வியாழன், 3 நவம்பர், 2016

பெண் தொழிலாளர்கள் மீது பாலிய அத்துமீறல்கள் .. திண்டுக்கல் ராமா ஸ்பின்னிங் ..

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை என்ற ஊரில் உள்ள ராமா ஸ்பின்னிங் மில்லில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, ஆறு பெண்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பிய அந்தக் கடிதம், பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் டெக்ஸ்டைல் துறையின் அழுக்கு முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ள அந்தக் கடிதம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். அந்நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கே:
“அவன் எங்கள் மீது வேண்டுமென்றே விழுவான். இறுக்கிப் அணைப்பான், மார்பகங்களை தொட்டு, பிழிவான்” என்று ஆண் மேற்பார்வையாளரின் அத்துமீறல் குறித்து எழுதியிருக்கிறார் ஒரு பெண். “எந்தப் பெண்ணாவது அவனுடைய செயல்களுக்கு மறுப்பு தெரிவித்தால், சம்பளத்தின் ஒரு பகுதியை இழக்க வேண்டியிருக்கும். எங்களுக்கு இந்த வேலை தேவை. தினமும் எதிர்கொள்ளும் இந்த அத்துமீறலை யாரிடம் முறையிடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை.
தயவு செய்து உதவுங்கள்” என்று கூறும் ஆகஸ்டு 29 தேதியிட்ட அந்தக் கடிதம் திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பப் பட்டிருக்கிறது.
“பணியை விட்டு விலகும்போதுதான் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து வழக்கம். இதுபோன்ற அத்துமீறலை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கடிதத்தைப் பெறுவது இதுதான் முதல் முறை” என்கிறார் அனைத்து பெண்களுக்கான தமிழ்நாடு டெக்ஸ்டைல் மற்றும் பொது பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ். திவ்யராகினி.
ராமா மில் நிர்வாகமோ, இந்த மேற்பார்வையாளர் மீது ஏற்கனவே ஒரு பெண் புகார் கொடுத்திருந்தார் என்றும் அதற்கான ஆதாரம் இல்லாததால் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கிவிட்டு, மேற்பார்வையாளரை எச்சரித்தோம் என்கிறது. அதோடு மேற்படியான கடிதம் பற்றி எதுவும் தெரியாது என்கிறது.
திண்டுக்கல்லில் உள்ள இந்த மில்லில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகிறார்கள். இந்தப் பெண்களிடம் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதும், உடன் பணிபுரியும் ஆண்களும்கூட பாலியல் ரீதியாக தொல்லை தருவதும் நிர்வாகத்துக்கு தெரிந்தே நடப்பதாக கடித்ததில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
“சம்பளத்தை குறைப்பது குறித்தோ பணிநேரத்தை அதிகமாக்குவது குறித்தோ நாங்கள் கவலைப்படவில்லை. பாலியல் அத்துமீறல்களைத்தான் எங்கள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது பற்றி எங்கள் பெற்றோருடனும் பேசமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் பயத்துடனே வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்” என்கிறது அந்தக் கடிதம்.
திண்டுக்கள் சமூக நலத்துறை அலுவலர் ஜி. சாந்தி, இந்த கடிதம் குறித்து விசாரிக்க குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக