maalaimalar : சென்னை: தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழ்நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்ட
கனிமொழி இடைவிடாது ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதுடன் இருமல் அதிகம்
காணப்பட்டது. இதனால் நேற்று அவர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை
திரும்பினார்.
சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது....
உடனடியாக ஆழ்வார்பேட்டை வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இன்று மதியம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வார் என்று அவரது
உதவியாளர்கள் தெரிவித்தனர்....
கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் தேர்தல்
பிரசாரத்தில் உடன் சென்ற கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனைக்கு
உட்படுத்தி வருகின்றனர்.
கொரோனா வந்து செத்துப் போடி
பதிலளிநீக்கு