சத்தீஸ்கர்
மாநிலம், பிளாஸ்பூரில் கருத்தடை முகாமில் பங்கேற்று அறுவை சிகிச்சை
செய்துகொண்ட 8 பெண்கள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர்
மாநில அரசு சார்பில் பிளாஸ்பூர் மாவட்டம், ராயப்பூரில் கருத்தடை முகாம்
நடைபெற்றது. இந்த முகாமில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அதில்
அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய 8 பெண்கள் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சத்தீஸ்கர் மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா
ரூபாய் இரண்டு லட்சமும், சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு தலா 50 ஆயிரம்
ரூபாயும் வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்து மாநில முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக