சனி, 15 நவம்பர், 2014

பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளே விபசாரம் லஞ்சம் மற்றும் தாதாக்கள் உதவியோடு அடாவடிகள்.

பெங்களூரு: கர்நாடக மாநில பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக பெண் கைதிகள் புகார் கடிதம் எழுதியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து 15 நாட்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பெண் கைதிகள் ஒரு குழுவாக சேர்ந்து புகார் கடிதம் எழுதி கையெழுத்திட்டு, கர்நாடக தலைமை நீதிபதிக்கு, சிறை வளாகத்தில் உள்ள கைதிகள் குறைதீர்க்கும் பெட்டியில் போட்டு உள்ளனர். பரப்பன அக்ரஹாரா சிறையில் விபச்சாரம்: விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு சிறையில் விபச்சாரம் அதில், சிறைக்காவலர்களே இதில் ஈடுபட்டு, ஆண் கைதிகளை, பெண் கைதிகளுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதற்காக ரூ.300 முதல் 500 வரை சிறைக் காவலர்கள் வசூலிப்பதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உறவினர்களிடம் லஞ்சம் இன்னொரு கடிதத்தில், "பெண் கைதிகளிடம் இருந்து எல்லாமும் அபகரிக்கப்படுகின்றன. கைதிகளின் உறவினர்கள் முறைப்படி சந்திக்க வந்தாலும் அவர்களிடம் இருந்து ரூ.200 முதல் ரூ.300 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், அதிகாரிகளைப் பணம் இல்லாமல் பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. நாங்கள் கொடுக்க முடியாது என்றால் அவர்கள் எங்களைப் பார்த்து, நாய்போல் கத்தி அவமானப்படுத்துவார்கள். எங்கள் உறவினர்களை பார்க்கவும் அனுமதிப்பது இல்லை. பெண் கைதிகளுக்கு அவமானம் மேலும், உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களில் சரிபாதி சிறைக்காவலர்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் அதை எல்லாம் வெளியே தூக்கி வீசி விடுவார்கள்.
சிறைக்காவலர்கள் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள், நீங்கள் சிறையில் இருக்கிறீர்கள் நல்ல உணவு, அழகாக உடை உடுத்துவது என எதிர்பார்க்க கூடாது என கூறுகின்றனர். செல்போன் அனுமதி சிறைக்காவலர்கள் 2 சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக மொபைல் போன் வைத்திருக்க அனுமதித்து உள்ளனர். ஒருவர் கணவனைக் கொலை செய்த மனைவி, மற்றொருவர் ஆங்கிலம் பேசும் கைதி. மற்ற கைதிகள் மொபைல் போன் கேட்டால் அதிகாரிகளூக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பணம் இருந்தால் அனைத்தும் அனுபவிக்க முடியும் என கூறுகின்றனர். இதை உயரதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் பரோலில் செல்லும் வாய்ப்பை கெடுத்துவிடுவதாகக் கூறுகிறார்கள். தாதா பத்மாவதி பெண் கைதிகள் சிறைக்காவலர்களின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெற்று அமைதியான முறையில் சிறைத்தண்டனையை முடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், பெண் குற்றவாளிகள், பிரபல பெண் தாதா பத்மாவதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டு உள்ளனர். பத்மாவதி சிறைக்கைதி ஜோதியை அடித்து உள்ளார். அவரது கையை பிளேடால் கீறி உள்ளார். ஆனால் இதுவரை பத்மாவதி மீது எந்த நடவடிகையும் கொடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக பத்மாவதி இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளனர். சிறை அதிகாரிகளின் பட்டியல் கைதிகளிடம் லஞ்சம் பெறும் சிறைக்காவலர்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியலும் அந்த கடிதத்தில் இடம்பெற்று உள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த கடிதங்களை கர்நாடக உயர்நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைசாலைக்கு அனுப்பி வைத்து உள்ளது. நீதிபதி உத்தரவு இந்த கடிதம் கிடைத்த உடன் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹெச். வகேலா, புகார் குறித்து விசாரிக்கவும் மேல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் இதுபோன்றதொரு சம்பவம் சிறையில் நடக்க வாய்ப்பே இல்லை என்று சிறைத்துறை டிஐஜி வி.எஸ்.ராஜூ மறுத்துள்ளார். வாய்ப்பே இல்லை சிறைகைதிகளை போலீசார் யாரும் தனியாக சந்திக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புகார் கடிதத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை டி.ஐ.ஜி. பி.எம் ஜெய்சிம்ஹாவும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் கூட பெண்கள் சிறைப்பகுதிக்கு செல்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். சிறைத்துறை அறிக்கை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சிறைத்துறை டி.ஐ.ஜி. ககன்தீப் சிங் அளித்த அறிக்கையின் படி, கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்ற 15 பெண்கள் கைதிகள், சாதாரண சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 3 பெண் கைதிகளும் உள்ளனர். அதே போல, விசாரணைக் கைதிகளாக 89 பெண்களும், இளம் குற்றவாளிகளாக (19-23 வயதிற்குள்) 4 பெண்களும், போதைக்கடத்தல் குற்றங்களுக்காக 8 பெண்களும், 12 வெளிநாட்டுப் பெண் கைதிகளும் என மொத்தம் 131 பெண்கள் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளனர். அரசு உத்தரவு இதனிடையே இந்த புகார் கடிதம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை 15 நாட்களுக்கு விசாரித்து அறிக்கை அளிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிர்ச்சியில் கர்நாடகா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறைக்குள்ளேயே பெண் கைதிகளை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட சிறைத்துறை காவலர்களே உடந்தையாக இருந்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக