வெள்ளி, 4 நவம்பர், 2016

நடிகை பிரதியுஷாவை விபசாரத்தில் தள்ளிய காதலன் .. தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் திருப்பம்: காதலன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினாரா?மும்பையில் தற்கொலை செய்துகொண்ட நடிகை அவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், பிரதியுஷா கடைசியாக தன் காதலன் ராகுல் சிங்கிடம் பேசிய உரையாடலின் எழுத்துப் பிரதி தற்போது வெளியாகி உள்ளது. இதில், மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் பிரதியுஷா பேசும்போது, ‘என்னை நானே விற்பதற்காக இங்கே வரவில்லை. நடிப்பதற்காக வந்தேன். இன்று நீங்கள் என்னை இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறீர்கள். ராகுல்... நான் எவ்வளவு மோசமாக உணர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது’ என்று குறிப்பிடுகிறார்.
பிரதியுஷாவை அவரது காதலன் ராகுல் ராஜ் சிங் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மும்பையை சேர்ந்த டி.வி நடிகை பிரதியுஷா பானர்ஜி (வயது 24) கடந்த ஏப்ரல் 1–ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுல் ராஜ் சிங்குடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் புகார் அளித்தார். > எனவே, பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ராகுல் சிங் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

மேலும், அதே தொலைபேசி அழைப்பில் ‘விபச்சாரம்’ என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருப்பதால், பிரதியுஷாவை ராகுல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருப்பது தெளிவாகி உள்ளது என அவரது பெற்றோர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குப்தா தெரிவித்தார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக