வெள்ளி, 2 ஏப்ரல், 2021

பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து.... கணவருக்கு கொரோனா தொற்று1

மாலைமலர் :பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை என்றாலும் டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து புதுடெல்லி:காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை. எனினும், டாக்டர்களின் அறிவுரைப்படி அவரும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் தனது பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
அசாம் மாநிலம் கோல்பாரா, கோலக்கஞ்ச், கயாகுச்சி ஆகிய இடங்களில் இன்று அவர் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதனை ரத்து செய்யும்படி மாநில காங்கிரஸ் நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார்.


பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரமும் ரத்து செய்யப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக