வியாழன், 13 நவம்பர், 2014

ஓமான் மன்னர் சுல்தானுக்கு மங்களூரில் சிறப்பு யாகம்! யாகங்கள் மூலம் அரசியல் பார்முலா அங்கும்?

Royal Yagna in Kodyadka Temple for Oman Sultan's Health
Mangalore: This was no ordinary yagna  but one meant for a king.
Performed at the Hosanadu Kodyadka Sri Annapoorneshwari Temple, around 40 km from Mangalore, it was intended to pray for the  recovery of ailing Oman sultan, Qaboos bin Said al Said.
The unusual Chandika Yaga was performed for the 73-year-old Sultan
பெங்களூரூ: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் ஓமன் நாட்டு மன்னர் நலமாக வேண்டி கர்நாடக மாநிலம் மங்களூரூவில் விஷேக யாகம் நடந்து வருகிறது.
ஓமன் நாட்டின் மன்னராக கடந்த 1970-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சுல்தான் குவாபூஸ் பின் சையத் அல் சையத் (72), இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் முதல் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு பின்னர் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஓமன் நாட்டு அரண்மணை வட்டாரம் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.
இந்நிலையில் , மன்னர் பூரண நலமாக வேண்டி சிறப்பு யாகம் நடத்திட முடிவு செய்யப்பட்டு அதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த சந்திரசேகர சுவாமி என்ற ஜோதிடரின் ஆலோசனைப்படி அவரது தலைமையில் வேத விற்பன்னர்கள் சமீபத்தில் மஸ்காட் சென்று சிறப்பு ஹோமம் நடத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர். இப்படிப்பட்ட யாகங்கள் மூலம்  பெற்ற பலன்களை வாய்தா அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்வது நலம். ஏதோ ஜோதிடர்களுக்கு வந்த மட்டும் லாபம் .

அதே போன்று இந்தியாவில் மங்களூரூவில் சிறப்பு யாகம் கடந்த 9-ம் தேதி மங்களூரூவில் துவங்கியது.22 வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க , மகா தன்வந்திரி யாகம், பூர்ண நவக்கிரக சாந்தி ஹோமம், உள்ளிட்ட யாகம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஓமன் அரண்மணை வட்டாரத்திடமிருந்து ரூ. 30 லட்சம் யாகத்திற்காக வழங்கப்பட்டது. இந்த யாகத்தில் ஓமன் மன்னரின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக