செவ்வாய், 11 நவம்பர், 2014

நடிகர் நாசரை நாய் என்ற ராதாரவியின் தில்லுமுல்லு? நடிகர் சங்க மாபியாவின் தலைவன்?

பெயர் முதல் நிர்வாகிகள்வரை அனைத்தும் குழப்பமாக உள்ள ஒரு சங்கம் இருக்கிறது என்றால் அது தென்னிந்திய நடிகர் சங்கமாகதான் இருக்கும். தென்னிந்திய சினிமா சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய போது வைத்த பெயர், தென்னிந்திய நடிகர் சங்கம். இப்போது அனைத்து மொழி சினிமாவும் அந்தந்த மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. மலையாள நடிகர் சங்கம், கன்னட நடிகர் சங்கம் என ஒவ்வொரு மொழியிலும் தனித்தனி நடிகர் சங்கங்கள் இயங்குகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்றமடையாமல் இன்னும் தென்னிந்திய அடைமொழியை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் பெயர் தமிழ்நாடு என்று எப்போது மாறுகிறதோ அன்றுதான் என்னுடைய மகன் அதில் உறுப்பினராவான் என்று பாரதிராஜா பல வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார். சங்க பொறுப்புகளில் இருக்கும் ராதாரவி தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் அடாவடி இன்னொருபுறம். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சென்னைக்கு வெளியே செட்டிலாகி நாடகத்தையும், சினிமாவையும் மறந்து போன ஒரு கூட்டத்தை பக்கவாத்தியமாகக் கொண்டு பல வருடங்களாகவே தனியாவர்த்தனம் நடத்தி வருகிறார். ஏதோ அப்பன் வீட்டு சொத்தாக நினைத்து இவர் செய்யும் அளும்புகளை நாசர், விஷால் போன்றவர்கள் தட்டிக் கேட்டதும் ராதாரவிக்கு தாங்க முடியவில்லை.

திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ராதாரவி தன்னை எதிர்க்கும் நடிகர்களை நாய் என்று விமர்சித்து மோசமான மொழியில் அர்ச்சனை செய்தார். அவரது எடுபிடியான பொருளாளர் காளையும் அதே மொழியில் பேசியதாக தெரிகிறது.
நடிகர் சங்கத்துக்கு எதிராக தும்மினாலே நோட்டீஸ் அனுப்பும் தலைவர் சரத்குமார் இந்த அவதூறு பேச்சை கண்டு கொள்ளவில்லை. உறுப்பினர்களின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ராதாரவிக்கும், காளைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தன்னல பெருச்சாளிகளை ஒழிக்க சில நேரம் நாய்களாகவும் மாற வேண்டியிருக்கிறது.tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக