வியாழன், 1 ஏப்ரல், 2021

யோகி இன் வருகையால் உத்தரபிரதேசக மாறுகிறதா கோயம்புத்தூர்?

Kandasamy Mariyappan  : நான் 2000 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் கோயம்புத்தூரில் வாழ்ந்தவன்.
90களில் பார்த்த கோயம்புத்தூர், 2000த்தில் முற்றிலும் மாறியிருந்தது!
May be an image of 4 people and people standing

அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!
கோயம்புத்தூர் நகரத்தை வடக்கத்திய கும்பல் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள, பல நாசகார செயல்களை செய்து வந்துள்ளதை...
மீண்டும் 2010, 11, 12 காலகட்டங்களில் பணி நிமித்தமாக கோயம்புத்தூர் சென்றபொழுதுதான் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது...!!
சங்க்பரிவார், இந்து முன்னணி போன்ற இந்து அமைப்புகளை பயன்படுத்தி இசுலாமிய வெறுப்பை மட்டுமே மக்கள் மனதில் விதைத்து விட்டிருந்தனர்..!
இசுலாமிய வெறுப்பு என்ற ஒற்றைக் சொல்லை மனதில் ஏந்திய Zombies போன்ற இளைஞர்களை, பெண்கள் மற்றும் போதைகளுக்கு அடிமை படுத்தி, தங்களுடைய அடியாட்களாக அவர்களை மாற்றி வைத்துள்ளனர்..!
இதோ நேற்று, அந்த வெறுப்பின் பலனை அறுவடை செய்ய தொடங்கியுள்ளது அந்த கும்பல்..!
நேற்று, கோயம்புத்தூரிலிருந்து நண்பர் என்னை அழைத்து, இனிமேல் கோயம்புத்தூரில் வாழ முடியுமா என்ற பயம் வந்து விட்டதாக அழாத குறையாக சொல்ல ஆரம்பித்து விட்டார்...!
கோயம்புத்தூர், உண்மையில் ஒரு சொர்க்கம்! அதனை விட்டு விலக மனமில்லாமல் சென்னை வந்தவன்!
கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள்
சாதி மதங்களை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே...
கோயம்புத்தூரை வளைத்துப் போட முயற்சிக்கும் இந்த வடக்கத்திய கும்பலை துரத்த முடியும்!
இல்லையென்றால் நாம் அங்கே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவோம்..!
ஒரு மகிழ்ச்சியான செய்தி...
யோகி வந்து கலவரத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற பிறகு...
ரத்னசபாபதி புரம் என்ற RS Puram முழுக்க திமுக தலைவர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் மாலையில் நடந்தே சென்றதால்...
கோயம்புத்தூர் மக்கள் மறு வாழ்க்கை கிடைத்த, புத்துணர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருப்பதாக மற்றொரு நண்பன் என்னை அழைத்து கூறிய பொழுது...
உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக