வியாழன், 3 நவம்பர், 2016

314 எல்லையோர கிராமங்கள் பாதிப்பு .. பாக் இராணுவ அத்துமீறல் தாக்குதல்கள் அதிகரிப்பு

பாக். ராணுவத்தால் 314 கிராமங்கள் பாதிப்புபாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தாக்குதலால் சர்வதேச எல்லை (IB) மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LOC) பகுதியில் கத்துவா முதுல் பூஞ்ச் வரை 314 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உரி செக்டாரில் புகுந்த தீவிரவாதிகள் இந்தியா ராணுவம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 19 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் எல்லை அருகே உள்ள கிராமங்களை குறிவைத்து அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. மோர்ட்டார் குண்டுகளையும் பயன்படுத்தி வருகிறது.


இந்த தாக்குதலில் கத்துவா மாவட்டத்தில் இருந்து பூஞ்ச் வரை சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டு கோடு வரை 314 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும், ‘‘அதிகமான ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லை அருகில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தற்காலிக முகாமிற்கு அழைத்து வரப்படுகின்றனர். மாவட்ட அரசு மருத்துவமனை, துணை மாவட்ட மருத்துவமனை, சமூக நலக்கூடம் போன்றவற்றில் 24 மணி நேர சுகாதார சேவைகள் தயார் நிலையில் உள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் 18 பேர் பலியாகியுள்ளனர். அதில் 12 பேர் பொதுமக்கள் ஆவார்கள். அத்துடன் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.  தினத்தந்தி,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக