புதன், 31 மார்ச், 2021

"உயிரையே விட்டுடுவேன்".. சுகர் இருக்கு, பி.பி. இருக்கு.. மயக்கம்வருது.. மாத்திரை போடறேன்.. கடைசியில் விஜயபாஸ்கர் புலம்பல்

 Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: "தோற்றுவிட்டால் உயிரையே விட்டுடுவேன்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீர் வடியும் போஸ்டர் விராலிமலையை வியக்க வைத்து வருகிறது.
இந்த முறை அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்..
இவர் 3வது முறையாக இந்த தொகுதியில் களம் காண்கிறார்.
அதனால், தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்...
இதுபோக, இவர்களது 2 மகள்கள், அப்பா, அண்ணன் என மொத்த குடும்பமும் விஜயபாஸ்கருக்காக வாக்கு கேட்டு வருகிறார்கள்.
வழக்கமாக விஜயபாஸ்கரின் மகள்கள் படுதிறமைசாலிகள்..
இவர்களின் பேச்சு ஒவ்வொரு தேர்தலின்போதும் அந்த தொகுதி மக்களின் மனசை கவர்ந்து வருகிறது. 

அதுபோலவே இந்த முறையும் விஜயபாஸ்கர் பேசுவதை இந்த மகள்கள் பேசுவதை கேட்கதான் தொகுதி மக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது விராலிமலை பகுதியில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கண் கலங்கி உட்கார்ந்துள்ள போட்டோ இருக்கிறது.. இன்னொரு போட்டோவில் நிஜமாகவே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.. அந்த போட்டோ க்ளோசப்பில் உள்ளது..

போஸ்டர் அதில், "வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டு விடுவேன் என கூறும்போது 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு, பகல் பாராமல் கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும் முடிவு உங்கள் கைகளில்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன...
அதாவது தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன் என்று பொருள்படும் வகையில், இந்த வார்த்தைகள் இருக்கின்றன.. இந்த போஸ்டர்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்யும்போது, தொகுதி மக்களிடம் புலம்பி தள்ளிவிட்டார்..
சுகர் இருக்கு, பி.பி. இருக்கு.. மயக்கம்வருது.. மாத்திரை போடறேன்..
எனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி, இந்த விராலிமலையை இயேசுநாதர் போல தோளில் சுமந்துள்ளேன் என்று சொல்லி கண்ணீர் விட்டார்.. இந்த பேச்சும் அப்போது சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது..

இதற்கு முன்புகூட விஜயபாஸ்கர் 2 தேர்தலை இதே தொகுதியில் சந்தித்துள்ளார்.. அப்போதெல்லாம் இப்படி அழுததில்லை.. இப்போது கண்ணீர் விட்டு கதறி அழ என்ன காரணம்? திமுக வேட்பாளர் பலமாக இருக்கிறார் என்றே அர்த்தமாகிறது..

விஜயபாஸ்கர் சொன்னமாதிரி 10 வருஷம் இந்த தொகுதிக்காக ராத்திரியும் - பகலும் கஷ்டப்பட்டிருந்தால், மக்கள் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டார்கள்..
நிச்சயம் வந்து கைதூக்கி விட்டுவிடுவார்கள்.. இப்படி அழுது கொண்டிருந்தால், அது தன் மீதான பலவீனத்தையே வெளிப்படுத்தும் என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை..
இருந்தாலும், விஜயபாஸ்கர் பெயரில் உள்ள இந்த விசித்திர போஸ்டரை பார்த்து விராலிமலையே மலைத்து போய் உட்கார்ந்துள்ளது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக