A Sivakumar : இது தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய ஸ்டாலின் மக்களின் அப்பார்ட்மெண்ட் .
இது மீடியாவில் சொல்லப்படுவது போல தனி பங்களா கினடயாது, Flats தான். அதில் எத்தனையாே வீடுகள், அதில் ஒன்று செந்தாமரையின் வீடு.
அதற்குள் இதை மாட மாளிகையாக்கி விட்டார்கள்.
இப்படித் தான் கலைஞர் தெற்காசியாவின் மிகப் பெரும் பணக்காரர் என்று கதைகட்டி விட்டார்கள். மனுசன் செத்து 2 வருசத்துக்கு மேலாகுது.
பழி சொன்ன எவரும் தாங்கள் இறந்த பின் அவர் பிள்ளைகளின் பெயருக்கு மாறியிருக்கும் சொத்துப் பட்டியலை இன்று வரை வெளியிடவில்லை.
செந்தாமரை விவகாரத்துக்கு வருவோம்.
செந்தாமரையை மணந்த சபரீசன் யார்? குடும்ப பின்னணி என்ன? கல்வி என்ன? வேலை என்ன? தொழில் என்ன? வருமானம் என்ன? என்று எதுவுமே தெரியாமல் ஆழ்மனதின் வக்கிரமும் வன்மமும் கொப்பளிக்க பழி சொல்ல கிளம்பிவிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக