்கும் காதல் ஏற்பட்டு விடும்; அதைத் தடுக்கவே அனுமதி மறுக்கப்படுகிறது' என, துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரமாண்ட நூலகம் :சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேசத்தில், பிரபலமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு, லட்சக்கணக்கான புத்தகங்கள் மற்றும் இணையதள வசதியுடன்பிரமாண்ட நூலகம் உள்ளது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே, நூலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்;

வேலூர் மேயர் கார்த்திகா யினி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹைகோர்ட் உத்தரவு ,நீதிபதி குன்ஹாவை தரக்குறைவாக ..

சென்னை: நீதிபதி குன்ஹாவை விமர்ச்சித்து தீர்மானம் போட்ட வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடை அடைப்பு, பஸ் நிறுத்தம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தது. பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம், மவுன விரதம், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சதீஸ்கார் அரசை டிஸ்மிஸ் செய்க? சிகிச்சையில் மரணமடைந்த 11 பெண்களின் உறவினர்கள் கடும் கோபம்?

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் குடும்ப நல சிகிச்சைக்குப் பிறகு, உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்த மாநில முதல்வர் ரமண் சிங்.சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் குடும்ப நல சிகிச்சைக்குப் பிறகு, உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்த மாநில முதல்வர் ரமண் சிங். சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த குடும்ப நல முகாமில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் உயிரிழந்தனர். 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பிலாஸ்பூர் சுகாதாரத் துறை அதிகாரி உள்பட 4 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் கோமல் பர்தேசி, செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிலாஸ்பூர் மாவட்டம், பெந்தாரி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் கடந்த சனிக்கிழமை குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் பொன்னார் பேச்சு! மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் No more sabotage panneer asssured?

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசுடன் முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் முதல் சந்திப்பு- பறக்கும் சாலை குறித்து பொன்னாருடன் பேச்சு

Mekedatu Karnataka காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்டு? கர்நாடக ஆடுதாண்டும் பாறை அணைக்கட்டு!

பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக-கர்நாடக எல்லையான மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் பாறை) என்ற இடத்தில் குடிநீர் திட்டத்திற்காக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. "மேக்கேதாட்டு பகுதியில் மொத்தம் 3 நீர்த் தேக்கங்களை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு யோசிக்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக்கொள்வதில் காவிரி நடுவர்மன்றத்தில் எவ்வித தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களை கட்டி அங்கு நீர்மின் உற்பத்திநிலையம் அமைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு யோசித்துவருகிறது.

செவ்வாய், 11 நவம்பர், 2014

நடிகர் நாசரை நாய் என்ற ராதாரவியின் தில்லுமுல்லு? நடிகர் சங்க மாபியாவின் தலைவன்?

பெயர் முதல் நிர்வாகிகள்வரை அனைத்தும் குழப்பமாக உள்ள ஒரு சங்கம் இருக்கிறது என்றால் அது தென்னிந்திய நடிகர் சங்கமாகதான் இருக்கும். தென்னிந்திய சினிமா சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய போது வைத்த பெயர், தென்னிந்திய நடிகர் சங்கம். இப்போது அனைத்து மொழி சினிமாவும் அந்தந்த மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. மலையாள நடிகர் சங்கம், கன்னட நடிகர் சங்கம் என ஒவ்வொரு மொழியிலும் தனித்தனி நடிகர் சங்கங்கள் இயங்குகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்றமடையாமல் இன்னும் தென்னிந்திய அடைமொழியை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் பெயர் தமிழ்நாடு என்று எப்போது மாறுகிறதோ அன்றுதான் என்னுடைய மகன் அதில் உறுப்பினராவான் என்று பாரதிராஜா பல வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார். சங்க பொறுப்புகளில் இருக்கும் ராதாரவி தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் அடாவடி இன்னொருபுறம். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சென்னைக்கு வெளியே செட்டிலாகி நாடகத்தையும், சினிமாவையும் மறந்து போன ஒரு கூட்டத்தை பக்கவாத்தியமாகக் கொண்டு பல வருடங்களாகவே தனியாவர்த்தனம் நடத்தி வருகிறார். ஏதோ அப்பன் வீட்டு சொத்தாக நினைத்து இவர் செய்யும் அளும்புகளை நாசர், விஷால் போன்றவர்கள் தட்டிக் கேட்டதும் ராதாரவிக்கு தாங்க முடியவில்லை.

இறந்து 45 நிமிடங்களுக்கு பின் உயிர்த்தெழுந்த அமெரிக்க பெண்! இறப்பின் ரகசியத்தை புட்டு புட்டு வைக்கிறார் ?Ruby Graupera-Cassimiro


A miraculous survival story has emerged out of a Florida mother's routine c-section surgery.
40-year-old Ruby Graupera-Cassimiro was set to be pronounced dead by doctors at Boca Raton Regional Hospital after she suffered a rare amniotic fluid embolism.
நியூயார்க்: அமெரிக்காவில் பிரசவத்தின் போது இறந்து விட்டதாகக் கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு உண்டானதாக மருத்துவர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ (40). பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் ரூபி. அங்கு அவருக்கு சிசேரியன் மூலமாக பிரசவம் பார்க்கப் பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்து அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்தது.
இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. படிப்படியாக ரூபியின் நாடித் துடிப்பு குறையத் தொடங்கியது. பின்னர் சுத்தமாக நாடித் துடிப்பு இல்லாமல் போனது. இதனால், ரூபி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் டாக்டர்கள் அறிவித்து விட்டனர். இதற்கிடையே ரூபியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை பத்திரமாக டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். சுமார் 45நிமிடங்களுக்குப் பிறகு திடீரென ரூபியின் உடலில் அசைவு தெரிந்ததைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து ரூபியை மீண்டும் அவர்கள் உயிர் பிழைக்க வைத்தனர். இந்தச் சம்பவம் மருத்துவ உலகில் நடந்த மிகப்பெரிய அதிசயம் என டாக்டர்கள் வர்ணிக்கின்றனர்.dinakaran.com

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி எதிர்ப்பினால் சிபிஐ மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு

2ஜி வழக்கில் அரசுதரப்பு கூடுதல் சாட்சியாக மேலும் சிலரை அழைக்க சிபிஐ செய்திருந்த மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் தள்ளி வைத்தது. அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், உதவி இயக்குனர் சத்யேந்திர சிங், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் நவில் கபூர், மற்றும் வங்கி அதிகாரி டி.மணி உட்பட மேலும் சிலரின் வாக்குமூலங்களைப் பெற சம்மன் அளிக்க நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்திருந்தது. ஆனால் சிபிஐ-யின் இந்த மனுவை ஆ.ராசா, மற்றும் கனிமொழி ஆகியோர் எதிர்த்துள்ளனர்.
சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி, எதிர்தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு சிபிஐ மனு மீதான உத்தரவை நவம்பர் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Vinavu.com தருண் விஜயின் உண்மை முகம் பாரீர்!

tarun-vijay-vairamuthu-1சமஸ்கிருதம்தான் இந்தியா. …சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய உணர்வே அழிந்து விடும்…
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை…         
உயர்பதவிகளைப்  பெற, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்                           
என்ற நிலைமை முன்னொரு காலத்தில் நிலவியது.
அந்நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும்.”
(தருண் விஜய், டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)
தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே,
சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே!
உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!

90 ஆயிரம் Passport விண்ணப்பங்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் லக்னோ பாஸ்போர்ட் அலுவலகம்

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் 90 ஆயிரம் விண்ணப்பங்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இம்மாதம் வரை இந்த பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சுமார் இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், கடந்த ஆண்டு வரப்பெற்ற விண்ணப்பங்கள் உள்பட சுமார் 2.1 லட்சம் பாஸ்போர்ட்கள், விண்ணப்பதாரர்கள் பற்றிய விபரங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் இந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும், விண்ணப்பதாரர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து தகவல் அளிக்கும் போலீசாரின் விசாரணை நிலையில் சுமார் 69 ஆயிரம் விண்ணப்பங்களும், பூர்த்தி செய்யப்படாத தகவல்கள் மற்றும் தகவல் பிழைகளால் 8 ஆயிரம் விண்ணப்பங்களும்,
விபரங்கள் சேகரிக்கப்பட்டு அலுவலகப் பணிகள் நிறைவு பெறாத நிலையில் 13 ஆயிரம் விண்ணப்பங்களும் இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. maalaimalar.com

165 நாள் மோடி ஆட்சியில் முதலாளிகள் கொழிப்பு - சமூக நீதி ஒழிப்பு! அமைச்சரவையில் உயர்ஜாதியினர்! கிரிமினல்கள் !கி.வீரமணி கண்டனம்!

மத்திய பிஜேபி ஆட்சி இந்த 165 நாட்களில் சாதித்தது என்ன? மாற்றத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் - அமைச்சரவையில் உயர் ஜாதியினரும், கோடீசுவரர்களும், குற்றப் பின்னணி உள்ளவர்களுமே குவிந்து கிடக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,>பிரதமர் மோடியின் அமைச்சரவை - 165 நாட்களுக்குப்பின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல ஆங்கில நாளேடுகளின் செய்தி விளக்கத் தகவல்களின்படி இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் ஓர் அரசு என்பதால், அவர்களது ஆணைப்படியும் பலர் உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் சொன்னது என்ன  இப்பொழுது நடப்பது என்ன?

மத்திய மந்திரி சபையில் 16 பேர் கிரிமினல் குற்றவாளிகள் ! காங்கிரஸ் புள்ளிவிபரம் .nearly one third of them ...

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்தார்.அப்போது 21 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் புதிய மந்திரிகளில் 8 பேர் கிரிமினல் குற்றவழக்கு பின்னணியில் உடையவர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:பிரதமர் நரேந்திரமோடி அடிக்கடி இந்தியாவை சுத்தப்படுத்துவது பற்றி பேசுகிறார். ஆனால் அரசியலை அவர் சுத்தப்படுத்தவில்லை.தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அரசியலில் இருந்து கிரிமினல்கள் விரட்டப்படுவார்கள் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மாறிவிட்டார்.மந்திரிசபை மாற்றத்தின் போது குற்றப்பின்னணி உடைய 12 மத்திய மந்திரிகளை நீக்குவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ, அத்தகைய மந்திரிகள் எண்ணிக்கையை 12–ல் இருந்து 16 ஆக உயர்த்தி விட்டார்.

சத்தீஸ்கர் கருத்தடை முகாமில் 8 பெண்கள் பலி ! 15 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில்~!


சத்தீஸ்கர் மாநிலம், பிளாஸ்பூரில் கருத்தடை முகாமில் பங்கேற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 8 பெண்கள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் பிளாஸ்பூர் மாவட்டம், ராயப்பூரில் கருத்தடை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய 8 பெண்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சமும், சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்து மாநில முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.nakkheeran,in

ராஜேந்திர சோழனுக்கு விழாவா? பெண்களை தாசிகளாககியவன்,கிராமங்களை பார்பனர்களுக்கு தாரைவார்தத்தவன் .......

ராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அறிவித்ததற்கும் மத்திய பி.ஜே.பி அரசு விழா கொண்டாடத் துடிப்பதற்கும் காரணம் அவன் ஆரிய அடிமையாக இருந்து அவர்களுக்கு சேவகம் செய்ததால்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
ராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவது விழா எடுக்கப்போவதாக முதலில் அறிவித்தது ஆர்.எஸ்.எஸ். (ஆட்சிக்காலம் கி.பி.1012- 1044), இதற்குக் காரணம் தமிழ்ப் பண்பாட்டின் மீதோ, தமிழர்களான - ஆண்ட அரசர்கள் மீதோ கவலை, பற்று என்பதால் அல்ல. இது ஒருவகை புது மயக்க பிஸ்கட்டு. தமிழர்களுக்கு - தமிழர்களை  ஏமாற்று வதற்கு. ஆரியக் கலாச்சாரமான வைதீக வேதக்கலாச்சாரத் தினையும், அந்த வடமொழி ஆதிக்கம் பரவவும், அவனது ஆட்சியில் சமஸ்கிருதமயக் கல்வியையே பரப்பிய பச்சைப் பார்ப்பன அடிமை இராஜேந்திரசோழன்;