புதன், 12 நவம்பர், 2014

நடிகை பத்மபிரியா குஜராத் அமெரிக்க மாப்பிள்ளை Jasmin Shah எளிமையான திருமணம்,

திடீர் திருமணம் செய்துக்கொண்ட நடிகை பத்மபிரியா""திடீர் திருமணம் செய்துக்கொண்ட நடிகை பத்மபிரியா" (டி.என்.எஸ்) ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’, ‘தங்க மீன்கள்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பத்மபிரியா தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், தற்போது மலையாளப் படங்களில் பத்மபிரியா நடித்து வருகிறார். இந்த நிலையில், பத்மபிரியாவுக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் இன்று மும்பையில் திருமணம் நடைபெற்றது. ஜாஸ்மின் ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு, நியூயார்க்கில் மேல் படிப்பு படித்த போது இவருக்கும் நடிகை பத்மபிரியாவும் காதல் மலர்ந்துள்ளது.
இவர்களுடைய காதலுக்கு இரு விட்டாராம் சம்மதம் தெரிவிதத்தையடுத்து, இவர்களது திருமணம் குடும்பத்தார் சம்மத்துடன் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை மும்பையில் மிக எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திடீர் திருமணத்திற்கு இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு திரையுலக பிரமுகர்கள் யாரையும் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. திருமணத்திற்குப் பிறகும் பத்மபிரியா தொடர்ந்து நடிப்பதாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக