சனி, 3 ஏப்ரல், 2021

பாசிசத்தின் அடையாள புருஷர்கள் புலம் பெயர் புலிப்பினாமிகள்

இன்று தமிழ்நாடு மிகப்பெரும் ஆபத்தில் சிக்கி கொண்டுள்ளது .
இது பற்றி எந்த புரிதலும் அற்ற புலி பினாமி கூட்டம் உலகம் முழுவதும்  பரவி உள்ளது.
இவர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை
தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சகல வாய்ப்புக்களையும் பயன்படுத்தி சொகுசாக இருந்து கொண்டு வெறும் பொழுது போக்கு அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் குடிக்கும் சாராயத்திற்கு ஊறுகாயாக சீமான்களும் சங்கிகளும் கூறுவதை மட்டும் கேட்டுக்கொண்டு பொழுது போக்குகிறார்கள்
இவர்களுக்கு மக்களை பற்றிய எந்த அக்கறையும் கிடையாது .
தமிழகம் மட்டுமல்ல இலங்கையிலும் உள்ள மக்கள் பற்றியும் கூட எள்ளளவு கவலையும் கிடையாது  ஆனால் கவலை இருப்பது நடிப்பதில் மட்டும் இவர்கள் வல்லவர்கள். சிறு சிறு லிப் சர்வீஸ்கள்!
இவர்களின் பேரறிவுக்கு சீமான். நரேந்திர மோடி போன்றவர்கள்தான் தலையாய வழிகாட்டிகளாக தெரிகிறார்கள்   
இவர்களுக்கு கொடுக்கப்படட நிகழ்ச்சி நிரல் ஒன்றே ஒன்றுதான்
எப்படியாவது திமுக மீது எந்த சேற்றையும் வாரி வீசுங்கள் என்பதுதான் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டளை .
அதை மட்டுமே இவர்கள் செய்கிறார்கள்.

அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு! வாகனம் அனுமதிகள் நாளை மாலை 7 மணி முதல் செல்லாதாகிவிடும்.

minnambalam : நாளை மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 7 மணியுடன் முடிவடைகிற நிலையில், அரசியல் கட்சியினர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ..இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், ” ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம். தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

தன்னலமற்ற கொங்கு... உடல் பொருள் ஆவியை இழந்தும் அடுத்தவன் துன்பத்தைப் போக்குவோர்கள்! .. மோடி கமல் வானதி ஜாக்கி...

 Sathyaperumal Balusamy  : பொதுவாகவே கொங்குநாட்டுக்காரர்கள் தன்னலம் அற்றவர்கள். தங்களுடைய உடல் பொருள் ஆவியை இழந்தாவது அடுத்தவன் துன்பத்தைப் போக்கிவிடுவார்கள்.
இப்படித்தான்,
கலைமகள் சபா என்று ஒருத்தன் வந்தான். கோவணத்தில் முடிந்து வைத்திருந்த சில்லறையையும் தூக்கிக் கொடுத்துவிட்டுத் தெருவுக்கு வந்தார்கள்.
அதே போல ஸ்னேகம், அனுபவ் என்று வந்தவன்களையும் பெண்டாட்டி தாலியை அடகுவைத்துக் காப்பாற்றிவிட்டு அழுது புலம்பினார்கள்.
எங்கேயோ ஆஸ்திரேலியாவில் மேய்ந்து கொண்டிருந்த ஈமு கோழிகளைப் பிடித்து வந்து பெருந்துறையில் ஒருத்தன் ஷோ காட்டினான். அவ்வளவு தான்! ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி கணக்காக, இருந்த இரண்டே இரண்டு சென்ட்டு நிலத்தைக் கூட அவனுக்கு எழுதிக் கொடுத்து விட்டு ஏமாந்து போனார்கள்.
இப்படிப் பற்றற்று இருந்த பாவப் பிறவிகளை மீட்கும் பாவனையில் 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று அடிவாரத்தில் கடையைப் பரப்பினான் கஞ்சா குடிக்கி ஒருவன். பைத்தியங்களைப் போல பலத்த கரகோஷத்தை எழுப்பிக் கலகலவெனச் சிரித்தபடிக்கு வெள்ளியங்கிரி மலையையே அவனுக்கு வெட்டிக் கொடுத்து விட்டு விசும்புகிறார்கள்.
இப்போது தேர்தல் நேரம்.
முதலைகளும், நீலிகளும், போலிகளும் வந்து புலம்பல் நாடகத்தை அரங்கேற்றுகின்றன.
மூதிஜி வேறு ஒரு பக்கம் மூக்கைச் சிந்துகிறார்
வானதியக்கா ஒருபுறம் வாட்டம் காட்டுகிறார்
கமலதாசன் ஒருபக்கம் கலக்கம் காட்டுகிறார்

பொள்ளாச்சி ஜெயராமன் மகனை உள்ளே தூக்கி போட்டு விசாரிக்க போறதே திமுகதான்.. உதயநிதி அதிரடி!

 Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "எவ்ளோ திமிரு பாருங்க.. நம்ம தலைவர் முதலமைச்சர் ஆனதும், அவனை உள்ளே தூக்கி போட்டு நுங்கு எடுக்க போறதே நாமதான்" என்று பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் வைரலாகி வருகிறது.
இதனிடையே பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்துக்கு எப்போது உதயநிதி போனாலும் சரி, பொள்ளாச்சி பாலியல் கொடுமை பற்றி பேசாமல் வந்ததே இல்லை.. 4 கேள்வி நறுக்கென கேட்டுவிட்டுதான் சென்னை திரும்புவார்.
இந்த பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டிருக்கிறார் என பகிரங்கமாகச் சொல்கிறேன்.
முடிந்தால் என் மீது வழக்கு போடுங்க" என்று அன்றே அன்றே சவால் விட்டவர் உதயநிதி.
இது குறித்த வழக்கையும் அவர் சந்தித்து வருகிறார் என்பது வேறு விஷயம்..
ஆனால், இப்போது பிரச்சாரத்தில் இதே விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

கனிமொழி எம்.பி.க்கு கொரோனா! தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழிக்கு ..

maalaimalar : சென்னை: தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழ்நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி இடைவிடாது ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதுடன் இருமல் அதிகம் காணப்பட்டது. இதனால் நேற்று அவர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.... உடனடியாக ஆழ்வார்பேட்டை வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இன்று மதியம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வார் என்று அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.... கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் தேர்தல் பிரசாரத்தில் உடன் சென்ற கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் மகள் செந்தாமரை வசிக்கும் அபார்ட்மெண்ட் இந்த கட்டிடத்தில்தான் உள்ளது!

May be an image of outdoors

A Sivakumar :    இது தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய ஸ்டாலின்  மக்களின் அப்பார்ட்மெண்ட் .
இது மீடியாவில் சொல்லப்படுவது போல தனி பங்களா கினடயாது, Flats தான். அதில் எத்தனையாே வீடுகள், அதில் ஒன்று செந்தாமரையின் வீடு.
அதற்குள் இதை மாட மாளிகையாக்கி விட்டார்கள்.
இப்படித் தான் கலைஞர் தெற்காசியாவின் மிகப் பெரும் பணக்காரர் என்று கதைகட்டி விட்டார்கள். மனுசன் செத்து 2 வருசத்துக்கு மேலாகுது.
பழி சொன்ன எவரும் தாங்கள்  இறந்த பின் அவர் பிள்ளைகளின் பெயருக்கு மாறியிருக்கும் சொத்துப் பட்டியலை இன்று வரை வெளியிடவில்லை.
செந்தாமரை விவகாரத்துக்கு வருவோம்.
செந்தாமரையை மணந்த சபரீசன் யார்? குடும்ப பின்னணி என்ன? கல்வி என்ன? வேலை என்ன? தொழில் என்ன? வருமானம் என்ன? என்று எதுவுமே தெரியாமல் ஆழ்மனதின் வக்கிரமும் வன்மமும் கொப்பளிக்க பழி சொல்ல கிளம்பிவிட்டார்கள்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல்; 48 மணிநேர 144 தடை உத்தரவு அமல்

 தினத்தந்தி : புதுச்சேரி,  புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.  
தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அரசியல் கட்சிகளும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பிரசார பணிகளில் ஈடுபட்டன.  
தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது.
இதுபற்றி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வ கார்க் கூறும்பொழுது, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ந்தேதிக்கு 48 மணிநேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

போலீசாரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்த பெண் ..மாறி மாறி பலாத்காரம் செஞ்சாங்க, எந்த இடம்னு தெரியல', தஞ்சை அருகே

  Divakar M | Samayam Tamil: தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்காக்கு உட்பட்ட மேலதிருப்பந்துருத்தி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் வெப்படை போலீசார் தன்னை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த புகார் தொடர்பான வழக்கை தஞ்சை எஸ்பி தலைமையில் பெண் டிஎஸ்பி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
அதாவது, பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு நடந்ததாக கூறிய மனுவில், எனது நண்பரை கைது செய்த வேப்படை போலீசார் என்னிடமும் விசாரிக்க வேண்டும் என அழைத்தனர்.
அதன் பேரில் சென்ற என்னை,வேப்படை சிறப்பு போலீசார் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு ஏதோ ஒரு கட்டடத்துக்கு கொண்டு சென்று ஒரு அறைக்குள் அடைத்து பூட்டி விட்டனர். பின்னர் மது குடித்தவர்கள் என்னை மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
10 மணி நேரம் என்னை விடாமல் வன்கொடுமை செய்தனர்'' என்று அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தாரணி, இந்த வழக்கு தஞ்சை எஸ்பி தலைமையில் பெண் டிஎஸ்பி விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் - காவல் அதிகாரி பலி

 மாலைமலர் :வாஷிங்டன்,  அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு தடுப்பு பகுதியில் மோதியுள்ளார்.  இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதன்பின் காரில் இருந்து வெளியே குதித்த அதன் ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார்.  இதில் அதிகாரி ஒருவர் பலியானார். இதனால் கேபிடால் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிய வரவில்லை. அவரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறுகையில், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்.  ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ காரில் வாக்குகள் பதிவான இயந்திரம் வந்தது எப்படி?

BBC :அஸ்ஸாமில் பாஜக வேட்பாளர் ஒருவரது காரில் இருந்து வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்,
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரட்டாபாரி என்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 4 தேர்தல் பணி அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“ஏப்ரல் 1ஆம் தேதி ரட்டாபாரி தனித் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா எம்.வி பள்ளி வாக்குச்சாவடியில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் துரதிருஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டனர்.

டோல்கேட் வழிப்பறி கொள்ளை! கேரளத்தில் 3 டோல் கேட் ஆனால் தமிழகத்தில் 52 டோல் கேட்

டாக் நியூஸ்  :கேரளத்தில் 3 டோல் கேட் ஆனால் தமிழகத்தில் 52 டோல் கேட்???
தமிழ்நாட்டில் "டோல்கேட்" மூலம் வாகனங்களை இயக்குபவர்களிடம் வழிப்பறிக் கொள்ளை நடக்கிறதா?
இதிலென்ன சந்தேகம்..
கேரளாவில்,
1,782 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும், 3 டோல்கேட்களே உள்ளன.
15,437 கி.மீ. தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட மகாராட்டிராவில் 44 டோல்கேட்களே உள்ளன.
5,381 கி.மீ .தூரமே நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன.
ஆக , கேரளாவுடன் ஒப்பிடும் போது, 9 டோல்கேட்களும்,
மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும் போது, 15 டோல்கேட்களுமே இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கை 74.
இது பணம் பிடுங்கலா? இல்லையா?
ஏன் இப்படி தமிழகத்தில் மட்டும் இப்படி அதிக அளவில் டோல்கேட்டுகள்?
எதேனும் சிறப்புக் காரணங்கள் இருக்கிறதா இதற்கு? தார் போடும்போது தங்கத்தைக் கலக்குகிறார்களா?
அல்லது தமிழர்கள் ரொம்ப நல்லவர்கள் என்பதாலா?
நம்மிடம் இருப்பது வெறும் கேள்விகள் மட்டுமே?

எங்கே உங்கள் கதாசிரியர்கள்? எங்கே உங்கள் வசனகர்தாக்கள்? எங்கே உங்கள் எழுத்தாளர்கள்? .. எங்கே எங்கே எங்கே ?

ராதா மனோகர்  : ராஜஸ்தான் குஜராத் மகாராஷ்டிரம் பஞ்சாப் வங்காளம் ஒடிஷா மேலும் பல மொழி பேசும் மாநில மொழி திரைப்படங்கள் பாடல்கள் பெரும்பாலும் அழிந்தே விட்டன.
தமிழ்நாடு முன்னெடுத்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களும் பாடல்களும் இன்றும் உயிரோடு உள்ளன.
மாநில மொழிகளை தமிழ்நாடு காப்பாற்றியதன் மூலமாக கலைத்துறையிலும் ஊடக துறையிலும் பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாக தென்னிந்திய கலைத்துறை உயிரோடு இருக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் தமிழர்களின் வீதம் 6.7 மட்டுமே .ஆனால் தமிழ் திரைப்படங்களின் வியாபாரம் 2019 கணக்கின் படி இந்தியாவில்  13 வீதமாகும்  
இதைவிட உலக நாடுகளில் தமிழ் திரைப்படங்களும் பாடல்களும் தமிழக ஊடகங்களினால் கிடைக்கும் அந்நிய செலவாணியும் இன்னும் சரியாக கணக்கிடப்படவில்லை  
அவை குறிப்பிடத்தக்க அளவில் தற்போது உயர்ந்துள்ளன. குறிப்பாக திரைப்படங்களின் டிஜிட்டல் வெளியீட்டுக்கு பின்பாக.
வெறும் பத்து பதினைந்து சதவீதம் அளவே இருந்திருக்க வேண்டிய ஹிந்தி திரைப்படங்களின் இந்திய வியாபாரம்,
இன்று 44 வீதமாக வீங்கி இருப்பது வட இந்திய மாநில மொழிகளின் அழிவினால் கிடைத்த திருட்டு வியாபாரமாகும்.
தமிழ்நாட்டின் மீது வடவர்கள் மேற்கொள்ளும் காலனித்துவ பாணி ஆதிக்கத்தின் பின்னணியில் ஹிந்தி மொழி திணிப்பு இருப்பதை இந்த கண்ணோட்டத்திலும் நோக்கவேண்டும் .

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ரெட் சல்யூட் தோழர் ரோகிணி… நடிகை ரோகிணி Actor Rohini Election Campaign DirectorLenin

puthiyamugam.com :தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டு தன்னுடைய பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் திரைப்படப் கலைஞர் ரோகிணி..

தமிழக அரசியல் களத்தில் நடிகர்கள் நடிகைகள் வருகை புதிதல்ல என்றாலும் திரைக் கலைஞர் ரோகிணி போன்றவர்கள் உழைக்கும் மக்களின் அரசியலை முன்னெடுத்து இடதுசாரி அரசியலோடு பயணிப்பது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன். தமிழகத் அரசியலில் திரை நட்சத்திரங்களை தேர்தலுக்கு மட்டுமே காட்சிப் பொருளாக பயன்படுத்துவதும் ஒப்பந்த அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகர் நடிகைகள் மத்தியில் அன்றாடம் உழைக்கும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும்

570 கோடி….. சி.பி.ஐ விசாரிக்காது… டீல்… பங்கு… கமிஷன்… ப்ளாக் மெயில் .. பிடிபட்டதும் பேச்சு வார்த்தை . பேசிக்கிறாய்ங்க flashback

dhinamalar :   ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க…
இந்த பணம் முழுக்க  உயிரை பறித்த டாஸ்மார்க் பாவப்பணம். இதை மதுவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டும்.

கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம். கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம். இட்லி பிடிபட்ட 3 கன்டைனர்களிலும் ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30 பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம். மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி. ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான் பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம். இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும் அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம். இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பரிமாறபட்டதாம்.

பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து.... கணவருக்கு கொரோனா தொற்று1

மாலைமலர் :பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை என்றாலும் டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து புதுடெல்லி:காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை. எனினும், டாக்டர்களின் அறிவுரைப்படி அவரும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் தனது பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
அசாம் மாநிலம் கோல்பாரா, கோலக்கஞ்ச், கயாகுச்சி ஆகிய இடங்களில் இன்று அவர் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதனை ரத்து செய்யும்படி மாநில காங்கிரஸ் நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார்.

ஸ்டாலின் வீட்டிலும் பாஜக அரசு சோதனை .. தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுக பாஜக கூட்டணி அடாவடி

kalaignarseithigal.com : “நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது மடல் வருமாறு:

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

இதனைப் படிப்பதற்குக் கூட அவகாசமின்றி கடும் கோடை வெயிலில், பகல் - இரவு பாராது தி.மு.கழகக் கூட்டணியின் வெற்றிக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். உங்களில் ஒருவனான நானும் ஓய்வின்றிப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.May be an image of 1 person, outdoors and text that says 'தேர்தல் BREAKING SUN /N”S JKCISEOR திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பாரதி கேள்வி! "கடந்த 2016 தேர்தல் நேரத்தில் ₹570 கோடி கண்டெய்னர் லாரியில் பிடிக்கப்பட்டது; அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்று மத்திய அரசு தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை" SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 02APR2021'

2021-ஆம் ஆண்டு பிறந்தபோதே இது நமக்கான ஆண்டு - தி.மு.கழகத்தின் ஆண்டு - பத்தாண்டுகாலமாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் உதயசூரியன் உதிக்கும் ஆண்டு என்பதைத் தெரிவித்திருந்தேன். உடன்பிறப்புகளான உங்களையும் மக்களையும் நம்பித்தான் அதனைச் சொன்னேன்.

திமுக எம்.பி சி என் அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை?

nakkheeran.in - ராஜ்ப்ரியன் : கடந்த வாரம் திமுக தலைவரின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் எ.வ.வேலு வீடு, கல்லூரி, அலுவலகம் என சுமார் 16 இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. அந்த ரெய்டில் பணமாக எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரிடமும், அவரது மகனிடமும் அரசியல் தொடர்பாகப் பலவிதக் கேள்விகளை எழுப்பியது வருமான வரித்துறை.... இந்தச் சோதனையின்போது, வேலு குடும்பத்துக்கு அப்பாற்பட்ட இரு முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே வேலுவுடன் இருந்தனர். அதில் முக்கியமானவர் திருவண்ணாமலை தொகுதி எம்.பியும், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை. அவரிடம் சில கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு அவரை கண்டுகொள்ளாமல் விட்டனர்.

உத்தரப் பிரதேசம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்தியாவில் நம்பர்- 1 மாநிலமாக திகழ்கின்றது

May be an image of 1 person

திரு.ி.லஜபதி ராய் Lajapathi Roy , Senior Advocate. திருவாளர் ஆதித்யநாத்தும் சட்டத்தின் ஆட்சியும் .! 

மாணவர்களுக்கு பெற்றோர் அறிவுரை கூறும்போது பக்கத்து வீட்டில் நன்றாகப் படிக்கும் மாணவனைப் போல படி என உதாரணம் கூறுவது வழக்கம் அதை விடுத்து மூன்றாம் வீட்டில் படிக்காமல் கத்தியையும் கல்லையும் தூக்கிக்கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டு திரியும் மாணவனைப்போல நீயும் பொறுக்கியாக மாறு என யாரும் அறிவுரை கூறுவதில்லை , 

அப்படிக் கூறினால் ஊரே சிரிக்கும். அதைப்போல இருக்கிறது  திருமிகு வானதி அவர்களுக்காக கோயம்புத்தூரில் பிரச்சாரம் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட திருவாளர் ஆதித்யநாத் அவர்களின் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் உத்தரப் பிரதேச ஆட்சியைப் போன்ற ஆட்சி வேண்டுமானால் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறிய அவரது பேச்சு.    09.01.2020 நாள் இந்துப் பத்திரிகை

மேற்கு வங்கத்தில் இதுவரை பிரசாரம் செய்யாத ராகுல், பிரியங்கா... உண்மைக் காரணம் என்ன?

.puthiyathalaimurai.com :மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணாமுல் கட்சிகள் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் இன்னும் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவில்லை. இதற்குப் பின்னால் பல உள்ளரசியல் இருப்பது தெரியவருகிறது.

மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை செவ்வாய்கிழமையுடன் நிறைவடைந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை அந்த மாநிலத்தில் நடந்த பேரணியிலோ, பொதுக்கூட்டத்திலோ காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ஆனால் அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல் பரப்புரைகளில் ராகுல் காந்தி ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதிகளில் ராகுல் காந்தி கேரளாவுக்கு செல்லவுள்ளார். பிரியங்கா காந்தி கேரளாவில் தனது முதல் பேரணியில் உரையாற்றியிருக்கிறார். 

தூக்கிப்போட்டு மிதிப்பேன் - அண்ணாமலை: திமுககாரனை முடிஞ்சா தொட்டுப் பாரு - கனிமொழி

minnambalam :சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் பிரச்சாரத்தின் சூடு ஒருபக்கம் ஏறிக் கொண்டிருக்க பிரச்சாரத்தின் தரம் ஒருபக்கம் இறங்கிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில்தான் திமுக கரூர் மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி மீது அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான அண்ணாமலை நடத்தியிருக்கும் வார்த்தைத் தாக்குதல்.   மார்ச் 31ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “செந்தில்பாலாஜியெல்லாம் தூக்கிப்போட்டு மிதிச்சா பல்லுகில்லெல்லாம் வெளிய வந்துடும், எவ்ளோ பெரிய ஃபிராடெல்லாம் பாத்துட்டு வந்திருப்பேன் நான். நீங்கள்ளாம் ஒரு ஆளுக, நீங்கள்லாம் ஒரு இது. உனக்கு பயந்து கை வைச்சா அண்ணாமலை வைலன்ஸ் பண்றான்னு மாத்துவியாம்.           அதனால இங்க இருக்குற திமுகக்காரனுக்கு எச்சரிக்கை வச்சிட்டுப் போறேன். நான் வன்மத்தைக் கையிலெடுக்க தயாராக கிடையாது. அஹிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம், அதைக் காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன்.

ஒரு முன்னாள் புலி போராளியின் (வாசுதேவன்) ஒப்புதல் வாக்குமூலம்! புலிகளின் டெலோ படுகொலைகள்!

May be an image of ‎sky, palm trees and ‎text that says '‎הי கந்தன் قاه 6180 கந்தன் கருணை படுகொலை நினைவு தினம்‎'‎‎

நெற்றிக்கண் : டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பில் இருந்த வாசுதேவன் ஆற்றிய உரை.:
மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண்ன் என்பது  உலகை குருடாக்கிவிடும்.மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார்.
இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும்.
ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய ஆசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்!

எங்கள் பிள்ளைகளுக்கான பாதை இங்க தொடங்கிருயிருக்கு.,நாங்கள் வளர்ந்திருக்கோம்... (உண்மை கதை)

No photo description available.

தொடிதோட் செம்பியன்  : ஏன் திமுக ஆட்சி வேண்டும் :நேற்று ஒரு மே17 தம்பி ஒரு விவாதத்துல என்கிட்ட சொன்னாப்ள...
நீ,லாம் காலம் முழுதும் இப்படி கட்சிக்கு அடிமையா இப்படி கத்திட்டேதான் இருக்கனும் உனக்கும் கட்சி எதுவும் செய்யாது, மக்களுக்கும் எதுவும் செய்யாதுனு....
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மதம் மாறிய குடும்ப பின்னனி எங்களோட குடும்பம்., எங்கள் குடும்பம் மதம் மாறியதே அந்த ஒடுக்கப்பட்டோம் எனும் சாதிய அடையாளமும் அதனின் பலனால் கிடைக்கும் அவமானங்களும் மாறுவதற்குதான்...முழுதாக மாறியதா என்று கேட்டால்.. மாறவில்லைனுதான் சொல்லனும்...
எங்களோட தாத்தாவோட அப்பா பெயர் குப்பான்டி ( பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூதாயத்தின் மக்களோட பெயர் அந்தகாலத்தில் இப்படியாகத்தான் இருக்கும் பெயர் கூட இப்படித்தான் இழிவாகத்தான் இருக்க வேண்டும் ) அந்த பெயர் பவுல்ராஜ் என மாறியதோடு நின்றது
இத்தனைக்கும் அந்த காலத்திலேயே நிலபுலன்கள் உடைய குடும்பம்தான் அந்த பட்டயங்கள்கூட உண்டு ஆனாலும் இழிநிலையை சுமந்துட்டுதான் இருந்திருக்காங்க..

தேர்தலுக்கு அப்புறம் பழனிச்சாமி அதிமுகவுல இருப்பாரா என்பதே சந்தேகம், எதுக்கு பயப்படணும்ன்னு நினைக்கிறாங்க.

May be an image of 1 person

திருஞானம் ஸ் : உளவுத்துறை, மீடியா , சுனில் டீம் என்று சகல தரப்பும் அதிமுகவின் படு தோல்வியை சொல்லி வந்த நிலையில் பழனிச்சாமி நம்பியது இரண்டே இரண்டை தான்.
1 . Front Page Media Mangement
2 . பணம்
இன்று அது இரண்டுமே அதிமுகவிற்கு கைகொடுக்க வில்லை என்பதை திடீர் என்று உணர்ந்தார் பழனிச்சாமி ?
பல ias ips அதிகாரிகளை உருவாக்கிய பயிற்சி பள்ளியினை நடத்தும் அண்ணன் ஒருவருக்கு கால் செய்து இது பற்றி கேட்டபோது...
தம்பி, தபால் ஓட்டு ஏறக்குறைய முடிஞ்சு போச்சு
கிட்டத்தட்ட திமுக தான் முழுசா வாங்கி இருக்கு.
வயதானவர்கள் ஓட்டு கூட திமுகவிற்கு முழுசா விழுந்திருப்பது பழனிச்சாமிக்கு ஒரு வித எரிச்சலை கொடுத்து இருக்கு,
இப்போ தான் தாங்கள் மக்களை விட்டு எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் மீடியா  மேனேஜ்மென்ட் மட்டும் களத்தில் எதிரொலிப்பது இல்லைன்னு பழனிச்சாமிக்கு புரிஞ்சி இருக்கு.
இறுதி நேரத்தில் பணத்தை அடிக்கலாம்ன்னு ஒவ்வொரு ஊரா கொண்டு போய் சேர்ந்ததில் பாதிக்கு மேல களவு போய்டுச்சு,
சில இடங்களில் பணத்தை எடுத்துகிட்டு ஓடிய ஆட்களை தேடி பிடிக்கும் பணிக்கு காவல் துறையை unofficial ஆ கேட்டு இருக்காங்க.

மம்தாவின் நந்திகிராம் தொகுதியில் பதற்றம் மக்களை வாக்களிக்க விடாமல் பாஜக குண்டர்கள் அடாவடி .. ஆளுநரை தொடர்பு கொண்ட மம்தா

தினகரன் : மேற்கு வங்கத்தில் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், இக்கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்த சுவேந்து அதிகாரியும் நந்திகிராம் தொகுதியில் மோதுகின்றனர். இதனால், இந்த தொகுதி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இங்கு நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே பதற்றம் நிலவியது. வாக்குப் பதிவு மையங்களில் திரிணாமுல் ஏஜென்ட்டுக்களை அனுமதிக்கவில்லை என பல புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நந்திகிராம் தொகுதியில் தங்கியிருந்த மம்தா பானர்ஜி, தனது படையுடன் பல்வேறு கிராம வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். போயல் பகுதிக்கு மம்தா சென்றபோது பாஜ ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். பல இடங்களில் இதுபோல் மோதல் நிலவியது.

செத்தல் மிளகாயில் ஆபத்தா?

May be an image of food
Farm to Table : செத்தல் மிளகாயில் ஆபத்தா? Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS, Post Graduate Diploma in Legal Medicine (DLM ), MD (Forensic Medicine) (குறிப்பு :- இப்பதிவில் உள்ள படம் வீட்டுத் தோட்டம் செய்பவர் ஒருவரால் நெற்றுக்கு விட்டதாக பகிரப்பட்டது. அதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு இங்கு பகிரப்படுகிறது. இதை உண்பதோ, கையாள்வதோ, நடவு செய்வதோ பின்விளைவுகளைத் தரும் என்பதனை Farm to Table அறிவுறுத்துகிறது.) அண்மையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் aflatoxin என்ற புற்று நோயினை உருகவாகும் toxin கண்டறியப்பட்டது. இவ்வாறு கண்டறியப்பட்ட செத்தல் மிளகாய் தனியார் களஞ்சியங்களில் இருந்து பாரிய அளவில் அதாவது 20 மெட்ரிக் தொன் என்ற அளவில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது உரிய தரச் சான்றிதழ் வரமுன்னரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுள்ளது .

வியாழன், 1 ஏப்ரல், 2021

தப்பி ஓடும் நோட்டுக்கட்டுக்கள் சென்னையில் ஒரே நாளில் சிக்கிய ரூ.10.35 கோடி.. சோதனையில் எலக்ட்ரானிக் பொருட்களும் பறிமுதல்

Devi Somasundaram படுதோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள், எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஜெயிக்க வாய்ப்பில்லை என்பதால், கடைசி கட்டத்தில் சிக்கியதை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடும் காட்சிகள் தமிழகம் முழுக்க அரங்கேறுகிறது.... பெருங்கவலையில் எட்ப்பாடி & கோ..

தமிழ் இந்து  :சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து நடத்திய வாகன சோதனையில் நேற்று ஒரே நாளில் 22 இடங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.10.35 கோடி ரொக்கப் பணம், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் (FST), நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் ஒருங்கிணைந்து சென்னை பெருநகரின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கைகள் செய்து வருகின்றனர்.

தமிழக மருத்துவ கல்லூரிகள் வடவர்களால் கைப்பற்றப்படுகிறது ! மோடியின் ஒப்புதல் வாக்குமூலம்

May be an image of text that says 'புதிய தலைமுறை வமம லக்குட #TNElection2021 சொரணையுள்ள தமிழர்களே உங்கள் கண்டனங்களைப்பதிவு செய்யுங்கள்! ELECTION BREAKING தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்கானது ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் -பிரதமர் மோடி ஆக உண்மை வந்துவிட்டது, நீட் என்பது தரத்தை அதிகப்படுத்த அல்ல,, வடநாட்டானுக்கு பங்குவைக்க,,, கொள்ளைகொடுக்க,, தமிழா, ,பாஸிச ஆர்எஸ்எஸ் மோடிஅரசு தமிழ்நாட்டுக்கு விரோதமானதே..!'

Gnanabharathi Chinnasamy :   "ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்கை தேசநலனைக் கருதி விட்டுத் தர ஒப்புக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி"
..............மோடி..
"தமிழகத்தில் உள்ள மருத்துலக் கல்லூரிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மாணர்களுக்கும் உரியது என்பதை தேசபக்தியுடன் ஒப்புக் கொண்டு நீட்டை ஏற்றுக் கொண்டஎடப்பாடி பழனிசாமிக்கு நன்றி"
.......மோடி தாராபுரத்தில் பேசியது.
தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பி.ரதேசம் என்று மாற்ற ஒப்புக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி"
..........யோகி ராஜவீதியில் பேசியது...
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான திருடடு பேமானிகள் யார் என்பதற்கு லேறு ஆதாரம் வேண்டுமா?
தொலைகாட்சி விவாதங்களில் தேவை இல்லாத விவாதங்களை பேசி மூளை சலவை செய்யும் பார்ப்பனர்கள்.
மற்றும் பாஜகவினதும் அவர்களின் அடிமைகளான அதிமுகவினதும்   எடப்பாடியின்  தொங்குசதைகள் இதை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள் ...

திமுக காங்கிரஸை புறக்கணிக்க வேண்டும்: உபி முதல்வர் யோகி ஆதித்த நாத்தின் அரிய பர்னிச்சர்கள்

May be an image of 1 person and text that says 'NEWS 7 TANEK FONEWS 31MAR2021 31 MAR 2021 REAKING NHTN கோவையில் பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரை கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும். தமிழகக் கோவில்களில் ரயில்நிலையத்தைப் போல் அனைவரும் வந்து போவதைக் காணமுடிகிறது. FOLLOW US FOLLOWU ON 951'
May be an image of 1 person and text that says 'தற்போதைய செய்தி பெண்கள் ஆறு மணிக்கு மேல் வெளியே வராமல் இருந்தால் பொள்ளாச்சி போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் -யோகி ஆதித்யநாத் f/hasthit /thanthitv Youlube/thanthite /hanthire wwwthanthitv.com THANTHIT'
May be an image of 1 person and text that says 'BIGNEWS 31 MAR 2021 NEWS TAMI BREAKING SIIN கோவையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரை "மொழியிலிருந்து பழக்க வழக்கங்கள் வரை மாறுதல் தேவை. தமிழர்களுக்குத் தீவிரமாக ஹிந்து கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்க வேண் CONE FOLLOW US ON අත TOCL 147 058 207 038 191 071 105 082 028 109 059 1548 83 051'
மின்னம்பலம் : தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தமிழகம் வந்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப்ரல் 1) காலை தனுஷ்கோடிக்குச் சென்று இயற்கை எழிலை ரசித்தார். உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று தமிழகம் வந்தார். காலையில் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மாலை விருதுநகரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சியான அ‌தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.  

அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பெண்களை அவமதிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் .

உத்தரப் பிரதேசத்திலிருந்து புண்ணிய பூமியான தமிழகத்துக்கு வந்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். பாரத நாட்டில் சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் சாதுக்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்தியாவில் அனைத்து பண்பாடுகள், கலாச்சாரம் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இந்த கலாச்சாரம், பண்பாடுகளை உலக நாடுகளில் உரக்கப் பேசி வருகிறார் பிரதமர் மோடி.

வன்முறைக்கு எடுத்துக்காட்டான கோவை யோகி பயணம் : வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம் ?

May be an image of 2 people and text that says 'ad Call 98431 22255 for more info Join our online prenatal classes sankalpa Based on Lamaze philosophy minmygsa කലnl කlde for a conscious pregnancy உடைக்கப்பட்டவை தேசதுரோகிகளுடைய கடைகள்தான். யோகிஜியை வரவேற்க இதை கூட செய்யாமல் இருந்தால்தான் தவறு. -வானதி சீனிவாசன்'kalaignarseithigal.com : தமிழகத்தில் வருகிற 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் ஆதரவு மற்றும் கருத்துக் கணிப்பு வரை அனைத்துமே தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் முதல் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கோவை வந்தபோது, கலவரத்தில் பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.ராசாவுக்கு 48 மணி நேரத் தடை: தீயாய்செய்த தேர்தல் ஆணையம் !

minnambalam : திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசாவுக்கு 2 நாள்கள் பிரச்சாரம் செய்வதற்குத் தடைவிதிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்த மாதம் 26ஆம் தேதியன்று பிரச்சாரத்தில் பேசிய ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியது, சர்ச்சைக்கு உள்ளானது. அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ராசாவிடம் நேற்று விளக்கத்தைக் கேட்டு வாங்கியது, தேர்தல் ஆணையம்.

தன் மீதான புகார் என்ன என்பதே தெரியாமல் எப்படி பதில்கூற முடியும் என ராசா கேட்டிருந்தார். ஆனால், அதை நிராகரித்த தேர்தல் ஆணையம், ராசாவின் விளக்கத்தை ஏற்கமறுத்து, 2 நாள் பிரச்சாரத் தடை விதித்தது.

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு

தாதா சாகேப் பால்கே விருது - ரஜினிகாந்த் நன்றி - YouTube
maalaimalar : சென்னை: இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசியலில் சீமான் .. அதிர்ச்சி தரும் சொத்துப்பட்டியல்

ஆண்டு வருமானம் வெறும் ஆயிரம் ரூபாய்., சீமான் சொத்து மதிப்பு விவரம்.! -  Seithipunal
he Kesava : சீமானின் சொத்து மதிப்பு விபரம்...* 1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.

யோகி இன் வருகையால் உத்தரபிரதேசக மாறுகிறதா கோயம்புத்தூர்?

Kandasamy Mariyappan  : நான் 2000 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் கோயம்புத்தூரில் வாழ்ந்தவன்.
90களில் பார்த்த கோயம்புத்தூர், 2000த்தில் முற்றிலும் மாறியிருந்தது!
May be an image of 4 people and people standing

அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!
கோயம்புத்தூர் நகரத்தை வடக்கத்திய கும்பல் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள, பல நாசகார செயல்களை செய்து வந்துள்ளதை...
மீண்டும் 2010, 11, 12 காலகட்டங்களில் பணி நிமித்தமாக கோயம்புத்தூர் சென்றபொழுதுதான் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது...!!
சங்க்பரிவார், இந்து முன்னணி போன்ற இந்து அமைப்புகளை பயன்படுத்தி இசுலாமிய வெறுப்பை மட்டுமே மக்கள் மனதில் விதைத்து விட்டிருந்தனர்..!
இசுலாமிய வெறுப்பு என்ற ஒற்றைக் சொல்லை மனதில் ஏந்திய Zombies போன்ற இளைஞர்களை, பெண்கள் மற்றும் போதைகளுக்கு அடிமை படுத்தி, தங்களுடைய அடியாட்களாக அவர்களை மாற்றி வைத்துள்ளனர்..!
இதோ நேற்று, அந்த வெறுப்பின் பலனை அறுவடை செய்ய தொடங்கியுள்ளது அந்த கும்பல்..!

யாழ்ப்பாண தீவுப்பகுதியை வளமாக்கும் (அலையாத்தி) கண்டல் காடுகள் – ஒரு கடற்படை அதிகாரியின் விடா முயற்சி

அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் (mangrove) எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (Mangrove forest) எனப்படும்.
சூழல் | தீவுப்பகுதியை வளமாக்கும் கண்டல் காடுகள் – ஒரு கடற்படை அதிகாரியின் விடா முயற்சி

 marumoli.com/ :கரையோரப் பகுதிகளை ஆழிப் பேரலை போன்ற பேரழிவுகளிலிருந்து காத்தல், மண்ணரிப்பைத் தடுத்தல் முதல் அருகே வாழும் மனிதருக்குத் தேவையான கடலுணவு மற்றும் எரிபொருட் தேவைகளை வழங்கிவரும் இயற்கையின் கொடையான கண்டல் தாவரங்கள்கடந்த காலங்களில் இலங்கையில் பேரழிவுக்குட்பட்டு வந்தன. போர்க்காலத்தில் பெரும்பாலானவர்கள் தமது விறகுத் தேவைக்கு இத் தாவரங்களையே பெரிதும் பயன்படுத்தினார்கள்

குறிப்பாக இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலுள்ள பல தீவுகளில் இக் கண்டல் காடுகள் பேரழிவுக்குள்ளாகி வந்தன. இதைத் தடுக்கவென இலங்கையின் அப்போதைய கடற்படை அதிகாரியான அட்மிரல் ரவிந்திரா விஜயகுணரத்ன ஒரு திட்டத்தை ஆரம்பித்தார். 2011 இல் அவரால் தொடக்கி வைக்கப்பட்ட திட்டம் இப்போது வெற்றியளித்திருப்பது குறித்து அவர் மிகவும் பெருமிதமடைகிறார்.

கோவையில் பாஜக-வினர் கலவரம் ! உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!

May be an image of one or more people
வினவு செய்திப் பிரிவு : பிரதமர் மோடி நேற்று (30-03-2021) தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். அடுத்தபடியாக மீண்டும் ஏப்ரல் 2-ம் தேதியன்று மதுரையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் மோடி கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏப்ரல் 1-ம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  “ஐ.பி.எஸ்.” அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இவற்றையெல்லாம் விட  மிக முக்கியமாக இன்று (மார்ச் 31) கோவையிலும் விருதுநகரிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்  உத்தரப் பிரதேச முதல்வரான ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்.

கொலை, கலவரம் செய்தல், கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றுவது ஆகியவற்றையே தொழிலாகக் கொண்ட ஒரு தொழில்முறை ரவுடி சாமியாரை முதல்வராகப் பெற்ற பரிதாபத்துக்குரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். தாம் பெற்ற முதல்வருக்கு ஏற்றவாறான “வெகுமதியை” போலீசின் போலி மோதல் கொலைகளாகவும், சங்க பரிவாரக் கும்பலின் அடாவடிகளாகவும், லவ் ஜிகாத் சட்டம் போன்ற மனிதகுல விரோதச் சட்டங்களாகவும் அந்த மக்கள் பெற்று வருகின்றனர்.

பா.ஜ.கவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது; தமிழகத்தில் தி.மு.க ஆட்சியமைக்கும்” - ஊடகவியலாளர் சாய்நாத் பேட்டி!

“பா.ஜ.கவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது; தமிழகத்தில் தி.மு.க ஆட்சியமைக்கும்” - ஊடகவியலாளர் சாய்நாத் பேட்டி!தீக்கதிர் : நாட்டில் தேர்தல் நடைபெறுகிற அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு உதவுவதற்காக மத்திய ஏஜென்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு இறங்கியுள்ளன என்கிறார் பி.சாய்நாத். இவர் கிராமப்புற மக்களின் வாழ்க்கைச் செய்திகளை வெளிக்கொணரும் பிரபல ஊடகவியலாளர்; மகசேசே விருதுபெற்றவர். இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் ஒரு தேர்தல் கமிஷன் அண்மைக் காலத்தில் இருந்ததில்லை என்கிறார். மிக அதிகமாய் பலவீனமாக்கப்பட்ட மத்திய ஏஜென்சிகளில் ஒன்றுதான் தேர்தல் கமிஷன் என்கிறார்.

பி.சாய்நாத், பிரபல மலையாள நாளேடான ‘மாத்ருபூமி’யின் இணையப் பதிப்புக்கு அளித்த சிறப்பு நேர்காணல் பின்வருமாறு:

நீண்ட நாட்களாக நான் மேற்கு வங்கத் தேர்தலில் கவனம் செலுத்தாததால் அங்கு இருக்கிற நிலைமையை சரியாக அறிந்துகொள்ளவில்லை. மேலும், இப்போது ஊடகங்களில் வருகிற பலவும் நம்ப முடியாதவையாக இருப்பதால் ஊடகங்கள் சொல்வதை மட்டுமே பார்த்து வெற்றி வாய்ப்பைப் பற்றி என்னால் கூறமுடியவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளையே கார்ப்பரேட் ஊட கங்களில் பலரும் வெளிப்படுத்துகிறார்கள்.

மேற்குவங்காளத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி : கொல்கத்தா,   294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி, 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
அதில் சுமார் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
எஞ்சிய 7 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்
பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
அதன்படி, 2-ம் கட்ட தேர்தல் இன்று 30 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடும்
நந்திகிராம் தொகுதியும் அடக்கம். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும், மம்தாவுக்கு நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர் சுவேந்து அதிகாரி. 

ஆடு மாடு வளர்க்க ஆட்கள் தேவை மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம்! குலக்கல்வி பெறுவோம் குட்டிச்சுவராவோம்

 Prabhakar Annamalai: இதில என்ன நகைமுரண்னா, நம்ம பசங்க இப்ப என்னவோ ஜெட்ல பறந்து போயி காலையில் டோக்கியோல பிசிநெஸ் பேசிட்டு, மதியம் நியூயார்க்ல லஞ்ச் சாப்பிட்டு நைட் நியூசில தூங்கிற வேலை செஞ்சிட்டு இருக்க மாதிரி...
வாங்கடா ஆடு மாடு மோய்ப்போம்ன்னு கூப்பிட்டுகிறானுங்க...
இதைத்தானேடா, குலக் கல்வி என்கிற பெயர்ல நம்மை நூற்றாண்டு கணக்கா ஆடு, மாடு மேய்ச்சிக்கிட்டு எலி ஒடுற மோட்டு வளையத்தை பார்த்துக்கிட்டு படுத்துக் கிடக்க விட்டானுங்க. அதற்குள்ளும் மறந்திடிச்சா? கன்றாவி
Eswar Guru : ஆடு மாடு மேய்க்கிறதாம், பால் கோவா, நெய் செஞ்சி வல்லரசு ஆவப்போறாராம் மூதி.
நம்ம ஊர்ல ஏற்கனவே ஆடு மாடு மேய்க்கிறவன், பால் கோவா விக்கிற பேக்கரி காரன், நெய் விக்கிற கிழவி எல்லாம் அப்படியே முன்னேறி கிழிச்சி தள்ளிட்ட மாதிரி பேசுறான். பிற்போக்குவாயன்.
பார்ப்பன கைக்கூலி.

புதன், 31 மார்ச், 2021

ஆத்திரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது சாணம் வீசிய அ.தி.மு.க தொண்டர்! 10 வருஷமா என்ன செஞ்சீங்க?”

kalaignarseithigal.com தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம், '10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை, இப்போது வாக்கு கேட்டு வந்துட்டீங்களா... அ.தி.மு.க ஒழிக, ஓ.பி.எஸ் ஒழிக' எனக் கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியாமல் பாதியிலேயே வீடுதிரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போடி தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரத்தில், வாக்கு சேகரிக்க நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென '10 ஆண்டாக எதுவும் செய்யவில்லை' எனக் கூச்சலிட்டவாறே, கையில் வைத்திருந்த சாணத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் மீது திடீரென வீசினார். ஆனால், சாணம் ஓபிஎஸ் மீது விழாமல், அவருக்கு பாதுகாப்பாக நின்ற போலிஸார் மீது விழுந்தது.

தக் ஷி ண பிரதேச வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பு!

May be an image of 1 person and text that says 'BIGNEWS 31 MAR 2021 NEWS TAMI BREAKING SIIN கோவையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரை "மொழியிலிருந்து பழக்க வழக்கங்கள் வரை மாறுதல் தேவை. தமிழர்களுக்குத் தீவிரமாக ஹிந்து கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்க வேண் CONE FOLLOW US ON අත TOCL 147 058 207 038 191 071 105 082 028 109 059 1548 83 051'
May be an image of 4 people, including Nilavinian Manickam and Thagadoor Sampath and text

" தக் ஷி ண பிரதேசத்திற்கு " அவர்களின் முடிவான தீர்மானம் இனி தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை என்பதுதான் தமிழ் நாட்டில் இருந்து பஜாக கூட்டணிக்கு விழும் ஒவ்வொரு வாக்குகளும் வெறும் வாக்குகள் அல்ல .. உங்களுக்கு நீங்களே வைத்து கொள்ளும் கண்ணிவெடி என்பது ஞாபகத்தில் இருக்கட்டும் (இந்த போஸ்டரில் இருப்பது இதுதான்) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு கேட்டு தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும் உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்ய நாத் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம் 

மின்னம்பலம் :கோவை மண்ணிலிருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (மார்ச் 31) தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்தார்.

தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராசா அனுப்பிய 5 பாயிண்ட் பதில் கடிதம்!

May be an image of 1 person and indoor

minnambalam : ஆயிரம்விளக்கு தொகுதியில் ஆ.ராசா பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டீசுக்கு, அவர் இன்று (மார்ச் 31) இடைக்கால பதிலை அளித்திருக்கிறார். மின்னஞ்சல் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ராசா அனுப்பிய அந்த பதில், ஏன் இடைக்காலமானது என்பதற்கும் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

அதன் விவரம்:

” 1. முதலமைச்சரைப் பற்றி அவதூறாகவோ இழிவுபடுத்தும்படியாகவோ பெண்கள், தாய்மை பற்றி அவதூறாகவோ தரக்குறைவாகவோ நான் பேசுவதாகச் சொல்லப்படுவதை மறுக்கிறேன்.

2. அம்பேத்கர், பெரியார், அண்ணாவின் மாணவனாக, கலைஞர் கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட ஒருவனாக, திமுக உறுப்பினராக, பெண்களை அவமதிக்கும் இத்தகைய செயல்களில் நான் ஈடுபட்டதில்லை, ஈடுபடுவதில்லை, இனியும் ஈடுபடப்போவதும் இல்லை. திராவிடர் இயக்கத்தின் அடித்தளமே பெண்களுக்கு அதிகாரமளிப்பதும் அவர்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளைப் பெற்றுத்தருவதும் ஆகும். இத்தகைய இயக்கத்தைச் சேர்ந்த யாரும் தாய்மைக்கோ பெண்களுக்கோ அவமதிப்பு நேரும்படியாக நடந்துகொள்வதை கனவில்கூட நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.

தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
maalaimalar :சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் தளர்வுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகம் பரவி வருகிறது. எந்த சமயத்திலும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.> இதில் இந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த மாதத்துக்கும் நீடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இன்று பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது. நோயை கட்டுக்குள் கொண்டுவர ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

ரெயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது

ரெயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது

daylithanthi :புதுடெல்லி,கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது.   

அதைத் தொடர்ந்து, ரெயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரெயில் பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரைத்தார்.                                   மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்க அவர் இவ்வாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.                          கடந்த 16-ந் தேதி முதல் இதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்ட மேற்கு ரெயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் துணைப்பை துண்டித்து விடுகிறது.ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தாங்கள் இதை அமல்படுத்தி வருவதாக மேற்கு ரெயில்வே தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல் தற்போது வலியுறுத்தப்படுவதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெற்கு ரெயில்வேயும் அறிவித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசியலில் சொல்லின் செல்வர் மட்டக்களப்பு செ.இராசதுரை முன்னாள் அமைச்சர்

May be an image of 1 person and text that says 'கலாநிதி செல்லையா இராசதுரை'
Ruban Mariarajan : இரா.சாணக்கியன் எம்.பிக்கு கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் ஆதரவு அதிகரித்துவருகிறது.
அதேபோலவே 1956 முதல் 1977 வரையும் தமிழர்கள் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்டவர்தான்
மட்டுநகர் முதல்வர் சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை.
1961 சிறிமாவோ ஆட்சியில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப்போராட்டத்தில் கைதாகி 6 மாதங்கள் அவசர காலச்சட்டத்தின் கீழ் பனாகொடை இராணுவ முகாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர். மட்டக்களப்பு கச்சேரியின் முன்பாக இப்போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்.சத்தியாக்கிரகம் இடம்பெற்று இவ்வாண்டுடன் 60 வது ஆண்டு.
தமிழரசுக்கட்சிக்கு சட்டத்தரணிகள் எம்.பிக்களாக வரும்போது மட்டக்களப்புக்கு சிறந்த தலைவன் இளைஞனான இராசதுரையே என்று தந்தை செல்வநாயகம் தெரிந்தெடுத்து 1956 தேர்தலில் போட்டியிட வைத்தவர்.தந்தை செல்வா

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு + கொலை வழக்குகளுக்கு என்ன நடக்கிறது flashback

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: நடந்ததும் நடப்பதும்! மின்னம்பலம் : பொள்ளாச்சியில் இளம்பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த சதீஷ், பக்கோதிபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகிய நால்வரும் நண்பர்கள். திருநாவுக்கரசு குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணை வீடொன்று சின்னப்பம்பாளையம் ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ளது. ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகும் பெண்களை, இந்த வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் சபரிராஜன். பொள்ளாச்சி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல கல்லூரி மாணவிகளை சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் கும்பல் தனியறையில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோவாக எடுத்து அந்த பெண்களை மீண்டும் மீண்டும் மிரட்டிச் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

நடிகை ரோஜாவுக்கு ஆபரேஷன் ஆந்திர நகரி தொகுதி எம் எல் ஏ

cinema.maalaimalar.com :  ஆந்திரா நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜாவிற்கு ஆபரேசன் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா.
இவர் சூரியன், உழைப்பாளி, வீரா, ராஜமுத்திரை, என் ஆசை ராஜாவே, ராசையா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சின்ன ராஜா, ஹவுஸ்புல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். பின்னர் ஆந்திர அரசியலில் ஈடுபட்டு தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் பிரச்சினை இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பை கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது கர்ப்பப்பை ஆபரேசன் செய்து கட்டி அகற்றப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

சேலம்: போலீஸ் நெருக்கடியால் பெண் தற்கொலை? விசாரணை கோரி உறவினர்கள் மறியல்!

சேலம்: போலீஸ் நெருக்கடியால் பெண் தற்கொலை? விசாரணை கோரி உறவினர்கள் மறியல்! -  Oneindia Tamil
kalaignarseithigal.com   : சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பூர்ணம். இவரது கணவர் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் அவரது மகன் அஜித்குமாருடன் வசித்து வந்தார்.
அஜித்குமார் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பார்சல் சேவை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அஜித்குமார் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருவரும், திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் அஜித்குமார் மீது புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார், அஜித்குமாரின் தாயாரை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, மகன் இருக்கும் இடத்தைச் சொல்லுமாறு சம்பூர்ணத்தை அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர்.
மேலும், மகனை காவல்நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.இதனால் மன வேதனையடைந்த சம்பூர்ணம், மார்ச் 26ம் தேதி இரவு விஷம் குடித்துள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சம்பூர்ணம் உயிரிழந்தார்.

"உயிரையே விட்டுடுவேன்".. சுகர் இருக்கு, பி.பி. இருக்கு.. மயக்கம்வருது.. மாத்திரை போடறேன்.. கடைசியில் விஜயபாஸ்கர் புலம்பல்

 Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: "தோற்றுவிட்டால் உயிரையே விட்டுடுவேன்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீர் வடியும் போஸ்டர் விராலிமலையை வியக்க வைத்து வருகிறது.
இந்த முறை அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்..
இவர் 3வது முறையாக இந்த தொகுதியில் களம் காண்கிறார்.
அதனால், தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்...
இதுபோக, இவர்களது 2 மகள்கள், அப்பா, அண்ணன் என மொத்த குடும்பமும் விஜயபாஸ்கருக்காக வாக்கு கேட்டு வருகிறார்கள்.
வழக்கமாக விஜயபாஸ்கரின் மகள்கள் படுதிறமைசாலிகள்..
இவர்களின் பேச்சு ஒவ்வொரு தேர்தலின்போதும் அந்த தொகுதி மக்களின் மனசை கவர்ந்து வருகிறது. 

காடுவெட்டி குருவின் மனைவி.. பாலுவின் வாக்குகளை பிரிப்பாரா..?

Kaduvetti Guru's wife .. Will  divide Balu's votes ..?
nakkheeran.in - எஸ்.பி. சேகர் : ஒருங்கிணைந்த அரியலூர் - பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆண்டிமடம், ஜெயங்கொண்டம்,  அரியலூர்,  வரகூர்,  பெரம்பலூர்  என ஐந்து தொகுதிகள் இருந்தன. 2011இல் தொகுதி மறுசீரமைப்பின்போது, ஆண்டிமடம் தொகுதியில் இருந்த செந்துறை ஒன்றியத்தை வரகூர் தொகுதியில் இணைத்து குன்னம் என்று பெயர் வைக்கப்பட்டது. அதேபோன்று, ஆண்டிமடம் ஒன்றியத்தை ஜெயங்கொண்டம் தொகுதியில் இணைத்தனர். ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு என்று பலமான வாக்கு வங்கி  உள்ளது. இதை ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும் எதிரொலித்தன. அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் பாமக ஜெயங்கொண்டம் தொகுதியை வலியுறுத்தி வாங்கியுள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தால் : எச்சரித்த மோடி

மின்னம்பலம் :திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
அவரையும் வேட்பாளர்களையும் ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30) தாராபுரம் - உடுமலை சாலையில் பிரச்சாரம் செய்தார்.
இதற்காக அவர் டெல்லியிலிருந்து  கோவை வந்தார். முதலில், கேரளா சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து தாராபுரம் வந்து பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரக் கூட்டம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கரில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதில், பாஜக வேட்பாளர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில்  பிரதமர் மோடிக்கு எல்.முருகன் வேல் ஒன்றைப் பரிசாக  வழங்கினார். இதைத்தொடர்ந்து  பேசிய பிரதமர் மோடி, வெற்றி வேல், வீர வேல் என்று முழக்கமிட்டார். அப்போது கூட்டத்திலிருந்த பாஜக தொண்டர்களும்  வெற்றி வேல் வீர வேல் என முழக்கமிட்டனர்.

செவ்வாய், 30 மார்ச், 2021

மோசடி வழக்கில் கர்நாடகா இராம சேனை நிறுவனர் கைது,

Muthu Selvan : தமிழ்நாட்டு   வாக்காளர்களே! நீங்கள் அதிமுக+பீஜேபீ+ பாமக

கூட்டணிக்கு அளிக்கும் வாக்குகள் இத்தகைய கயவர்களுக்கு விரிக்கும் சிகப்புக் கம்பளம்!
மோசடி வழக்கில் இராம சேனை நிறுவனர் கைது,
மங்களூரு, கருநாடகம் 40 அகவை நிரம்பிய பிரசாத் அத்தாவர் என்பவர் 'இராம சேனை' என்னும் பெயரில் ஒரு சங் பரிவாரத் துணை அமைப்பை நிறுவி உள்ளார்.
இந்த அமைப்பின் தொண்டர்கள் அல்லது குண்டர்கள்  இந்துத்துவ வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள்.
மங்களூர்ப் பகுதியில் அந்த அமைப்பின் வெறியாட்டத்தை அனைவரும்  அறிவர்.

மங்களூரில் ஒரு மது குடிப்பகத்தைத் தாக்கிய வழக்கும் அவர் மீது உண்டு.
ஒரு பேராசிரியர் ஒருவருக்கு ராய்ச்சூர் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, முப்பது லட்ச ரூபாய்க்குப்.பேரம் பேசியுள்ளார்.
பேசிய தொகையில் 17.5 லட்சம் ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டு எஞ்சிய தொகைக்கு தொகை குறிப்பிடாத காசோலைகளை மிரட்டி வாங்கி உள்ளார்.
பேராசிரியர் ஜெயசங்கர் மங்களூர்ப்.பல்கலைக் கழகத்தில் நுண் உயிரியல் பேராசிரியராகவும் கல்லூரி வளர்ச்சிக் குழு இயக்குநராகவும் பணியாற்றுபவர். அவருக்குத் துணைவேந்தர் பதவி ஆசை காட்டி, இராம சேனை நிறுவனர் ஏய்த்துள்ளார்.
தனக்குப் பல அரசியல் பெருமக்கள் நெருக்கமானர்கள் என்றும் தன்னால் அவர்கள் உதவியுடன் எப்படிப்பட்ட வேலையைதும் வாங்கித தர முடியும் என்றும் கூறி, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒளிப்படங்களை அத்தாவர் காட்டி.மயக்கி உள்ளார். 

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை,ரூ 33 லட்சம் அபராதம் .. சொத்து குவிப்பு வழக்கு..

Vigneshkumar  - tamil.oneindia.com :  திஸ்பூர்: அசாம் சட்டசபை தேர்தலில் லவ் ஜிகாத் தடை சட்டத்தைப் போலவே நில ஜிகாத் சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
அமித்ஷாவும் தேர்தல் பிரசாரங்களில் இந்தச் சட்டத்தையே வலியுறுத்தி பிரசாரம் செய்கிறார்.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 47 தொகுதிகளில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 39 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இறுதி கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி 40 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 1998ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

தினமலருக்கு மு க ஸ்டாலின் வழங்கிய அனல் பறக்கும் பேட்டி

May be an image of 2 people and people standing
தினமலர்  :திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தெறி பேட்டி (தினமலர் - மார் 29,2021)
பா.ஜ., எதிர்ப்பு, எங்களுக்கு பாராட்டு தான்: ஸ்டாலின்
பத்தாண்டுகள் என்ற நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டதால், இப்போது முடியாவிட்டால், எப்போதும் முடியாது என்ற முனைப்போடு, ஆட்சிப் பொறுப்பை கைப்பற்ற, முழுவீச்சில் களமிறங்கியிருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.
எதிர்தாக்குதல்கள் ஏராளமிருந்தாலும், நம்பிக்கையோடு வலம் வரும் அவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ள, கலப்பு திருமண உதவி திட்ட சர்ச்சை குறித்தும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கட்டப்பஞ்சாயத்தும், நில அபகரிப்பும் தலைதுாக்கும் என்ற குற்றச்சாட்டு குறித்தும் பதிலளித்துள்ளார். மேலும் பல பரபரப்பான கேள்விகளுக்கு, ஸ்டாலின் அளித்துள்ள விரிவான பதில்கள், இங்கே இடம்பெற்றுள்ளன. அதன் விபரம்:
குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க., அறிவித்ததும், 'எங்கள் திட்டங்களை இங்கிருந்து யாரோ, ஸ்டாலினுக்கு சொல்லி விடுகின்றனர். அதை வைத்து, அவர் முன்கூட்டியே அறிவித்து விடுகிறார்' என, இ.பி.எஸ்., சொன்னாரே?

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல் ( முழு கட்டுரை)



ராதா மனோகர்
:  அதிமுக என்கின்ற கட்சி (எம் எல் எம் கம்பனி) 
திமுகவில் இருந்துதான்  உருவானாலும்
இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால் அதில் எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும் இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு தொடங்க பட்டுவிட்டது .

திங்கள், 29 மார்ச், 2021

தேங்காய் எண்ணெய் புற்று நோயினை உண்டாக்குமா?

May be an image of coconut
Farm to Table : தேங்காய் எண்ணெய் புற்று நோயினை உண்டாக்குமா? By Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS, Post Graduate Diploma in Legal Medicine (DLM ), MD (Forensic Medicine)
கடந்த சில தினங்களாக இலங்கையில் சகல பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் அடிபடும் விடயமே புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தங்களினை கொண்டுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு அதன் அவற்றின் தகுதி சான்றிதழ் வெளியாகும் முன்னரே சுங்கத்தில் இருந்து அவை விடுவிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது என்பதே. இவ்வாறு எல்லோரும் பயப்பட காரணம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணையில் aflatoxin என்ற புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தம் இருந்தமையே ஆகும். இவ்வாறே இரு வருடங்களுக்கு முன்னர் aflatoxin அடங்கிய செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

ஈழப்போராட்டத்தில் அரங்கேறிய பாசிச வெறியாட்டம்! 34 ஆவது நினைவு கூரல்

May be an image of text

பிரபாகரனின் ஆரம்ப காலத்து மிக முக்கிய நண்பர் இவர் (ராகவன்) புலிகளை பற்றிய இவரின் பார்வை ஒரு மிகவும் அதிகாரபூர்வமான வாக்கு மூலத்திற்கு ஒப்பானதாகும்

கந்தன் கருணை படுகொலைகள் நடந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதுவரையில் இந்த சம்பவம் வெளியுலகுக்கு தெரியவில்லை அல்லது தெரிந்தாலும் அப்படியே மக்கள் இதை கடந்து போய்விட்டார்கள்.
தேச விடுதலையை முன்னெடுத்த அப்பாவி போராளிகள் பாசிசவாதிகள் குருரமாக கொலைசெய்யப்பட்டனர்.
இந்த வேதனை வரலாற்று நினைவு குரலுக்கு இவரின் பதிவு மிகவும் பொருத்தமானது என்று கருதுகிறேன்.
இவர்களின் வரலாறு நினைவு கூறப்படவேண்டும்.
வெறும் பாசிசவாதிகள் மட்டுமே ஈழப்போராட்டம் என்று உலகம் கருதிவிடக்கூடாது .
 
Chinniah Rajeshkumar
: விடுதலைப்போராட்ட அமைப்பு என தன்னை வெட்கமின்றி சொல்லிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மிக கோரமான வரலாற்றுக்கறைகளில் முக்கியமானது கைது செய்யப்பட்டு வைத்திருந்த 63 ஈ பி ஆர் எல் எப் போராளிகளை சுட்டுக்கொன்று வேட்டையாடிய தினம்.
இது நிகழ்ந்தது 1987 இன் இதே தினத்தில். 1983 இல் நிகழ்ந்த வெலிக்கடை படுகொலைகள் இலங்கையின் கறை படிந்த வரலாற்றின் முக்கிய பக்கம் மட்டுமல்ல தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட ஒரு உந்து சக்தியாகவும் இருந்தது.

தமிழ்நாடு பாஜகவின் அடிமை மாநிலமாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று சில புலம்பெயர்ந்து ஈழத் தமிழர்கள் கடுமையாக பாடுபடுகிறார்கள்.

 வி. சபேசன்  :  பிஜேபியின் அடிமை மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் சிலர் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பிஜேபி மெது மெதுவாக பறித்துக் கொண்டிருக்கிறது. நீட்டுகின்ற இடங்களில் எல்லாம் அதிமுக அடிமை அரசு கையெழுத்துப் போட்டு  தமிழ்நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறது.
எதிர்த்து நிற்கின்ற தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஹிந்தியும் சமஸ்கிருதமும் திணிக்கப்படுகின்றன.
தமிழர்களின் இடஒதுக்கீடு உரிமையை இல்லாமல் செய்வதற்கான பல்வெறு சதித் திட்டங்கள் நடக்கின்றன.
மீண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால், மிச்ச உரிமைகளும் மொத்தமாக பறிக்கப்பட்டு விடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
6 கோடி தமிழர்களின் எதிர்காலம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் புலம்பெயர்ந்து வாழும் சில ஈழத் தமிழர்கள் வன்மத்துடன் செயற்படுகிறார்கள்.
ஈழ விடுதலைப் போரில் தமிழ்நாட்டு மக்கள் தமக்கு போதுமான உதவிகளை செய்யவில்லை என்று இவர்கள் நம்புகிறார்கள்.

DMK அலைதான் வீசுகிறது! களநிலவரங்களை ஆய்வு செய்து அடித்து சொல்கிறார் பதிப்பாளர் ஆழி செந்தில் நாதன்

May be an image of 10 people, people standing, outdoors and crowd

ஆழி செந்தில் நாதன் : மூன்று நாள் தேர்தல் பரப்புரைக்குச் சென்றுவந்தேன். நண்பர்கள் கெளதம சன்னா (அரக்கோணம்), கார்த்திகே. சிவசேனாபதி (தொண்டாமுத்தூர்), தி.வேல்முருகன் (பண்ருட்டி) ஆகியோருக்கு ஆதரவாக. :எனக்கு ஆதரவாளர் படை இல்லை, நான் அதிகாரபூர்வ பேச்சாளரும் இல்லை. அவர்களோடு சில மணி நேரம் செலவிடுவது என்பதும் வாய்ப்பிருந்தால் மக்களிடையே பேசுவது என்பதும்தான் என் எண்ணம். 

அதைத்தான் செய்தேன். கடந்த தேர்தலில் செய்தது போல ஒரு தார்மீக ஆதரவுக்காகவே சென்றேன் என்பதுதான் உண்மை. கூடவே பேரலை தொலைக்காட்சி ஊழியர்களும் இருந்ததால் அவ்வப்போது மக்களிடம் பேட்டிகள்… கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் இதுதான்: 

1. திமுக கூட்டணிக்கு ஆதரவாக களம் இருக்கிறது. அது இறுதிநேரத்தில் அலையாக ஆகி, திமுக 200+ பெறுவதற்கான வாய்ப்பே மிக அதிகம்.

2. அதிமுக கூட்டணி பொலிவிழந்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளடி வேலை செய்வது தவிர வேறெந்த வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை.

3. இளைஞர்கள் பெருவாரியாக திமுக கூட்டணி ஆதரவுப் பணியில் ஈடுபடுகிறார்கள்.