சனி, 5 நவம்பர், 2016

தனுஷ்கோடியில் சூறாவளி 100 ஆண்டுகள் சர்ச் சுவர் இடிந்தது

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் வீசிய சூறாவளி காற்றினால் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதா சர்ச் சுவர் இடிந்து விழுந்தது. தனுஷ்கோடி--இலங்கை தலைமன்னார் இடையே 1914ல் கப்பல் போக்குவரத்து துவங்கியது. இதற்காக தனுஷ்கோடியில் தங்கிய ஆங்கிலேயர்கள் 'புனித பிலேமினாள் சர்ச்' அமைத்தனர். 1964ல் ஏற்பட்ட கோர புயலில் சிக்கி சர்ச் மேற்கூரை சேதமடைந்தது. எஞ்சிய சுற்றுசுவர்கள் புயலின் அடையாளமாக நேற்று முன்தினம் வரை(3ம் தேதி) காட்சியளித்தது. கடந்த 100 ஆண்டுகளாக வெயில், மழை, சூறாவளி காற்றுக்கு தாக்குபிடித்த சர்ச் சுவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீசிய சூறாவளி காற்றில் இடிந்து விழுந்தது.தனுஷ்கோடியில் புயலின் எச்சமாக உள்ள மாதா சர்ச், விநாயர் கோயிலை புனரமைத்து

அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை முன்கூட்டியே துவக்கியிருந்தால் சர்ச் சுவரை பாதுகாத்திருக்கலாம் என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
தனுஷ்கோடி மீனவ பெண் லெட்சுமி,65 கூறுகையில்,“நவ.,3ம் தேதி நள்ளிரவு பலத்த காற்று வீசியது. அதிகாலை 2 மணிக்கு மாதா சர்ச்சின் ஒரு பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. புயலுக்கு பின் 52 ஆண்டுகளாக தாக்குபடித்த சர்ச் இடிந்தது வேதனையாக உள்ளது. பழமையான சர்ச்சை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக