சனி, 15 நவம்பர், 2014

சுனந்தாவின் உடலில் விஷம் கண்டு பிடிக்கபட்டுள்ளது! சசிதரூரின் மனைவி மரணத்தில் சந்தேகங்கள் வலுக்கிறது?

டெல்லி,நவ.14 (டி.என்.எஸ்) மர்மமான முறையில் மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்தில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கும் டெல்லி போலீஸ், அது குறித்த விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறது.சுனந்தாவின் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் குடலுக்குள் விஷம் படிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு தடவை பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்த பிறகும், அந்த விஷம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை.அந்த விஷத்தை அவரே சாப்பிட்டாரா? அல்லது அவருக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா? என்பது தெரியவில்லை. அவர் அறையில் கிடைத்த பொருட்கள் மற்றும் செல்போன்கள் மூலம் இதில் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே சுனந்தா உடல் உள் உறுப்புகளில் உள்ள விஷம் எந்த வகையை சேர்ந்தது என்பதை இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இங்கிலாந்தில் உள்ள அதிநவீன பரிசோதனை கூடத்துக்கு சுனந்தா உடல் உள் உறுப்புகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த சோதனையில் சுனந்தா சாப்பிட்ட விஷம் என்ன என்பது தெரிந்து விடும். அதன் பிறகு அடுத்தக் கட்ட விசாரணையை தொடர டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுனந்தா மரணத்தில் வெளிநாட்டுக்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அல்லது துபாய் நாட்டில் இருந்து வந்த மர்ம மனிதன் சுனந்தாவை நூதன முறையில் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதை உறுதிப்படுத்துவதற்காக சுனந்தா மரணம் அடைந்த 17–ந்தேதியன்று பாகிஸ்தான், துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மற்றும் புறப்பட்டுச் சென்றவர்கள் பட்டியல் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது./tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக