வெள்ளி, 14 நவம்பர், 2014

ஸ்டாலின் அணியோடு கலைஞர் அணி போட்டியாம்? உட்கட்சி பூஸல் நம்புறதா நம்பாம விடுறதா? தெரியல்லையே?

உட்கட்சி தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில், கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னையில் உள்ள, 4 மாவட்ட செயலர்கள் பதவியையும், தேர்தல் நடத்தாமலேயே, தன் ஆதரவாளர்கள் கைப்பற்ற வேண்டும் என, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். அவரது திட்டத்தை முறியடிக்கும் வகையில், மாவட்ட செயலர் பதவிகளுக்கு, முறையாக தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என, கருணாநிதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால், இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும், தீவிரமான மல்லுக்கட்டு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க., உட்கட்சி தேர்தலை, இம்மாத இறுதிக்குள் முடித்து விட்டு, அடுத்த மாதம் கட்சி பொதுக்குழுவை கூட்டி, மாநில நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு முடிவெடுத்து உள்ளனர். ஏற்கனவே, கட்சி சீரமைப்புக் குழு பரிந்துரையின் பேரில், நிர்வாக வசதிக்காக, 35 மாவட்டங்களாக இருந்தது, 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் நோக்கோடு, உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் தான், பதவியை பிடிக்க கட்சிக்குள் போட்டா போட்டி நடக்கிறது.  ஒரு ஜனநாயக கட்சியில்  இம்மாதிரி விஷயங்கள் நடப்பது சகஜம். இதை பூதாகரமாக்கி, பலூன் போல் ஊதி பெரிதாக்கி, பயம் காட்டுவது தேவை இல்லாதாது. வேண்டும் என்றால், அ தி மு க என்ற துருப்பிடித்த இரும்பு கோட்டைக்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பாருங்களேன்.அங்கு ஒரு ஜெ(யில்)லலிதாவுக்கு  முன்னால்  அடிமை கூட்டம்?

கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி ஆதரவாளர்கள் என, பிரிந்து நின்று பதவிகளை பிடிக்க மல்லுகட்டுகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுவதோடு, ஆங்காங்கே பிரச்னைகளும் பெரிதாக வெடித்திருப்பதால், கோட்டா சிஸ்டத்தில், பதவிகளை பிரித்துக் கொள்ளலாம் என, சமாதானம் பேசி முடிவெடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களுக்கு, 40 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கருணாநிதி தரப்பில் பஞ்சாயத்து நடத்தினர். ஆனால், 10 சதவீதம் கூட ஒதுக்கீடு செய்ய, மாவட்ட செயலர் என்.கே.பி.ராஜா முன்வரவில்லை. இதனால், அங்கே கோஷ்டி மோதல் உச்சத்தில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, மாவட்ட செயலர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில்,முட்டல் மோதல் அதிகமாகி, அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடத்தினர். இருந்தும், அங்கும் பிரச்னை தீரவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, என, பல கோஷ்டிகளாக செயல்படுவதால், கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி, ஆதிசங்கர், புஷ்பராஜ் என, மூன்று கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி என, ஆட்களை பிடித்து வைத்து செயல்படுவதால், பிரச்னையை யாராலும் தீர்க்க முடியவில்லை. கோவை, திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, நீலகிரி என, பல மாவட்டங்களிலும், இப்படி கோஷ்டிபூசல் கட்சிக்குள் தலைவிரித்தாடுகிறது.
சென்னை வடக்கு மாவட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு, சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு ஆர்.டி.சேகர், சென்னை மேற்கு மாவட்டத்திற்கு கு.க.செல்வம், சென்னை தெற்கு மாவட்டத்திற்கு மா.சுப்ரமணியன் ஆகியோரை, மாவட்ட செயலர்களாக நியமிக்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால், அதை எதிர்க்கோஷ்டியினர் ஏற்கவில்லை. கனிமொழி தரப்பில், முன்னாள் அமைச்சர் சாமிக்கு, சென்னை வடக்கு மாவட்ட செயலர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பதவி விலகல்...:
சென்னை கிழக்கு மாவட்ட செயலர் பதவிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், சென்னை தெற்கு மாவட்ட செயலர் பதவிக்கு, கே.கே.நகர் தனசேகரன், சைதை மகேஷ்குமார், சென்னை மேற்கு மாவட்ட செயலர் பதவிக்கு ஜெ.அன்பழகன் ஆகியோர், மாவட்ட செயலர் பதவிகளை கைப்பற்ற, காய் நகர்த்தி வருகின்றனர். அன்பழகனுக்கு, கருணாநிதியின் நேரடி ஆசி இருப்பதால், ஸ்டாலின் தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர்.
இருந்தும், சென்னையில் நான்கு மாவட்டங்களிலும், பலம் படைத்தவர்கள் மாவட்ட செயலர்கள் ஆகட்டும் என, சொல்லிவிட்டு, கருணாநிதி, தேர்தலை நடத்துவதில் தீவிரமாகி இருக்கிறார். இந்த பிரச்னைகளாலேயே, கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, ஜெ. அன்பழகன், விலகி விட்டார் எனவும் சொல்லப்படுகிறது.
- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக