சனி, 5 நவம்பர், 2016

வடிவேலு அதிரடி .. எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது .. நான் எப்பவுமே டாப்புதாய்ன்

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு முதலானோர் இணைந்து
நடித்துள்ள படம் கத்திசண்டை. சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழால் கலந்துக்கொண்டு பேசிய வடிவேலு; நான் ஒரு ‘கேப்’புக்கு பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு எப்போதுமே கேப்பும், ஆப்பு வந்ததில்லை! நான் எப்போதுமே ‘டாப்’ தான்! என்னிடம் வந்த கதைகள் சரியில்லாத காரணத்தால் தான் எனக்கு வரும் படங்களில் நடிக்கவில்லை.

ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு!” பெட்டி கோபால் பேட்டி

விகடன்.காம்: :எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் -
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வைகோவுடன் நடத்தும் முதல் சந்திப்பு இது. செம உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. காரணம், எட்டு ஆண்டுகளாக நடந்த அரசு விரோத வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. கறுப்பு சால்வையைச் சரிசெய்துகொண்டே கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார்.‘‘எட்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் இருந்து விடுதலையாகி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?” ; ‘‘பாலகங்காதர திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற புகழ்வாய்ந்த தலைவர்கள் மீது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது எந்தப் பிரிவுகளில் வழக்கு போட்டார்களோ, அதே பிரிவுகளில் என் மீது கலைஞர் கருணாநிதி போட்ட வழக்கு இது.  இந்த வழக்கில் சுதந்திர இந்தியாவில் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, முதன்முதலில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முதல் எம்.பி-யும் நான்தான்.18  ஆண்டுகள்  தேர்தலையே சந்திக்காமல்  திமுக எம்பியாக பதவி சோகம் கண்டவரின்  துரோக பெட்டிகளில் இதுவும் ஒன்று

இந்துக்களுக்கு ராமன் – முதலாளிகளுக்கு இந்தியா !

உத்திசார் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க கொள்கை
முடிவு – பா.ஜ.க !என்னை ஒரு பிராண்டாக ஃபோகஸ் பண்னிகிட்டு…. நாட்டையே ஒரு பிராண்டாக்கிடானுங்க சரியான உத்திடா பசங்களா!
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

NDTV தடை ..கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்! - தலைவர்கள் அறிக்கை!

மின்னம்பலம்.காம்: என்.டி.டிவி ஒளிபரப்புக்கு பாஜக அரசு ஒருநாள் தடை விதித்ததைக் கண்டித்து
திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் செய்தி வெளியிட்டதற்காக தடை விதிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பரப்பியபோது என்.டி.டிவி-க்கு மட்டும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அழகிரி மீண்டும் கலைஞரை சந்தித்தார் .. மூன்றாவது முறையாக...

இன்றும் கருணாநிதியைச் சந்தித்த அழகிரி: ஸ்டாலின் ஷாக்! ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஓய்விலிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று மூன்றாவது முறையாக நேரில் வந்து சந்தித்துப் பேசினார், முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி. இந்த சந்திப்பினால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஷாக் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி, வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒவ்வாமை ஏற்படுத்தியதால், உடலில் சிவப்புநிறக் கொப்புளங்கள் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார் கருணாநிதி. அதனால், யாரையும் சந்திப்பதை தவிர்த்திருந்தார்.
இந்நிலையில், இதனையறிந்து கடந்த வாரமே கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் குறித்து உருக்கமாக விசாரித்துவிட்டுச் சென்றார். நேற்று, மறுபடியும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அழகிரி, கருணாநிதியைச் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து அக்கறையோடு விசாரித்த அழகிரி, அரசியல் மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்தாலோசித்து பேசியிருக்கிறார்.

50 நாட்கள் நெருங்குகிறது! இதுவரை எந்த அமைச்சரும் ஜெயலதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை! இன்னுமா புரியல்ல?

அலுவலகத்தில் இருந்தோம். வைஃபை ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில்
ஏதோ மெசேஜ் டைப்பிங் ஆனபடி இருந்தது. சற்று நேரத்துக்குப்பிறகு வந்து விழுந்தது இந்த மெசேஜ்.
‘‘முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி அப்பல்லோவில் இருந்து அடிக்கடி செய்திக்குறிப்பு வரும். நேற்றுதான் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி முதல்வர் உடல்நிலை பற்றி ஒரு விழாவுக்கு வந்தபோது வாய் திறந்து பேசினார். ‘முதல்வர் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர ஆரம்பித்துள்ளார். எப்போது டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவுசெய்ய வேண்டும்’ என்று பேசினார். முதல்வரின் உடல்நிலையைப் பற்றி பல வதந்திகள் வந்து போனாலும், இப்போதுதான் முதல்முறையாக முதல்வர் உடல்நிலை பற்றிய உண்மை வெளிவந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘முதல்ல அம்மா நல்லா இருக்காங்க... அவங்க வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அலுவலகப் பணிகளை ஆஸ்பத்திரியில இருந்தே செய்யுறாங்க...

போயஸ் சாம்ராஜ்யம் மொத்தமாக வழிச்சு துடைச்சு அள்ளிக்கொண்டு போகப்படுகிறது? அள்ளிக்கோ? அள்ளிக்கோ?

டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை
‘டெல்டா காஷ்மோரா’ என்ற பெயரில் ஜுனியர் விகடன் வெளியிட்ட கட்டுரை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். அந்த அறிக்கையில்,
“தமிழகத்தின் பழம்பெரும் இதழ் “ஆனந்த விகடன்”. அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய “ஆனந்த விகடன்” குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் “ஜுனியர் விகடன்”. 9-11-2016 தேதிய “ஜுனியர் விகடன்”இதழில் “மிஸ்டர் கழுகார்” பகுதியில் வந்துள்ள ஒரு செய்தி; நம் அனைவரையும் அதிர்ச்சி அடையத் தக்கச் செய்தியாகும். அது வருமாறு :-
“நாட்டுக்கு அவர் ஒரு மன்னர். அவரின் பிரம்மாண்ட பங்களா. அந்த மன்னருக்கு நெருக்கமான அரண்மனைவாசிகளான சிலர் செல்வ மிதப்பில் மிதக்கிறார்கள். ஊழல் மற்றும் கொள்ளையடித்த கரன்சி கட்டுகள், தங்கம், வைடூரிய நகைகளை அந்த அரண்மனைக்குக் கொண்டு வருகிறார்கள். ரகசிய சுரங்கம் வெட்டி, அதில் அந்தப் பொருள்களைப் பாதுகாத்து வைக்கிறார்கள். அரியணையில் அமர்ந்திருந்த மன்னரின் காலடியில் அவர் ஆளும் நாட்டின் செல்வந்தர்கள், பிசினஸ் புள்ளிகள்…. பல நுhறு கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்களை வைத்து விட்டுப் போகிறார்கள்.

சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன்.. ஆசிய ஹாக்கி மகளிர் அணி


India beat China 2-1 to win Women's Asian Champions Trophyசிங்கப்பூர்: ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழத்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி. சிங்கப்பூரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் நடைபற்றது. இந்தியா, ஜப்பான், சீனா, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.< இதன் லீக் போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் சீனா 9 புள்ளிகளுடன் முதலிடமும் பெற்றது. (3 வெற்றி, 1 தோல்வி) இந்தியா 7 புள்ளிகளுடன் 2வது இடம் பெற்றது (2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி) இதையடுத்து இவ்விரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

எல்லை தாண்டி வரும் மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் .. மங்கள சமரவீர உறுதி

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கைக்குழு: இந்தியா- இலங்கை அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு.
இந்தியா - இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் மற்றும் மீன் வளத்துறை மந்திரி ராதா மோகன்சிங், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், இலங்கை சார்பில் வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமவீரா, மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமர வீரா,தமிழர் தேசிய முன்னணி சுமந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் மீன்பிடிப்பது தொடர்பான எல்லை வரையறை மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கலைஞர் உடல்நலம் குறித்து ராகுல் கேட்டறிந்தார் ...

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கனிமொழியை தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கேட்டறிந்தார். இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் மத்திய அமைச்சர்  குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு கழகத் தலைவர் கனிமொழி அவர்களிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தனர். மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுவை அமைச்சர்கள்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர்,  முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, ஜெ.எம். ஆரூண், குஷ்பூ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விசுவநாதன், நாசே. ராமச்சந்திரன் ஆகியோரும், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விக்ரம ராஜா, எஸ்.வி.சேகர்  மற்றும்  மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும் நேரில் வந்து  திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.

ஜெயலலிதாவை விடாது துரத்தும் கருப்பு: ஆர்.கே.நகர் வெற்றி செல்லுபடியாகுமா?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது கஷ்ட காலம் போல. கடந்த முறை முதல்வராக இருந்த போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா சிறிது காலம் முதல்வராக இல்லாமல் இருந்தார். அதே போல தற்போதும் ஒரு நிலை வந்துவிடுமோ என அதிமுகவின் கலக்கத்தில் உள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரவீனா தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது எனக்கு வாக்கு சேகரிக்க சமமான வாய்ப்பு தரப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் செய்ய உரிய அனுமதி வழங்கப்படவில்லை.

தனுஷ்கோடியில் சூறாவளி 100 ஆண்டுகள் சர்ச் சுவர் இடிந்தது

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் வீசிய சூறாவளி காற்றினால் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதா சர்ச் சுவர் இடிந்து விழுந்தது. தனுஷ்கோடி--இலங்கை தலைமன்னார் இடையே 1914ல் கப்பல் போக்குவரத்து துவங்கியது. இதற்காக தனுஷ்கோடியில் தங்கிய ஆங்கிலேயர்கள் 'புனித பிலேமினாள் சர்ச்' அமைத்தனர். 1964ல் ஏற்பட்ட கோர புயலில் சிக்கி சர்ச் மேற்கூரை சேதமடைந்தது. எஞ்சிய சுற்றுசுவர்கள் புயலின் அடையாளமாக நேற்று முன்தினம் வரை(3ம் தேதி) காட்சியளித்தது. கடந்த 100 ஆண்டுகளாக வெயில், மழை, சூறாவளி காற்றுக்கு தாக்குபிடித்த சர்ச் சுவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீசிய சூறாவளி காற்றில் இடிந்து விழுந்தது.தனுஷ்கோடியில் புயலின் எச்சமாக உள்ள மாதா சர்ச், விநாயர் கோயிலை புனரமைத்து

அப்போலோவில் கோலோச்சும் மன்னார்குடி அதிகாரம்! - ஜெயலலிதாவைச் சுற்றி ‘பவர் சென்டர்’கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 42 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நலனில் இன்னும் முழுமையான முன்னேற்றம் ஏற்படவில்லை.>லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டின் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளும் சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்டுகளில் தொடர் சிகிச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
 'முதல்வரின் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, சில நிகழ்வுகள் அதிகாரத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மட்டுமே, முதல்வருக்கு டி.வியில் காண்பிக்கிறார்கள். மன்னார்குடி உறவுகளின் அதிகாரம் உறுத்தும்படி இருக்கிறது!’ எனக் குமுறுகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். அவர்கள் ஆதங்கத்தோடு பட்டியலிட்ட சில நி்கழ்வுகள் இங்கே...

பெண்ணை கடத்தி லாட்ஜில் அடைத்து 20 நாட்கள் ... நம்ப ஸ்காட்லாந்து போலீஸ் பண்ணிய அநியாயம்

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் நீலா. திருமணம் ஆகி ஒரு வருடமே ஆனது. காதல் திருமணம். கணவன் முருகேஷ். நல்லவன் போல நடித்துக் காதலித்தான். வீட்டை விட்டு ஓடிவந்து அவனை கரம் பிடித்தாள் நீலா.
கல்லூரியைக் கூட முடிக்கவில்லை. வீட்டில் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். கல்யாணம் ஆகி இரண்டே மாதங்களில் கணவன் மொடாக் குடிகாரன் என்பது   அறிந்து நொந்து போனாள் நீலா.
திருத்தப் போராடினாள். ம்கூம்.. கொண்டு வந்த நகை ஒவ்வொன்றாக காலி. பக்கத்து வீட்டை சேர்ந்த வளன் என்பவர் இனி இவனை நம்பினால் பிச்சை தான் எடுப்பாய்..பாண்டிச்சேரியில் ஒரு ஆசிரமத்தில் வேலை இருக்கிறது. போய் பிழைக்கிற வழியைப் பாரு என்று கூறி விலாசம் போன் நம்பர் கொடுத்தார்.
வேறு வழி இல்லை..! இனி அதுதான் சரி என்று கிளம்பி விட்டாள் நீலா. அதிகாலை நாலு மணிக்கு பாண்டி போய் இறங்கினாள்.
சனி பிடித்தது. ரோந்து போலீஸ் அவளை மடக்கி கேள்விகள் கேட்டு மிரட்ட கணவனை விட்டு ஓடி வந்ததை கூறி அழுதாள்.
அவளை பரிவுடன் பேசி ஒரு லாட்ஜுக்கு அழைத்துப் போய் தங்கவைத்தனர் மூன்று போலீஸ்கள்..!

வெள்ளி, 4 நவம்பர், 2016

நடிகை பிரதியுஷாவை விபசாரத்தில் தள்ளிய காதலன் .. தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் திருப்பம்: காதலன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினாரா?மும்பையில் தற்கொலை செய்துகொண்ட நடிகை அவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், பிரதியுஷா கடைசியாக தன் காதலன் ராகுல் சிங்கிடம் பேசிய உரையாடலின் எழுத்துப் பிரதி தற்போது வெளியாகி உள்ளது. இதில், மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் பிரதியுஷா பேசும்போது, ‘என்னை நானே விற்பதற்காக இங்கே வரவில்லை. நடிப்பதற்காக வந்தேன். இன்று நீங்கள் என்னை இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறீர்கள். ராகுல்... நான் எவ்வளவு மோசமாக உணர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது’ என்று குறிப்பிடுகிறார்.
பிரதியுஷாவை அவரது காதலன் ராகுல் ராஜ் சிங் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பூமியை சுரண்டி பணம் சேர்த்து பேரழிவை நோக்கி ... காப்பரெட் முட்டாள்களின் திருத்த முடியாத தவறுகள்

gh_podium_high_res
ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. “பொதுச் சொத்தின் அவலம்’ (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
காரட் ஹார்டின்
1968 டிசம்பரில் ’சயின்ஸ்’ என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளி வர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.
ஹார்டின் முன்வைக்கும் ‘அறிவியல் பூர்வமான’ ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்:
“இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கட்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது.

கொடி திரைவிமர்சனம் : கன்டெய்னர் காலத்தில் ஒரு கவுன்சிலர் கடி !

Karunasகன்டெயினர்களே மாயமாக மறைந்து போகும் அம்மாவின் அண்ட சாசர அரசியல் காலத்தில், கவுன்சிலர் கடிகளைப் போட்டு நமத்துப்போன வெத்துவேட்டாய் வந்திருக்கிறது இந்தக் கொடி!“கொ
டி” திகரைப்படத்தில் வட்டம், மாவட்டம், அமைச்சர், அடுக்கு மொழி வருவதால் அது ஒரு அரசியல் படமென்று குறியீடுகளுக்கு நேர்ந்து விடப்பட்ட சில அப்ரண்டிஸ்டுகள் நினைக்கிறார்கள். இல்லை, இது குடும்பத்துடன் களிக்க வேண்டிய “மாஸ்” மசாலா என்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். அதற்கு ஆதாராமாய் மேலும் சில ‘வரலாற்றுத்’ தகவல்கள்!
லொடுக்கு பாண்டியாக ஆளானவர் கருணாஸ். பிறகு வள்ளியூர் சித்ரா திரையரங்கில் வெளியாகும் தேவர் சாதி நடிகர்களின் படங்களுக்கு சுவரொட்டி ஒட்டி பழக்கப்பட்ட சொந்தங்களுக்கு பசை கிடைக்காத காலம் வந்தது. அதாவது போற்றிப் பாடடி வகையறாக்கள் அனைத்தும் சந்தை இழந்து அதிலும் கார்த்திக் போன்ற ஜீவராசிகளெல்லாம் ஊடகங்களின் காமடி டிராக்கின் ஆஸ்தான ஜீவனான பிறகு ஒட்டுவதற்கு குட்டிச் சுவரொ, வெட்டிச் சுவரொட்டியோ இன்றி சொந்தங்கள் தவித்தன. அம்மாவின் கட்டிங் மட்டும் இருந்தென்ன பயன்?

மகாராஷ்டிரா 12 மாணவிகள் ஆசிரியர்களால் வன்புணர்வு.. பள்ளி விடுதியில்... 12 minor tribal girls raped by teachers; 3 pregnant

மும்பை: மகாராஷ்ட்டிரா அரசு பள்ளி விடுதியில் 12மணவிகள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதில் 3 மாணவிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எஸ்.பி., சஞ்சய்பவிஸ்கர் கூறியதாவது: புல்தானா மாவட்டம் காமகோன் தேசில் என்ற கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் விடுதி உள்ளது. இங்கு பணிபுரியும் துப்பரவு தொழிலாளி இட்டுசிங்பவார் என்பவர் ஒரு மாணவியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக கற்பழிப்பு மற்றும் காயப்படுத்துதல் பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் முறையான மனு கொடுத்தால் மேலும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மலை வாழ் மக்கள் : இதற்கிடையில் இந்த பள்ளியில் 12 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 3 மாணவிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும், இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மலை வாழ் மக்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் திகாம்பர் காரத், சேர்மன் கஜனன் கோகரா,மேலும் 5 ஆசிரியர்கள், 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் தினமலர்,காம் . இந்துத்வாக்கள் ஆளும்  மகாராஷ்ட்ராவில்  இந்த  கொடுமை நடந்துள்ளது .. 

மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!

thetimestamil.com : கிருபா முனுசாமி கிருபா முனுசாமிசமூகத்தின் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு, ஜாதிய, இன, நிற, மத, வர்க்க அடிப்படையிலான அடக்குமுறைகளுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆட்படும் ஒடுக்கப்பட்ட பெண்கள் அவைகளை இயல்பாக கடந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க, மற்றப் பெண்களோ தாங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனையைக் கூட ஏதோ இவ்வுலகமே ஒன்று திரண்டு தனக்கு துரோகம் இளைத்து விட்டது போல பெரியதாக உருவகப்படுத்தி, குருதி சொட்ட சொட்ட கதை வசனம் எல்லாம் எழுதி பரிதாபம் ஏற்படுத்தும் விதமாக ஒப்பாரி வைக்கின்றனர்.
இருக்க வீடு இல்லாது தெருக்களில் வசித்து, நாள் முழுக்க உழைத்தால் மட்டுமே ஒரு வேளை சோறு எனும் நிலையில் குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு எழும்புகள் தேய கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்களும் பிறப்பு முதல் ஒடுக்குமுறையை சந்தித்து, ஜாதியினால் அவமானப்பட்டு, வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை நகர்த்தி, படித்ததே வேலைக்கு செல்ல தான் என்ற சூழலில் படிப்பை முடித்த அடுத்த கணமே வேலைக்கு ஓடி, கடன் கட்டி, மாத வாடகையோடு மூன்று வேளை சோற்றிற்கே திண்டாடி, 30 வயது வரையிலும் காதல் கிட்டாது, திருமணம், ஆண் வாசம் என்பதே கனவாய் மாறி, அதை மீறி காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்ததோ கணவனை புரிந்துக்கொண்டு, புரியவைத்து அவர் வீட்டையும் சகித்துக் கொண்டு, குழந்தைகளை பெற்று, அவர்களை பார்த்துக்கொள்ள ஆளில்லாது, வேலையும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களும் கூட ஒரு போதும் இப்படியான கதை, வசனங்களை எழுவதில்லை.

அண்ணா நூலகம்! உயர்நீதிமன்றம் கெடு!.. கலைஞர் உருவாக்கினார் என்ற ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா ....


சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம், கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. நூலகத்தைப் பராமரிப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு இறுதிக் கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் மிக முக்கிய நூலகமாகக் கருதப்படுவது. மிகப்பெரிய நூலகமான இது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது.

பிரதாப் ரெட்டி : ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். நம்புறோம் சாமியோவ்

உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் ஜெ.வின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு மருத்துவராலோ, மருத்துவமனையாலோ இந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சி. தன்னை சுற்றி நடப்பதை உணர்ந்து வருகிறார். பொதுமக்களின் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்துள்ளது. தற்போதுள்ள அறையில் இருந்து வெளியே வருவதும், வீடு திரும்புவதும் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, அவரே முடிவு செய்வார். சிறப்பாக முன்னேறி வருகிறார். இவ்வாறு கூறினார்.நக்கீரன்.இன்

வைகோவுடன் சி.பி.எம். மோதல்! விஜயகாந்தை விமர்சிப்பது ஏற்று கொள்ளமுடியாது

தமிழக சட்டசபைக்கு கடந்தமுறை நடந்த பொதுத் தேர்தலின்போது மக்கள்
நலக் கூட்டணியோடு தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால் விஜயகாந்த், திருமாவளவன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.
தேர்தல் முடிந்த சிலநாட்களிலேயே தேமுதிக-வும் தமாகா-வும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகின. அப்போதே மக்கள் நலக் கூட்டணியின் பிளவு தொடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அழைப்பை ஏற்று அதில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விரும்பியது. ஆனால் திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என்று, அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார். இதனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு சமாதானம் அடைந்தது.

அழகிரி கோபாலபுரம் வருகை ..... ஸ்டாலினுக்கு பிடிக்காதவர்கள் எல்லாம் வெளியே போனால்? திமுக இன்னொரு அதிமுக?

கோபாலபுரம் கருணாநிதியின் வீடு வழக்கத்தைவிட இன்று பரபரப்புடன் காணப்பட்டது. ஒட்டுமொத்த குடும்பமும், கோபாலபுரத்தில் குவிந்ததுதான் காரணம். காலையிலேயே கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, தனது மனைவியுடன் கருணாநிதி வீட்டுக்கு வந்தார். அவர் வரும் தகவல் தெரிந்தவுடனேயே, கருணாநிதி வீட்டுக்கு அருகில் வசித்துவந்த செல்வியும் அங்கு வந்துவிட்டார். அழகிரியின் திடீர் வருகை கருணாநிதி வீட்டில் இருந்த பாதுகாவலர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் தந்தது. மனைவி சகிதமாக உள்ளே நுழைந்த அழகிரி, நேராக மாடியில் இருந்த கருணாநிதி அறைக்குச் சென்றார். அங்கு கட்டிலில் படுத்திருந்த கருணாநிதியைச் சந்தித்துள்ளார். அழகிரி கருணாநிதி அறைக்குச் சென்றபோது, செல்வியும் அங்கு இருந்துள்ளார். அழகிரி மனைவி காந்தி, கருணாநிதியிடம் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ‘‘முன்பைவிட இப்போது பரவாயில்லை” என்று சொல்லியுள்ளார். அழகிரி, சிறிது நேரம் வரை ஏதும் பேசாமல் கருணாநிதியைப் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். செல்வியும், காந்தியும்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

தாய்ப்பால் இஸ்லாத்துக்கு எதிரானது .. ஒரு அறிவாளி கணவனின் அடாவடி .. போலீசில் புகார்


திருவனந்தபுரம்: கேரளாவில் இஸ்லாமியர் ஒருவர் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததுடன் அது தனது மதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டை சேர்ந்தவர் அபூபக்கர். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் அதற்கு தாய்ப்பால் கொடுக்குமாறு அபூபக்கரின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அபூபக்கரோ தாய்ப்பால் எல்லாம் கொடுக்கவிட மாட்டேன்.

வயிற்றில் இருந்த குழந்தைக்காக புற்று நோய் சிகிச்சை செய்யாமல் உயிர்த்தியாக செய்த தாய் .. இலங்கை சபாநாயகரின் மகள்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயொருவர் தனது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்காக குறித்த நோயிற்கு சிகிச்சைபெறாது உயிர் துறந்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை பாராளுமன்றின் சபாநாயகரான கரு ஜயசூரியவின் இளைய மகளாவார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்சீவனி இந்திரா ஜயசூரிய, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்
இங்கிலாந்தில் நேற்று மாலை காலமானார்.
இவர் பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் செய்திருந்த நிலையில் அந்த நாட்டில் வாழ்ந்து வந்துள்ளார். 40 வயதான சஞ்சீவனி இந்திரா இரு பிள்ளைகளின் தாயாவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு சஞ்சீவனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் தனது இரண்டாவது குழந்தையை 28 வாரங்களாக வயிற்றில் சுமந்திருந்த நிலையில் மீண்டும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மருத்துவர்களிடமிருந்து உயிர் தப்பிய காட்டு யானையும் அதன் குட்டியும் .


கோவையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்று எழுந்து கொள்ள முடியாமல் இருந்த செய்தி கடந்த 19 ஆம் தேதியிலிருந்து தொலைக்காட்சியில் காட்டப்பட்டு வந்தது. காலில் அடிபட்டிருப்பதால் அந்த யானையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும். வயிற்றுக் கோளாறு எதோ இருக்கிறது என்றும் நினைத்துத்தான் வனத்துறை விலங்கின மருத்துவர்கள் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், திடீரென்று அந்த யானை இன்று (24-10-2016) ஆண்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

ஆந்திர விசாகபட்டினம்.. இராவண விழாவில் கொளத்தூர் மணி உரையாற்றினார்

keetru.com/ ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித்
உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத் திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறு களையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராம லீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்.
“இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவண னின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன.

பிரேமலதா : மூன்று தொகுதிகளிலும் திமுகவின் வெற்றியை தடுப்பேன்..

அப்போ...திமுக வெற்றியை தடுக்கத்தான் நீங்கள்  அரசியல் பண்றீங்க ...நீங்க வென்று ஆட்சியை பிடிக்க அல்ல....
தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு... காலம் தள்ளுவது தான் உங்க நோக்கம்...மக்கள் நலன் அல்ல என்பதை  நீங்க   ஒப்புக்கொள்ளுகிறீங்க  ...நீங்க உண்மையை சொன்னதுக்கு நன்றி..
இனி சிந்திக்கவேண்டியது தேமுதிக தொண்டர்களும்...ஏமாளி தமிழர்களும் தான்..ங்க
மக்களே...திமுக எப்போதும் தோற்கவில்லை ...
விபச்சார ஊடகங்களாலும் ....வைக்கோ விஜயகாந்த் கம்யூனிஸ்டுகள் போன்ற
கைக்கூலிகளால் ஆதிக்க சக்திகளின் சதியால் வெற்றியை இழந்து வருகிறது...
அதனால்..தான் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகின்றன...மக்கள் வாழ்க்கை நரகமாகிவிட்டது...
மக்கள் சிந்திக்க வேண்டும் ...தங்கள் சொந்த லாபத்துக்காக கட்சி நடத்தும் கயவர்களை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்..  முகநூல் பதிவு .. சென்னை தாமோதரன்

இருமடங்காகிறது எம்.பி.க்களின் சம்பளம்!

மக்களவையில் 545 பேரும், மாநிலங்களவையில் 245 பேருமாக மொத்தம் 790
எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு படிகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் எம்.பி.க்களின் ஊதியம் மற்றும் படிகளை நிர்ணயிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அந்த குழு, எம்.பி.க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சம் மற்றும் இதர படிகள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.thetimestamil.com

கேரளம் .. கூட்டு பாலியல் பலாத்காரம்.. எவன் அதிக மகிழ்ச்சியை தந்தான் என்று கேட்ட போலிஸ் Which one gave you the greatest pleasure?

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை   விசாரணைக்கு சென்றபோது, அந்த பெண்ணை போலீசார் அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டுள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த ஆண்களில் யார் அதிக இன்பத்தை கொடுத்தது எனக்கேட்டு அதிர்ச்சி அளித்தனர் .இதை பாக்கியலட்சுமி வைரலாக பரப்பினார். இது தொடர்பாக டிவியில் விவாதங்கள் கிளம்பின. தற்போது இப்பிரச்னை முதல்வர் விஜயன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அவமானபடுத்தும் வகையில் கேரள போலீசார் கேள்வி கேட்டது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு வருடத்திற்கு முன்னர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வந்த அவரது கணவரின் நண்பர்கள், அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். . மலையாள அரசியல் எப்போதுமே வில்லங்கமான செயல்களுக்கு பெயர் போனது. நாங்கள் எல்லோரும் பரிசுத்தமானவன் என்று ஊருக்கு உபதேசம் செய்து விட்டு பெண்கள் விஷயத்தில் குளறுபடி செய்வதில் பலே கில்லாடிகள் .அதற்க்கு போலீஸ் உடந்தை

வேலூர் காட்பாடி 2 ரெயில்களில் கத்தி முனையில் கொள்ளை .. 5 பேரிடம் 15 பவுன் நகை பறிப்பு... சிக்னலை உடைத்து ரெயிலை நிறுத்தி ...

காட்பாடி அருகே ரெயில்களை நிறுத்தி ஒரே நாளில் 2 ரெயில்களில்,
பயணிகளிடம் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சிக்னலை உடைத்து ரெயிலை நிறுத்தி மர்ம கும்பல் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது.  கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாப்ராபேட்டை வெங்கடேசபுரம் என்ற இடத்தில் சிக்னல் கிடைக்காததால் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது  அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெயில் பெட்டியின் ஜன்னல் ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகளிடம் ஒரு கும்பல் ஜன்னல் வழியாக நகையை பறித்து சென்றுள்ளது. 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் 13 பவுன் நகையை பறித்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் தில்லை நகரை சேர்ந்த ஸ்ரீகாந்திடம் 4 பவுன் நகை, சுப்பிரமணியிடம் 3 பவுன் நகை, குரோம்பேட்டையை சேர்ந்த கீதாவிடம் 4 பவுன் நகை, மற்றும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த அருணாதேவியிடம் 2 பவுன் நகை என மொத்தம் 13 பவுன் நகையை கொள்ளை கும்பல் பறித்து சென்றனர்.

வியாழன், 3 நவம்பர், 2016

சுப்ரமணியம் சாமி : டாட்டா வரலாற்றில் அதிக ஊழல் செய்தவர் ரத்தன் டாட்டா தான் .. மாமுல் கொடுக்காட்டி கோபம் வரும்தானே

ராய்பூர்: டாடா நிறுவன வரலாற்றில் அதிக ஊழல் செய்தவர் ரத்தன் டாடா தான்
என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராய்பூரில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: டாடா நிறுவன வரலாற்றில் அதிக ஊழல் கறை படிந்தவர் ரத்தன் டாடா தான். அவர் டாடா குடும்ப வாரிசே கிடையாது. தத்து பிள்ளை தான். சைரஸ் மிஸ்ட்ரிக்கு ரத்தன் டாடா அநீதி இழைக்கிறார்.

சைரஸ் மிஸ்ட்ரி சிறப்பாக செயல்பட்டதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டாடா நிர்வாக குழு பாராட்டு தெரிவித்தது. இதனால் பொறாமை அடைந்த ரத்தன் டாடா உடனடியாக இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். ரத்தன் டாடாவுக்கு 2 ஜி, ஏர் ஏசியா உள்பட பல ஊழல் வழக்குகளில் தொடர்புள்ளது. இதில் இருந்து தப்பிக்கதான் தற்போது இந்த பதவியை பிடித்துள்ளார்.

314 எல்லையோர கிராமங்கள் பாதிப்பு .. பாக் இராணுவ அத்துமீறல் தாக்குதல்கள் அதிகரிப்பு

பாக். ராணுவத்தால் 314 கிராமங்கள் பாதிப்புபாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தாக்குதலால் சர்வதேச எல்லை (IB) மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LOC) பகுதியில் கத்துவா முதுல் பூஞ்ச் வரை 314 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உரி செக்டாரில் புகுந்த தீவிரவாதிகள் இந்தியா ராணுவம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 19 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் எல்லை அருகே உள்ள கிராமங்களை குறிவைத்து அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. மோர்ட்டார் குண்டுகளையும் பயன்படுத்தி வருகிறது.

தொலைக்காட்சி விவாதங்களை முறைப்படுத்துங்கள்.. பங்கேற்பாளர்கள் கூட்டம்.. திராவிட இயக்க தமிழர் பேரவை செயலகத்தில்..

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் அன்று திராவிட இயக்க தமிழர் பேரவை செயலகத்தில் ஒன்று கூடி, தொலைக்காட்சி விவாதங்களை ஒழுங்கு படுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.அத்தீர்மானம் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுளதாக தெரிகிறது. அண்மைக்காலமாக தொலைகாட்சி விவாதங்களில் பங்கு பற்றும் அடிப்படைவாதிகள் நாகரீகமற்ற முறையிலும் இதர கருத்து பகிர்வாளர்களை மிரட்டும் தொனியிலும் பேசி வருவது தெரிந்ததே.

என்னங்க உங்க வெங்காய நியாயம்? ஒரு நடுநிலையாளரின் கேள்விகள்

என்ன நியாயமோ !!!!!
உங்க வெங்காய நியாயம் !!!!
கருணாநிதி தொடங்கி வச்ச..சமச்சீர் கல்வி தொடராது
கருணாநிதி தொடங்கி வச்ச..மின்திட்டம் தொடராது
கருணாநிதி திறந்து வச்ச புதியதலைமைசெயலகம் தொடராது
கருணாநிதி தொடங்கிவச்ச...அண்ணா நூலகம் ...தொடராது
கருணாநிதி தொடங்கிவச்ச..செம்மொழி நூலகம் ..தொடராது
கருணாநிதி தொடங்குன மதுரவாயில்பறக்கும்சாலைதொடராது
கருணாநிதி தொடங்குன செம்மொழிபூங்கா...தொடராது!
கருணாநிதி ஆட்சியின் ..தொழில் வளர்ச்சி...தொடராது!
கருணாநிதி தொடங்குன..மெட்ரோ ரயில் திட்டப்படி தொடராது
கருணாநிதி குடுத்த ...20% ..பஸ் ஊழியர் போனஸ்.. தொடராது
கருணாநிதி ஆட்சியின் ..பஸ் கட்டணம்..தொடராது
கருணாநிதி ஆட்சியின் ..மின் கட்டணம்..தொடராது
கருணாநிதி ஆட்சியின் ..பால் கட்டணம்..தொடராது
கருணாநிதி ..சந்திச்ச ...மக்கள் + நிருபர் சந்திப்பு ...தொடராது!
கருணாநிதியின்...மக்கள் நல திட்டங்கள்..எதுவும்..தொடராது!
ஆனா.. " மது " மட்டும் தொடருமா?..
அதுவும் 1974..லியே..மூடுன விஷயம்..மட்டும்..தொடருதா? ..
அது என்னாய்யா கருணாநிதி 1971..ல திறந்ததைசொல்றீங்க?
1974 ல மூடுனதை...சொல்ல மாட்றீங்க?..
எம்.ஜி.ஆர்'..1981..ல திறந்ததை ..சொல்ல மாட்றீங்க?... என்னய்யா நியாம்??
Siva kumar
இதை கட்சிசாரா ஒருவரின் கேள்விகளாக பார்க்கவும்  முகநூல் பதிவு   தாமோதரன் சென்னை

வங்கி தேர்வில் தமிழகத்துக்கு அநீதி? குளத்தூர் மணி


‘ பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் ஜூனியர் அசோசியேட் தேர்வில் தமிழகத்தை முற்றிலும் வஞ்சித்துவிட்டனர்’ எனக் கொதிக்கின்றனர் தேர்வர்கள். ‘ தமிழ்நாட்டுப் பிரிவில் வட இந்தியர்களே அதிகம் தேர்வாகியுள்ளனர்’ எனவும் வேதனைப்படுகின்றனர்.

இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு ஐ.பி.பி.எஸ் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஆனால், பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும், தன்னிச்சையாகவே கிளார்க் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு கிளார்க் அந்தஸ்தில் (ஜூனியர் அசோசியேட்) உள்ள 17,400 காலி பணியிடங்களை நிரப்புகிறது பாரத ஸ்டேட் வங்கி. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது. இதில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,420 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.

ட்ராபிக் ராமசாமி வழக்கு :ஜெ’ சுயநினைவு கையெழுத்து எங்கே?

அதிமுக-வினரின் வேட்புமனுக்களில் ஜெயலலிதாவின் கைரேகை
பதியப்பட்டுள்ளநிலையில், அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் டிராஃபிக் ராமசாமி.
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 42 நாட்களைக் கடந்து சிகிச்சை பெற்றுவரும்நிலையில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூன்று அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களோடு தாக்கல்செய்யும் பார்ம் ஏ, மற்றும் பி-இல் ஜெயலலிதாவின் இடதுகை பெருவிரல் ரேகை உள்ளது. இது, பல்வேறு கேள்விகளையும் சட்ட விவாதங்களையும் உருவாக்கியநிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிந்த வேட்புமனுக்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி பலி.. ஐரோப்பாவிற்கு தஞ்சம் புக சென்ற 2 கப்பல்களில்

லிபியாவைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு தஞ்சம் புக சென்ற 2 கப்பல்களில் 200க்கும் மேற்பட்டோர் ஏற்பட்டோர் சென்றனர். இதில் அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் சென்றதால் கப்பல் கடலில் மூழ்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.  தினகரன்.காம்

துரைமுருகன் : ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல சொத்துக்களுக்கு ரேகை உருட்டப்படுகிறது

தர்மபுரி : ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்  அ.தி.மு.க. மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களமே பரபரத்துக்கிடக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சில கட்சிகளும், இதனால் அவர்கள் பயன்பட்டு விடக்கூடாது என சில கட்சியினரும் செயல்பட ஒட்டுமொத்த அரசியல் களமும் பரபரத்துக்கிடக்கிறது.தி.மு.க. அரசியல் நிகழ்வுகளில் மட்டுமல்லாது, திருமண விழாக்கள் போன்ற தனிப்பட்ட விழாக்களிலும் இந்த விவகாரம் தான் பேசப்பட்டு வருகிறது. தர்மபுரியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இல்லத் திருமண விழாவில், "கடந்த  அ.தி.மு.க ஆட்சியை நான் ஐ.சி.யுவில் இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறேன். இப்போது அப்படி பேச முடியாத சூழல் நிலவுகிறது," என்று மு.க. ஸ்டாலின் பேச... "ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல சொத்துக்களுக்கு ரேகை உருட்டப்படுகிறது," என துரைமுருகன்  திரி கொளுத்த... இந்த விவகாரம் பரபரக்கிற

என்டிடீவி சேனலுக்கு மத்திய அரசு தடை

Prashant Bhushan ‏@pbhushan1 Prashant Bhushan Retweeted Prashant Bhushan Just yesterday,while presenting Goenka awards,Modi said that emergency must not be repeated.And today he orders shutdown of NDTV! Hypocrite! பதான்கோட்டில் இந்திய ராணுவ தளத்தின் மீது பாக். ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் நடத்திய தாக்குதல் குறித்து  செய்தி வெளியிட்ட என்டிடீவி  இந்தி செய்தி சேனலுக்கு ஒரு நாள் முழுக்க தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 9-ஆம் தேதி முழுநாளும் ஒளிபரப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பரப்பு துறையின் அறிவுறுத்தல்களை மீறி செய்தி வெளியிட்டதற்காக இந்தத் தடை என மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11 மாடிக் கட்டிடம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது: விஜயகாந்த்

<தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் பல வானவிலாவிய அடுக்குமாடி கட்டிடங்களை சர்வசாதரணமாக கட்டி சாதனைபடைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் சென்னையில் வெறும் 11 மாடி கட்டவே உரிய திட்டமிடுதலோ, தரமோ இல்லாததன் விளைவு, கட்டிட இடிப்பு சம்பவம் நம் தமிழ்நாட்டின் நிலையை உலக அளவில் மிகவும் அவமானத்தை உண்டாக்கி இருக்கிறது. ஒன்றை உருவாக்குவது தான் கடினம், அழிப்பது மிகவும் எளிது.

நேற்றைய தினம் மாலை அனைத்து தொலைகாட்சிகளிலும் ஏறக்குறைய மூன்று மணிநேரம் ஏதோ கின்னஸ் சாதனை நிகழ்வு நடப்பது போன்று நேரலையில் தமிழ்நாட்டின் தரத்தையும், மானத்தையும், கப்பல் ஏற்றிய நிகழ்வாகவே அமைந்தது. இந்த கட்டிடம் இடிப்பதற்கு யார் காரணம்?.

சசிகலா புஷ்பா கைதாக வாய்ப்பு இருக்கிறது? தடை உத்தரவு செல்லுபடியாகுமா?

அ .தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா மீது தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் மனு தொடர்பாக நீதிமன்றம் தெளிவுபடுத்தாததால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் அவரது வழக்கறிஞர்கள். ' இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் கைது நடவடிக்கை பாய்ந்துவிடக் கூடாது' எனவும் அச்சப்படுகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்திலேயே அதிரடியைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா. இதன்பிறகு, சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்தன. இதில், சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் அளித்த பாலியல் தொடர்பான புகார் மிக முக்கியமானது. இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை எதிர்த்து, நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கினார். இதற்கிடையில், பணிப்பெண்கள் இருவரும் வழக்கை வாபஸ் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 3 RSS காரனின் கள்ள காதலிகள் இவர்கள்

Brahminஇந்தியப் போலி மார்க்சிஸ்டுகளின் சித்தாந்த குரு சங்கரன் நம்பூதிரி மற்றும் அவரது சீடர்களின் மார்க்சிய வரலாற்று ஆய்வுகளும் முடிவுகளும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் ”இந்துத்துவ”க் கோட்பாடுகளும் அடிப்படையில் வேறானவை அல்ல. முன்னவை வஞ்சகமும் துரோகமும் நிறைத்து மூடி மறைக்கப்பட்ட தத்துவ வரலாற்றுப் புரட்டுகள்; பின்னவை பகிரங்கமான பாசிச வெறி நிரம்பியவை. பொதுவில் இதை நிருபிக்கும் வகையில் இத்தொடரின் முதற்பகுதி அமைந்தது; குறிப்பாக ஆரியர் ஆக்கிரமிப்பு அழிவு வேலைகளை மூடிமறைத்து நியாயம் கற்பிக்கும் முயற்சியில் இவர்களுக்கிடையிலான ஒற்றுமையை நிருபிக்கும் வகையில் இரண்டாம் பகுதி அமைந்தது. வருணாசிரம் சாதிய அமைப்பு ஆகியவற்றை உருவாக்கி ஆரிய, பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட வரலாற்றை எப்படிப் போலி மார்க்சிஸ்டுகள் திரித்துப் புரட்டுகிறார்கள் அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுடன் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பதை இந்தப்பகுதியில் பார்ப்போம். அறிவுத்துறையில் மட்டும் ஈடுபடுவோர் பிரதானமாக புரோகிதத் தொழிலில் ஈடுபடுவோர் பிராமணர்களாயினர்.
வருணாசிரம சாதிய அமைப்பு முறை ஆரிய பார்ப்பன ஆதிக்கத்துக்காக அவர்களால் உருவாக்கப்பட்டதில்லை; சமூகப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, தன்னியல்பான தேவையின் அடிப்படையில் ஏற்பட்ட வேலைப் பிரிவினையின் காரணமாகத் தானே தோன்றியதுதான் என்று கூறித் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் நம்பூதிரியும் அவரது சீடர்களும்.

தனுஷ்கோடி கடலில் சிக்கிய பேருந்து .. அரிச்சல் முனை சாலை திறக்கப்படாததால் கடற்கரை வழியே சென்ற...

தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கிய வேனிலிருந்து மீட்கப்படும் சுற்றுலாப் பயணிகள்
தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கிய வேனிலிருந்து மீட்கப்படும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கியதால் தவித்த சுற்றுலாப் பயணிகள் மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
தனுஷ்கோடி கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக பயணிகள் ராமேசுவரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரையிலும் பேருந்து அல்லது தனியார் வாகனங்களில் வந்து பின்னர் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு கடற்கரை வழியே சுற்றுலா வேன் மூலம் செல்கின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, பாலம், கம்பிப்பாடு, அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

இதுவரை தமிழகம் எதிர்த்து வந்த திட்டங்கள் எல்லாம் கொல்லைவாசல் வழியாக நிறைவேறுகின்றன! ஆனால் காவிரி நோ .. எய்ம்ஸ் நோ ..

உதய் மின் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பொது நுழைவுத்தேர்வை
இனி தமிழக அரசே நடத்தும் என்ற அறிவிப்பு போன்றவை கடந்த சில நாட்களில் இதுவரை இருந்த எதிர்ப்பை தகர்த்தி தமிழகத்தில் காலூன்றியுள்ளது. இவற்றை கடுமையாக எதிர்த்தாவர் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் தற்போது அவரது அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், மிகவும் குறுகிய காலத்தில் பரபரப்பில்லாமல் மிகவும் அமைதியான முறையில் இரண்டு நடவடிக்கைகள் சமீப காலத்தில் நடந்துள்ளன. பல்வேறு மாநில அரசுகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவரும் திட்டமான உதய் மின் திட்டத்துக்கு தமிழக அரசின் உடனடி ஒப்புதல், அதேபோல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்

பொன்.செந்தில்குமார்  : அந்த நிலப்பரப்பில் நிற்கும்போது பெருமிதமாக இருக்கிறது. அரியலூருக்கு அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமர்ந்துகொண்டு, தெற்காசியாவின் பெரும் பகுதியை ஆட்சிசெய்த ராஜேந்திரச் சோழனின் படை, கடல்கடந்து வந்து நிலைகொண்ட பகுதி; அரபு, சீன வர்த்தகர்களோடு போட்டியிட்டு, சோழ தேசத்து வர்த்தகர்கள் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த இடம்; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடல் பயணம் மேற்கொள்பவர்கள், பருவக்காற்று மாற்றத்துக்காகக் காத்திருக்கவும் ஓய்வெடுக்கவும் பயன்படுத்திய கடலோரப் பரப்பான  மலேசியாவில், கிடா மாநிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியில் நின்றுகொண்டிருக்கிறோம்.  முதல்நாள் பெய்த சாரல் மழையில், மரங்கள் குளித்துச் சிலிர்த்திருக்கின்றன. இந்தோனேஷிய காட்டுத்தீயால் எழுந்த புகைமூட்டம் நிலமெங்கும் பரவியிருக்கிறது.

இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை

இந்திய - இலங்கை மீனவர் பிடிவாதம் : டில்லி பேச்சில் பலனில்லை?; டில்லியில், மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த, இந்திய -- இலங்கை மீனவர்களுக்கு இடையி லான பேச்சில், இருதரப்புமே தங்கள் கோரிக்கை களில் உறுதியாக இருந்ததால், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சு, நேற்று, டில்லியில் உள்ள, வெளியுறவு துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள நேரு பவனில் நடந்தது.

நடிகர் கார்த்திக் குமார் நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்தார் .. பத்து ஆண்டுகள் காத்திருந்து ... சலிப்பு

எதிர்பார்ப்புசென்னை: கார்த்திக் குமார் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். அவரின் 16 ஆண்டு கால காத்திருப்பு பலனிக்காமல் மனம் நொந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
2000ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் அறிமுகமானவர் கார்த்திக் குமார். முதல் படமே மணிரத்னத்தின் படம் என நம்பிக்கையுடன் கோலிவுட் வந்திருக்கிறார்.
அடுத்ததாக பி.சி. ஸ்ரீராமின் இயக்கத்தில் அதுவும் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது அவருக்க="முதல் படத்தில் துணை நடிகராக வந்தாலும் அடுத்த படத்திலேயே அதுவும் பி.சி. ஸ்ரீராம் படத்தில் ஹீரோவான கார்த்திக் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ..." எனக்கென்னவோ இவருக்கு மீண்டும் ஒரு அதிஷ்டம் அடிக்கும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார் என்று தோன்றுகிறது

பெண் தொழிலாளர்கள் மீது பாலிய அத்துமீறல்கள் .. திண்டுக்கல் ராமா ஸ்பின்னிங் ..

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை என்ற ஊரில் உள்ள ராமா ஸ்பின்னிங் மில்லில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, ஆறு பெண்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பிய அந்தக் கடிதம், பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் டெக்ஸ்டைல் துறையின் அழுக்கு முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ள அந்தக் கடிதம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். அந்நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கே:
“அவன் எங்கள் மீது வேண்டுமென்றே விழுவான். இறுக்கிப் அணைப்பான், மார்பகங்களை தொட்டு, பிழிவான்” என்று ஆண் மேற்பார்வையாளரின் அத்துமீறல் குறித்து எழுதியிருக்கிறார் ஒரு பெண். “எந்தப் பெண்ணாவது அவனுடைய செயல்களுக்கு மறுப்பு தெரிவித்தால், சம்பளத்தின் ஒரு பகுதியை இழக்க வேண்டியிருக்கும். எங்களுக்கு இந்த வேலை தேவை. தினமும் எதிர்கொள்ளும் இந்த அத்துமீறலை யாரிடம் முறையிடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

தமிழ் சினிமா நூற்றாண்டு: நடராஜ முதலியார் என்பவர் ராமானுஜ அய்யங்கார், சீனிவாச அய்யர் என்றிருந்தால் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு இருக்குமா?

மோ. அருண் மோ. அருண்தமிழ் சினிமாவின் நூற்றாண்டு தமிழ்நாட்டை சார்ந்த எந்த ஊடகத்தாலும் கவனிக்கப்படாமல் அனாதையாக கடந்து செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழின் எல்லா ஊடகங்களும் சினிமாவை சார்ந்தே தங்கள் பிழைப்பை நடத்துகிறது. ஆனால் தங்களுக்கு வருமான ஆதாரமாக எது இருக்கிறதோ அதன் நூற்றாண்டை கொண்டாடாமல் தவிர்ப்பது எதனால்? எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டை தமிழ் இந்து சிறப்பாக கொண்டாடுகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு குறித்து ஒரு வரி கூட அதன் சினிமா செய்தியாளர்கள் எழுதுவதில்லை. எனில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, நடராஜ முதலியார் என்பவர் ராமானுஜ அய்யங்கார், சீனிவாச அய்யர் என்றிருந்தால் இந்நேரம் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு இருக்குமா இல்லையா? நம்மவா இல்ல, அதனால் ஏன் இந்த நூற்றாண்டை கண்டுக்கொள்ள வேண்டும் என்று தினமணி, தினமலர், தமிழ் இந்து போன்ற பார்ப்பன பத்திரிகைகள் புறக்கணிக்கிறதா என்கிற ஐயம் இயல்பாகவே எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தீவிரவாதிகளிடம் துப்பாக்கி இருந்ததை பார்க்கவில்லை ..சாட்சி வாக்குமூலம்!

கிட்டத்தட்ட ஒரு டஜன் கிராம மக்கள், போபால் சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதை நேரில் கண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் குற்றவாளிகளிடம் துப்பாக்கி போன்ற ஆயுதம் இருந்ததைப் பார்க்கவில்லை என்று தி ஹிண்டு ஆங்கில நாளிதழிடம் கூறியிருக்கிறார்கள்.
இந்த எட்டு சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் விளையாட்டு என்று எதிர்க்கட்சிகள் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சௌகானை குற்றம்சாட்டியுள்ளார்கள். போபால் சிறையிலிருந்து சிமி தீவிரவாதிகள் தப்பியோடியபோது அவர்களால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக சௌகான் அறிவித்துள்ளார்.

அதிமுக இன்றைய எபிசொட் .. விவேக்கும் , சிவகுமாரும்தான் அமைச்சர்களுக்கு ஆடர் பிறப்பித்தார்கள் .. சசி வெளில வரல .. இதெல்லாம் ஒரு கட்சி .. ஆட்சி ..


மொபைலில் டேட்டாவை தொட்டோம். ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்ட ஸ்டேட்டஸ்க்கு லைக்ஸ் மூவாயிரத்தைத் தாண்டியிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டது.
“அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று அதிகாலையிலேயே விவேக் வந்துவிட்டார். எப்போதும் காலை 8 மணிக்குப் பிறகுதான் மன்னார்குடி சொந்தங்கள் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வருவார்கள். இளவரசியின் மகன் விவேக் அதிகாலை 5.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அவர் வந்த சற்றுநேரத்தில் டாக்டர் சிவகுமாரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அமைச்சர்கள் யார் வந்தாலும் முதல் தளத்துடன் நின்றுவிடுவார்கள். விவேக், டாக்டர் சிவகுமார் என சசிகலா உறவினர்களுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் எந்தநேரத்திலும் இரண்டாவது தளத்துக்குப் போகலாம், வரலாம். விவேக், சிவகுமார் இருவருமே அதிகாலை நேரத்தில் சசிகலா தங்கியிருந்த அறைக்குப் போனார்கள்.