Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "எவ்ளோ திமிரு பாருங்க.. நம்ம தலைவர் முதலமைச்சர் ஆனதும், அவனை உள்ளே தூக்கி போட்டு நுங்கு எடுக்க போறதே நாமதான்" என்று பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் வைரலாகி வருகிறது.
இதனிடையே பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்துக்கு எப்போது உதயநிதி போனாலும் சரி, பொள்ளாச்சி பாலியல் கொடுமை பற்றி பேசாமல் வந்ததே இல்லை.. 4 கேள்வி நறுக்கென கேட்டுவிட்டுதான் சென்னை திரும்புவார்.
இந்த பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டிருக்கிறார் என பகிரங்கமாகச் சொல்கிறேன்.
முடிந்தால் என் மீது வழக்கு போடுங்க" என்று அன்றே அன்றே சவால் விட்டவர் உதயநிதி.
இது குறித்த வழக்கையும் அவர் சந்தித்து வருகிறார் என்பது வேறு விஷயம்..
ஆனால், இப்போது பிரச்சாரத்தில் இதே விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
நேற்றுகூட இதை பற்றி உதயநிதி மக்கள் முன்பு. பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார். "250-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை கடத்திட்டு போய் பாலியல் வன்கொடுமை பண்ணி.. வீடியோ டேப் பணிணி.. ஒவ்வொரு குழந்தையும் அழுகிற வீடியோ வெளியே வந்தது.
நாமதான் அதுக்கு சிபிஐ விசாரணை வேணும்னு கேட்டோம்.. போராட்டமும் செய்தோம்.. முதல் கைது யார்? அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம்தான்.. ஆனால், இப்போ அவர் வெளியே வந்து, பொள்ளாச்சி ஜெயராமனுடன் பிரச்சாரத்துக்கு போய்ட்டு இருக்காராம்.." என்று உதயநிதி பேசினார்..
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் குறுக்கிட்டு, ஜெயராமன் மகன் குறித்து ஏதோ புகார் சொல்கிறார்கள்.. அதை கேட்டதும் உதயநிதி, "அப்படியா? எவ்ளோ திமிரு பாருங்க.. தலைவர் முதலமைச்சர் ஆனதும், அவனை உள்ளே தூக்கி போட்டு நுங்கு எடுக்க போறதே நாமதான்" என்றார்.
இதையடுத்து கூடியிருந்தோர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் முழக்கமிட்டனர்.. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்பி உத்தரவு இந்நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் மகனை போலீசார் வேறு ஒரு அடிதடி வழக்கில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒக்கிலிபாளையத்தில் மார்ச் 28ல் நடந்த அடிதடி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் உட்பட 7 பேரை கைது செய்ய எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல, திமுக தரப்பில் 4 பேரையும் கைது செய்ய கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.. இந்த கைது உத்தரவு விவகாரம் திமுக, அதிமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முதலில் உதயநிதி ஸ்டாலின் இவரை இவரது பெண்கள் தொடர்பை ஆராய வேண்டும்
பதிலளிநீக்குநயன்தாராவுடன் உதயநிதி ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் நடத்திய கூத்து எங்களுக்கு தெரியும்
பதிலளிநீக்கு