சனி, 15 நவம்பர், 2014

அரசு வக்கீல் ஆச்சார்யா : ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் ! வழக்கை எப்படி ஒத்தி வைக்கலாம் என்று அவர்களிடம் படிக்கலாம்.

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் முன்பு ஆஜரான அரசு வக்கீல் ஆச்சார்யா புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழக்கில் இருந்து தாம் விலகியதற்கு பாஜக தந்த நெருக்கடியே காரணம் என புகார் தெரிவித்துள்ளார். பாஜக தலைமை உத்தரவின் பேரில், கர்நாடக பாஜக அரசு நெருக்கடி கொடுத்தது என ஆச்சார்யா குற்றஞ்சாட்டியுள்ளார். தாம் எழுதியுள்ள புத்தகத்தில் பாஜக மீது ஆச்சார்யா புகார் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஆதரவாளர்கள் தமக்கு நேரில் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆச்சார்யா விலகிய பிறகு பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஒத்திவைப்புச் சட்டம் ஒரு வழக்கை ஒத்திவைக்கச் செய்வது எப்படி என்பது பற்றி புத்தகம் எழுதலாம் என ஆச்சார்யா கூறியுள்ளார். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது பற்றி ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். புத்தகம் எழுதினால் அதற்கு ஒத்திவைப்புச் சட்டம் என்று பெயர் வைக்கலாம், மேலும் ஒத்திவைப்புகள் பற்றி விளக்கி எழுதினால் குற்றவாளிகள் பலர் தப்பிவிடக் கூடும் என கூறியுள்ளார். ஜெயலலிதா வழக்கில் ஆஜரானபோது பல புதிய தகவல்களைக் கற்றுக் கொண்டேன்  மேலும் 2011-ல் ஜெ. முதல்வரான பிறகு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் போக்கு மாறிவிட்டது என பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக