புதன், 31 மார்ச், 2021

சேலம்: போலீஸ் நெருக்கடியால் பெண் தற்கொலை? விசாரணை கோரி உறவினர்கள் மறியல்!

சேலம்: போலீஸ் நெருக்கடியால் பெண் தற்கொலை? விசாரணை கோரி உறவினர்கள் மறியல்! -  Oneindia Tamil
kalaignarseithigal.com   : சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பூர்ணம். இவரது கணவர் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் அவரது மகன் அஜித்குமாருடன் வசித்து வந்தார்.
அஜித்குமார் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பார்சல் சேவை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அஜித்குமார் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருவரும், திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் அஜித்குமார் மீது புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார், அஜித்குமாரின் தாயாரை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, மகன் இருக்கும் இடத்தைச் சொல்லுமாறு சம்பூர்ணத்தை அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர்.
மேலும், மகனை காவல்நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.இதனால் மன வேதனையடைந்த சம்பூர்ணம், மார்ச் 26ம் தேதி இரவு விஷம் குடித்துள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சம்பூர்ணம் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பூர்ணத்தை போலிஸார், அடித்துக் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி அவரின் உறவினர்கள் , சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் இதுகுறித்து செவ்வாய்பேட்டை ஆய்வாளர் ராஜாவிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சம்பூர்ணத்தை விசாரணையின்போது ராஜா மிரட்டியது தெரியவந்ததையடுத்து, அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக