சனி, 24 செப்டம்பர், 2016

கோவை கலவர தாக்குதல் பட்டியல்.... சசிகுமார் மனைவியின் கள்ளகாதல் கொலையை இந்து முஸ்லிம் கலவரமாக்கிய காவி ரவுடிகள்

thetimestamil.com :கோவையில் வெள்ளிக்கிழமை இந்து முன்னணியினர் நடத்திய வன்முறைகளின் பட்டியலுடன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார் சிபிஐ(எம்)மின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். இந்த மனு விவரம்:கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்ப்பாளர் பொறுப்பில் இருந்த டி. சசிக்குமார் (35) என்பவர் 21.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பத்தையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச்சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர்.

இந்துமுன்னணி சசிகுமார் கொலையில் அவரது மனைவி கைது ! இது ஒரு கள்ளகாதல் கொலையா?

இந்து முன்னனி மாவட்ட செயலாளர் சசிகுமார் படுகொலையின் குற்றவாளி
அவரது மனைவி கைது!!
சசிகுமார் மனைவிக்கு கள்ள காதல் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது, விரிவாக்கம் சசிகுமார் கவுன்டர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்தவர் அப்படி இருக்கும் போது மனைவிக்கு அவர் சமூகத்தை சார்ந்த ஒருவருடன் கள்ளகாதல் ஏற்பட்டுள்ளது அது தெரிந்த சசிகுமார் அவர் மனைவியை கண்டித்துள்ளார் இதை பொருத்துக் கொள்ளாமல் அவர் ஆள் வைத்து தீர்த்துக் கட்ட முடிவு செய்தார் அதுவும் தன்னை யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்பதில் தொளிவாக இருந்து இந்த காரியத்தை செய்து முடித்துவிட்டார் அதை மத கலவரமாக மாற்ற இந்து முன்னனி அமைப்பு ஏற்பாடு செய்தது அதை தான் மிக கட்சிதமாக செய்து முடித்துள்ளார்கள் . முகநூல்  பதிவு    வெளிச்சம் சமூகவலைதளம் N-1

விசாரணை படம், ஆஸ்கரை வென்றே தீரும்!' - (கதாசிரியர் சந்திரகுமார் ) லாக்-அப் மனிதனின் நம்பிக்கை


விகடன்.காம் : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ' ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் விசாரணை படத்திற்கு இருக்கிறது. கண்டிப்பாக ஆஸ்கர் வெல்வோம்' என்கிறார் படத்தின் கதாசிரியர் சந்திரகுமார். 
கோவை, பீளமேடு ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரின் அனுபவத்தில் இருந்து எழுதப்பட்ட லாக்-அப் நாவலை, விசாரணை திரைப்படமாக வெளிக்கொண்டு வந்தார் இயக்குநர் வெற்றிமாறன். இதுவரையில், வெனிஸ் திரைப்பட விருது, தேசிய விருது என ஏழு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மத்திய திரைப்படக் குழு, ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படத்தை பரிந்துரைத்துள்ளது. இதை அறிந்து உற்சாகத்தில் இருக்கின்றனர் விசாரணை படக்குழுவினர். 
சந்திரகுமாரிடம் பேசினோம். " மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைத்த மத்திய திரைப்படக் குழுமத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலை கழக பேராசிரியர் ஆகிறார்

புதுடில்லி : இந்திய பிரதமராக 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10
ஆண்டுகள் பதவியில் இருந்தவர் மன்மோகன்சிங். 2014-ம் ஆண்டு பார்லி., தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அவர் மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராகும் வாய்ப்பு பறிபோனது.
தற்போது மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும் பங்கேற்கும் அவர், மற்ற நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் பஞ்சாப் பல்கலைக்கழகம், மன்மோகன்சிங்கை மீண்டும் பேராசிரியர் பணிக்கு வருமாறு அழைத்தது. அந்த அழைப்பை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.    சிறந்த உலகம் போற்றும் பொருளாதார நிபுணர் திரு.மன்மோகன்சிங் அவர்கள். அவர்களிடம் பாடம் படிக்க இருக்கும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

பெங்களூரை மிஞ்சிய கோவை கலவரம் .. பாஜக ரவுடிகளை அடக்கமுடியாமல் திணறிய போலீஸ்

கோவை: பெங்களூரில் நடந்த கலவரத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒரு வெறியாட்டத்தை கோவையில் நேற்று நடத்தியுள்ளனர் இந்து முன்னணியினர். ஒட்டுமொத்த நகரத்தையும் வன்முறையால் சூறையாடியுள்ளனர். நகரமே ஸ்தம்பித்துப் போனது. மக்கள் இந்த வன்முறையால் பெரும் அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகினர்.
கோவை சுப்பிரமணியபாளையத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார். இந்து முன்னணி மாவட்ட செய்தித் தொடர்பாளரான இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்து சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் சசிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கோவையில் பெரும் பதட்டம் மூண்டது. கலவரம் வெடித்தது. பஸ்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீதும் கல் வீசினர். இதில் 2 பஸ்களின் கண்ணாடியும் உடைந்தது. 14க்கும் மேற்பட்ட பஸ்கள் தாக்குதலுக்குள்ளாகின.

கவிஞர் சல்மா – ஆவணப்படம் திரையிடல்

சண்டான்ஸ், பெர்லின் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று
கவனம் பெற்ற கவிஞர் சல்மா பற்றிய படம் முதல்முறையாக சென்னையில் திரையிடப்படுகிறது. உலகின் கவனிக்கத்தக்க ஆவணப்பட இயக்குனரான கிம் லாங்கினாட்டோ இப்படத்தை இயக்கியுள்ளார். 14 சர்வதேச விருதுகளை வென்ற இந்த படம், இதுவரை 120 நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. தமிழ் ஸ்டுடியோ இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.;24-09-2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திரையரங்கம், கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்.சிறப்பு விருந்தினர்கள்:;இயக்குனர் சமுத்திரக்கனி,;கவிஞர் சல்மா

முதல்வரின் குருதி மும்பைக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் அந்த வசதி இல்லையாம்!

தமிழ்நாட்டில் குருதி பரிசோதனை செய்ய வசதி இல்லை என்பது ஒரு வில்லங்கமான செய்தி போல தெரிகிறது. சாதாரண பரிசோதனை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  
மின்னம்பலம்.காம் : அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதும், சர்க்கரை உள்ளிட்ட சில அடிப்படை டெஸ்ட்களை உடனடியாக செய்துவிட்டார்கள். அதன் அடிப்படையில்தான் அவருக்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் மருத்துவர்கள். ஆனால் முதல்வருக்கு நுரையீரல் சம்பந்தமான பிரச்னை இருப்பதால், அவரது ரத்தத்தில் மேலும் சில பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த டெஸ்ட்கள் சென்னையில் செய்யும் வசதி இல்லை என்பதால் மும்பையில் உள்ள லேப்க்கு ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை எடுத்து விமானத்தில் அனுப்பியிருக்கிறார்கள்.

திபெத்தியர்களுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: இந்தியாவில் வசிக்கும், திபெத்திய வம்சாவளியினருக்கு, 'பாஸ்போர்ட்' வழங்கும்படி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'இந்தியா குடியரசான, 1950, ஜன., 26க்கு பின் பிறந்த அனைத்து திபெத்தியர்களும் இந்திய குடிமக்கள்' என்ற சட்டம், 1955ல் இயற்றப்பட்டது. பின், '1987, ஜூலை, 1க்குள் பிறந்திருக்க வேண்டும்' என, 2003ல், இந்திய குடிமக்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், லோப்சாங் வாங்யால் உள்ளிட்ட, மூன்று பேர், தமக்கு, 'பாஸ்போர்ட்' வழங்க உத்தரவிடக் கோரி, வழக்கு தொடர்ந்தனர்.

பலூசிஸ்தான் தலைவருக்கு இந்தியா அடைக்கலம்.. பாக் எச்சரிக்கை!


பலுசிஸ்தான் குடியரசுக் கட்சி தலைவரும் நிறுவனருமான பிரஹம்தாக் பக்டிக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தால் அது, “தீவிரவாதத்திற்கு அதிகாரபூர்வ ஆதரவு” என்றே அர்த்தம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தனது ட்விட்டரில், “பக்டிக்கு இந்தியா அடைக்கலம் அளிக்க முன்வருவது ஒரு அரசே பயங்கரவாதியை வளர்ப்பதாகும். இதன் மூலம் இந்தியா தீவிரவாதத்தை அதிகாரப்பூர்வமாக வளர்க்கும் நாடாகும்” என்று பதிவிட்டுள்ளார். பலுசிஸ்தான் குடியரசுக் கட்சித் தலைவர் பிரஹம்தாக் பக்டி இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருவதாகவும் எழுந்த செய்திகளை அடுத்து கவாஜா ஆசிப் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் பக்டி செவ்வாயன்று அங்குள்ள இந்திய தூதரகத்தை இது குறித்து அணுகினார்.

முதல்வர் ஜெயலலிதா.. சர்க்கரையின் அளவு 510.. முறையீரல் தொற்று..

மின்னம்பலம்.காம் :அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவதில் புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. நேற்று இரவு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மூச்சுத்திணறலாகி மயக்கமாகி இருக்கிறார் ஜெயலலிதா. அதன் பிறகே அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அங்கே போனதும் பரிசோதனையில் மூச்சுத் திணறலுக்கு காரணம் நுரையீரலில் தொற்று இருப்பதுதான் என்பதை கண்டு பிடித்தனர்.
அவரது சர்க்கரையின் அளவும் பரிசோதனை செய்யப்பட்டது.சர்க்கரையின் அளவு 510 இருந்ததைக் கண்டுபிடித்தனர்.உடனடியாக சர்க்கரை அளவை குறைக்க அவருக்கு மருந்துகள் செலுத்தப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க செயற்கை சுவாசமும் செலுத்தப்பட்டது. நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.இன்று மாலையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

thetimestamil.com :மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அசாதாரண முறையில் புழல் சிறையில்மரணமடைந்தார். அவருடைய மரணத்தை தற்கொலை என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ராம்குமாரின் பெற்றோரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் முன்னாள் நீதிபதிகளும்கூட இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
ஸ்வாதி கொலையில் ராம்குமாருக்குத் தொடர்பில்லை, வேறு சிலருக்குத் தொடர்பிருக்கிறது என சொல்லிவருகிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமார் வழக்கறிஞருக்கு இவர் தகவல்கள் திரட்டித் தருவது போன்ற உதவிகளையும் செய்துவருகிறார். ராம்குமார் மரணத்தில் இவர் தன்னுடைய கருத்தாக ஒரு பதிவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில்,
“ராம்குமார் மட்டும்தான் குற்றவாளி என்றும் தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் 30 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் என்றும் கூறிய போலிசார் ராம்குமாரை கொலை செய்யும் வரை அதாவது மூன்று மாதம் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததின் காரணம் ஏன்?

அப்போலோ நோயாளிகள் கடும் அவஸ்த்தை .. அம்மா இருக்காய்ங்க .. கெடுபிடியோ கெடுபிடி!

புதிதாக இன்று வந்த புறநோயாளிகள் யாரும் மருத்துவமனைக்குள்
அனுமதிக்கப்படவில்லை. அதேபோல உள்ளே தங்கியிருக்கும் நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்களுக்கும் இன்று அனுமதி இல்லை. ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் உள்ளே, வெளியே போகமுடியாமல் போலீஸார் தடுத்தனர்.
* தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும் அப்பல்லோ மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களையும்கூட ஜெயலலிதா உள்ள இரண்டாவது தளத்துக்கு அனுமதிக்கவில்லை.
* அமைச்சர்கள் அனைவருமே தரை தளத்தில் உள்ள வரவேற்பு அறையில்தான் அமர்ந்தபடியும், நடந்தபடியும் இருக்கிறார்கள்.
* அப்போலோ மருத்துவமனை சாலையில் போக்குவரத்தை போலீஸார் நிறுத்திவிட்டனர்.
Special Correspondent FB Wing முகநூல் பதிவு

காவேரி 380 டி எம் சி யை 192 வரை குறைத்ததில் நாரிமன் பங்கு ... இவர்தான் ஜெயாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தவர்

ஒரு கட்டத்தில், ஆண்டுக்கு 380 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தர
வேண்டிய நிலையில் இருந்த கர்நாடகா தற்போது 192 டிஎம்சி கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வருவதற்கு நாரிமன் டீமின் உழைப்பு காரணம்.
சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும்போது இந்த நீரின் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காவிரி வழக்கில் தமிழகம் 52 டிஎம்சி தண்ணீரை கேட்டு வாதாடியபோது, 10 ஆயிரம் கன அடி தண்ணீரை வேண்டுமானால், நல் உறவுக்கு ஆதாரமாக வழங்க தயார் என கூறியிருந்தார் நாரிமன்.
உச்சநீதிமன்றம் முதலில் 15 ஆயிரம் கன அடி, பிறகு 12 ஆயிரம் கன அடி என தமிழகத்திற்கு நீர் திறப்பை உறுதி செய்ய கூறிவந்த நிலையில், இப்போது, 6 ஆயிரம் கன அடிதான் திறக்க சொல்லியிருந்தது. இது ஒன்றும் மிகப்பெரிய அளவு தண்ணீர் கிடையாது.
அலமாட்டி அணைக்கட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது நாரிமன் டீம்தான். மேலும் ஜெயலலிதாவுக்காக, ஹைகோர்ட்டில், சொத்துக் குவிப்பு வழக்கில் நாரிமன் ஆஜராகி அவருக்கு ஜாமீன் பெற்றுத் தந்தவர் என்பதும் அறிந்ததே.... முகநூல் பதிவு
Special Correspondent FB Wing

இந்துத்வா குண்டர்கள் பிணத்தை வைத்து ஊர்வலம் நடத்த அனுமத்தது ஏன்?.. திருமுருகன் காந்தி கேள்வி.

சென்னையை சேர்ந்த சாந்தவேல் என்பவர் சில வருடங்களுக்கு முன் ைது செய்தது. சாந்தவேலின் மூன்று சிறிய பெண் குழந்தைகளும் , அவரது மனைவியும் கதற, கதற அவர்களையும் கைது செய்து சாந்தவேலின் உடலை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு சென்று எரித்தது.. முத்துக்குமார் உடலை எடுத்துச் செல்ல மறுத்தது, அமரேசன் தீக்குளித்த போது மரியாதை செலுத்த அனுமதி மறுத்தது. ஐ.சி.எப் நிறுவனத்தில் வேலை மறுக்கப்பட்டதற்காக தீக்குளித்தவரின் உடலை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றனர். சென்ற வாரம் விக்கினேசின் உடலை கட்சி அலுவலகத்திற்கு எடுத்து செல்ல மறுத்தது காவல்துறை....
கேரளாவில் வெந்நீர் ஊற்றி கொல்லப்பட்டார். முல்லைப்பெரியாறு பிரச்சனை தீவிரமான காலத்தில் இவர். சபரிமலை சென்ற போது இது நடந்தது. அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்கும், நட்ட ஈடும் தரக்கோரிக்கை வைத்து தமிழின உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினோம்.

இணையதளத்தில் வேகமாக பரவும் சுவாதி – ராம்குமார் உரையாடல் !

சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில்
தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்களிடையே ராம்குமார் மரணத்தில் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், சுவாதியும் ராம்குமாரும் பேசிக்கொள்வது போல், ஒரு உரையாடல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு…..
சுவாதி: ராம்குமார் என்னாச்சு நீ நேற்று தற்கொலை செய்து கொண்டாயா?
ராம்குமார்: நீதான் ஸ்வாதியா? உன்னை இப்பதான் பார்க்குறேன். உன்னை கொலை பன்னதா தான், என்ன கைது பன்னி இப்ப கொலையும் பன்னிடாங்க.
சுவாதி: ஸாரி ராம், இனிமேலாவது என்னை கொலை பன்னவனை புடிப்பாங்களா?
ராம்குமார்: சத்தியமா உன்னை கொன்னவனையும் என்ன கொன்னவனையும் பிடிக்கவே மாட்டாங்க.
சுவாதி: அப்ப நமக்கு நியாயமே கிடைக்காதா? நமக்காக யாரும் நியாயம் கேட்டு போராட மாட்டாங்களா?
ராம்குமார்: நமக்காக நியாயம் கேட்டு யார் வந்தாலும், இங்க நம்ம இடத்துக்கு அனுப்பி வச்சுருவாங்க. வேனும்னா பாரு இன்னும் இரண்டு நாள்ல தீலிபன் மகேந்திரனையும் தமிழச்சியையும் இங்க அனுப்பி வைப்பாங்க.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

கீழடி அகழ்வாராய்ச்சி!- மெத்தனம் காட்டுகிறதா தமிழக அரசு?

விகடன்.காம் :மதுரை அருகே கீழடியில் புதையுண்ட ஒரு நகரத்தையே அகழ்வாராய்ச்சி மூலம் மத்திய தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், அவற்றை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானது.இது குறித்து தலைமைத் தொல்லியல் அதிகாரி அமர்நாத் கூறுகையில், "கிமு 500-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே, நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்தவற்றை, எங்கள் மத்திய அலுவலகத்தில் வைத்துப் பாதுகாப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார்.
இதற்கிடையே கீழடி ஆராய்ச்சிகள் குறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகித்திய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், "கீழடியில் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார், இது தொடர்பாக அவரிடம் பேசியதிலிருந்து...

6000 கன அடிக்காக அவசரப்பட்டுவிட்ட கர்நாடகா.. காத்திருக்கிறது மிகப்பெரிய கண்டம்


Veera Kumar பட்டுத்துணிக்கு ஆசைப்பட்டபோது, கட்டியிருந்த கோவணமும் பறிபோனது.. என்ற சொலவடை யாருக்கு பொருந்துமோ, இல்லையோ, கர்நாடகாவுக்கு தற்போது சரியாக பொருந்தும். ஆம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டிய கர்நாடகாவோ, “23ம் தேதி இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவோம், அதுவரை தண்ணீர் திறக்க மாட்டோம்” என தடாலடியாக அறிவித்துள்ளது. அவைகளின் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, சட்டசபைvsஉச்சநீதிமன்றம் என்ற ஒரு போட்டியை உருவாக்கி, அரசியலமைப்பு சிக்கலை உருவாக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்கு வாரிய தலைவர் ... ஐஸ்வர்யா ரஜினி ஐ நா பெண்கள் நல .. வெக்கம் கெட்ட கூத்தாடிகள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவப்படத்தை எரித்துப் போராட்டம்; விலங்கு நல வாரியம் விளக்கம்.
விலங்கு நல வாரியத்தின் தூதராக ரஜினியின் இளைய மகளும்
இயக்குநருமான செளந்தர்யா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருடைய நியமனத்தை எதிர்த்து திருச்சியில் தமிழர் வீரவிளையாட்டுப் பேரவைக் கழகமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு நடைபெறுவதைத் தடுத்த விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா பணியாற்றக்கூடாது. அப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். செளந்தர்யாவின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.
தமிழர் வீரவிளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ், “முரட்டுக் காளை படத்தில் காளையை அடக்குவது போல நடித்து, அதனால் கிராமப்புறங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றார் ரஜினி. தமிழர்களின் ஆதரவுடன் பெரிய நட்சத்திரமான ரஜினியின் மகளான செளந்தர்யா, விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

இந்து முன்னணி சசிகுமார் குடும்ப தகராறில் கொலை.. முஸ்லிம்கள் மீது பழிபோட முனையும் இந்துத்துவ ரவுடிகள் !

கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தினர். கலவர சூழல் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டபோதும், பூட்டை உடைத்து கடைகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். போலீஸார் இருந்தும் இந்து முன்னணியினரின் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை. அதோடு, மசூதிகளின் மீதும் இஸ்லாமியர்களின் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கொலைக்கான பின்னணி
சசிகுமார் வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் அதனால் அவர் பெண்ணின் சமூகத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலையை திசை திருப்பி, தனது அரசியல் ஆதாயத்துக்காக இந்து முன்னணி, பாஜக போன்ற இந்துத்துவ கட்சிகள் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  thetimestamil.com

ஜெயலலிதாவுக்கு சிறப்பு பூஜை:இந்து அறநிலைய துறை உத்தரவு!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுக்க அதிமுகவினர் கோயில்களில் பிராத்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் ஒரு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ளார். 'இன்று மாலை 4 மணிக்கு கோயில்களில் நடை திறக்கப்பட்டதும் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். இதை அந்தந்த கோயில் நிர்வாக அலுவலர்கள் கவனித்து கொள்ள வேண்டும்' எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடுகள் தீவிரம். மின்னம்பலம்,காம்

முதல்வரை சசிகலா மட்டும்தான் பார்க்க அனுமதி ! வேறு எவரும் பார்க்கவில்லை ..

முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று சொன்னார் பன்ருட்டி ராமச்சந்திரன். அவரைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், ’அம்மாவை பார்த்துவிட்டேன். அவர் நலமுட இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்!’ என்று சொன்னார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டும் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்கள் யாரும் மீடியாவிடம் பேசவே இல்லை.
என்ன நடக்கிறது? என நாமும் விசாரித்தோம். ‘முதல்வர் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது தளத்துக்கு அமைச்சர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் முதல்வர் இருந்த அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா மட்டும் அந்த அறையில் இருந்து வெளியே வந்தார். அவர்தான் அமைச்சர்களுடன் பேசினார். அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் பொன்னையனும், பன்ருட்டி ராமச்சந்திரனும் மீடியாவில் சொன்னார்கள்.

சசிகுமார் கொலை ... கோவையில் கலவரம் ! பேருந்துகள் கடைகள் மீது ரவுடிகள் தாக்குதல் .. இந்து முன்னணியினர் அட்டகாசம்!


தொழில் நகரமான கோவை, திருப்பூர் முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்து முன்னணிப் பிரமுகர் ஒருவரை நேற்று இரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்தது. இந்தச் செய்தியை அறிந்துவந்த இந்து முன்னணி தொண்டர்கள் நேற்று இரவு முதலே வன்முறைகளில் இறங்கிவிட்டார்கள். கண்ணில் கண்ட அரசுப் பேருந்துகள்மீது கல்வீசித் தாக்க பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இன்று காலை ஏழு மணி முதல் கோவை, திருப்பூரில் ஒட்டுமொத்த பேருந்துகளும் நிறுத்தப்பட்ன, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. பின்னலாடை நிறுவனங்களும் வர்த்தகமும் நிரம்பிய திருப்பூரில் கடைகள் தாக்கப்பட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் திருப்பூரில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கருதும்நிலையில், இந்த கொலையை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களே செய்தார்கள் என்ற செய்திகள் பரவிக் கிடப்பதால் கலவர அபாயம்கொண்ட கோவையில் சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள் வீடுகளுக்குள் முடங்கியிருகிறார்கள்.

ஜெயலலிதா குணமடைய வேண்டும்:கலைஞர் வாழ்த்து!


தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும். பல நேரங்களில் அரசியல் முரண்பாடுகள் எல்லைமீறி, காட்டமான விமர்சனங்களை இருவரும் வெளிப்படுத்தி வரும் சூழலில் திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தன் முகநூலில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பல்வேறுவிதமான செய்திகள் வந்துகொண்டே உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதாமீது கொள்கையளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மின்னம்பலம்.காம்

முதல்வரின் ஆரோக்கியம் ... சில தகவல்கள்..

தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு போன்ற காரணங்கள் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.ஆனால் நேற்று இரவு முதல்வருக்கு திடீரென்று சர்க்கரையின் அளவு அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவுக்கு டெல்லியில் இருந்து வந்த போன் கால்கள் தான் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.நேற்று போயஸ் கார்டனில் நடந்த விவாதங்கள் தான் ஜெயலலிதாவை மயக்கமடைய வைத்துள்ளது. நேற்று இரவு டெல்லியில் இருந்து சில தொலைபேசி அழைப்புகள் ஜெயலலிதாவுக்கு வந்துள்ளது.அந்த தகவல்களைக் கேட்ட பின்னர் ஜெயலலிதா மிகவும் சோர்வடைந்துள்ளார். பின்னர் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சசிகலா மற்றும் அரசு செயலாளர்களுடன் விவாதித்து கொண்டிருந்திருக்கிறார். இந்த விவாதத்தின் போது மன அழுதத்துடன் பேசிய ஜெயலலிதா மயங்கியதாக கூறப்படுகிறது.இதனால் பதறிய சசிகலா மற்றும் அவருடன் இருந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டெல்லியில் இருந்து வந்த தகவல் என்னவென்ற விபரம் வெளியாகவில்லை.  வெப்துனியா.காம்

சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான மணி படுகொலை!

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார்
காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான 'மணி' என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அதேப்போல் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார். உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான்.
இத்தகவல் நான் எழுதிய உடன் ஒரு பத்திரிக்கையார் அச்செய்தி உண்மைதானா என்று புலன் விசாரணை செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். தன் மகனை குறித்து அவதூறு பதிவு போட்டதற்காக தமிழச்சி மீது போலிசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இன்று மணி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு எதிராக மனு! தமிழகத்துக்கு காவேரி நீர் கொடுப்பதை எதிர்த்து உமா பாரதிட்யிடம் ,,...


தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து
கர்நாடகத்தைச் சார்ந்த அனைத்து அரசியல் தலைவர்களும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று கூறி வருகின்றனர். தேசியக் கட்சிகளைப் பொருத்தவரை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்கிறார்கள். தமிழக பாஜக தண்ணீர் வேண்டும் என்கிறது. கர்நாடக பாஜகவோ தண்ணீர் கொடுக்க முடியாது என்கிறது. கர்நாடக காங்கிரஸ் தண்ணீர் கொடுக்க முடியாது என்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சியோ தண்ணீர் வேண்டும் என்கிறது. ஆனால், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட  நிர்மலா சீத்தாராமன் கர்நாடகாவைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த்குமாருடன் இணைந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் மனு கொடுத்துள்ளார்.

கோவை இந்துமுன்னணி சசிகுமார் கொலை.. நள்ளிரவில் பயங்கரம்

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை
செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம்பாளையம், சக்கரை விநாயகர் கோயில் அருகே அவர் வந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை மீட்ட அப்பகுதியினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பலியானார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தினமலர்.கம

முதல்வர் ஆரோக்கியம்? சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வருமுன் எஸ்கேப் ரூட் அப்போலோ ..


விகடன்.காம் வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள்,  துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே  9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.
முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு  அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அனுமதி!

Tamil Nadu Chief Minister J Jayalalithaa was admitted to Apollo hospitals in Chennai on Thursday evening.
suffers from diabetes, hypertension and cellulitis. விகடன்.com  :தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வியாழக்கிழமை இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்த தகவலைத்தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு

karur inspectorகாவல் துணை ஆய்வாளர் சரவணன் ஸ்காட்லாந்து யார்டுக்கு போட்டியாக புகழப்பட்ட தமிழ்நாடு போலீசின் சாம்ராஜ்ஜியத்தில்தான் திருச்சி ராம்ஜி நகர் திருடர்களும் வாழ்கின்றனர். இருவரில் யார் அதிக புத்திசாலி? ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கத்தி – ரத்தம் – யுத்தமின்றி புத்தியை வைத்து மட்டும் திருடுவார்கள்.
அதாவது இந்தியா முழுவதும் ஆளுக்கொரு கும்பலாக செல்வார்கள். பணம் புழங்கும் இடத்தில் பத்து ரூபாயைப் போட்டு “இது உங்களுடையதா?” என்று கேட்ட உடன் சேட்டு குனிவார். உடனே காரில் இருக்கும் பணப் பையுடன் ராம்ஜி நகர் ‘அறிஞர்கள்’ பறந்து போவார்கள். இது போன்று ஏகப்பட்ட ‘புத்தி’ திருட்டுக்கள்! ஆனாலும் இத்தகைய ‘புத்தி’ ஏதுமின்றி தமது சீருடை, வாகனத்தை மட்டும் வைத்தே தமிழக போலிசு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க முடியும்.
யுவராஜ் முதலான சாதிவெறியர்களும், அரவக்குறிச்சியில் வோட்டுக்கு நோட்டால் ஆட்டம் போட்ட அன்புநாதன் போன்ற அ.தி.மு.க பினாமிகளும் வாழும் திருத்தலம் கரூர். இவர்கள் இப்படியாக இருப்பார்களென்றால் கரூர் போலீசு மட்டும் இளித்தவாயர்களா என்ன?

காவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து !

cauvery-issue-karnataka-violence-1வினவு.com :மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் அடுத்த பத்து நாட்களுக்குத் (13 டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்துவிடுமென்று செப்.5 அன்று உத்தரவிட்டிருந்த உச்சநீதி மன்றம், அதனை நாளொன்றுக்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதம் செப். 20 வரை தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என மாற்றி செப்.12 அன்று உத்தரவிட்டது. இந்த மாற்றத்தால் முந்தைய உத்தரவைக் காட்டிலும் 3 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. “அனுகூல சத்ரு” எனக் கூறுவார்களே, அது போல, தமிழகத்திற்கு நன்மை செய்வது போலத் தோன்றும் இந்த உத்தரவுகள் உண்மையில் கர்நாடகா அரசிற்குச் சாதகமானவையே.

சசிகலா புஷ்பா :நெறைய அதிமுக எம் எல் ஏக்களிடம் அதிருப்தி இருக்கிறது ! கியோஸ் தியரின்னா( Chaos Theory) என்னன்னு ஜெயா படிக்கபோகிறார்?

எந்த அஸ்திரத்தை எடுத்து #அதிமுக வை 1990ல் ஒன்று சேர்த்தாரோ
ஜெயலலிதா - அதே அஸ்திரத்தை அதே அவரின் 40 வயதில் அதே அவரின் MP பதவியில் அமர்ந்த கொண்டு .. it is medical miracle ..
உடையுமா? உடைக்கப்படுமா எங்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த வேலையும் எனக்கு தெரியாது. ஆனா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நிறைய அதிருப்திகள் இருக்கு. அப்படிப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் என்னிடம் பேசிக்கிட்டுத்தான் இருக்காங்க.. கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வரும்போது, அம்மாவுக்கு எதிரா தீர்ப்பு வந்துட்டா சின்னம்மா கும்பலிடம் கட்சி போய்டுமே, அப்படிப்போனா அவ்வளவுதான்னு ஆதங்கத்துல நிறைய பேர் இருக்காங்க. அதனால, பொறுத்திருந்து பாருங்க, வரலாறு பேசும். ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடைந்து சிதறும் #சசிகலாபுஷ்பா

வாசன் வந்தால் வெளியேறுவோம்-ஸ்டாலினிடம் திருநாவுக்கரசர்!


மின்னம்பலம்.காம் :  .
‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பு ஏற்றதிலிருந்து தலைவர்கள் ஒவ்வொருவராகச் சந்தித்து ஆசி பெற்று வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது பற்றியும் அப்போது அவர் சொன்ன புகார்கள் பற்றியும் நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தேன். இந்த சூழ்நிலையில் இன்று ரஜினிகாந்த்தை சந்தித்தார். திருநாவுக்கரசரும், ரஜினியும் நீண்டநாள் நண்பர்கள். அந்த அடிப்படையில்தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக திருநாவுக்கரசர் சொன்னார். இருவரும் நீண்டநேரம் பழைய விஷயங்களை எல்லாம் பேசியிருக்கிறார்கள்.
நேற்று இரவு 7.50க்கு ஸ்டாலின் வீட்டுக்கு திருநாவுக்கரசர் சென்றார்.

சென்னை மாணவர்களின் கைப்பைகளில் பயங்கர ஆயுந்தங்கள் .. தமிழ் சினிமா விதைத்த விஷம்

விகடன்.காம்  : சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால டிரெண்ட்டாக இருக்கிறது. சென்னையில் சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட் தல பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பதுண்டு. போலீஸாரும் மாணவர்கள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்தாலும் அது தொடர்கதையாகி வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் நிலையும் உள்ளது.

விசாரணை திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை..

ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து தமிழ்த்திரைப்படம் ‘விசாரனை’ பரிந்துரைக் கப்பட்டுள்ளது.  சிறந்த அயல்நாட்டு திரைப்பட பிரிவில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  தேர்வுக்குழுவிற்கு வந்த 29 படங்களில் விசாரணை படத்தை பரிந்துரை செய்துள்ளது இந்தியா.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ்ப்படம் ‘விசாரணை’.  சிறந்தபடம், துணைநடிகர், படத்தொகுதிப்பு என 3 பிரிவுகளில் விசாரணை தேசிய விருதுகளை அள்ளியது.>நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.  சந்திரகுமார் எழுதிய ‘லாக் - அப்’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. நக்கீரன்,இன்

சுப்பிரமணியம் சாமி : தமிழகம் காவேரி தண்ணி கேட்டு புலம்பக்கூடாது

அதிரடி ஸ்டேட்மெண்ட் மன்னன் சுப்பிரமணியன் சுவாமி காவிரி நதி நீர் பங்கீடு பற்றி கருத்துக் கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து வெளியிட்ட சுவாமி. ‘தமிழகம் காவிரி நீர் கேட்டு புலம்புவதை விட்டு விட்டு, கடல் நீரை சுத்திகரிப்பு செய்து அதனை குடிப்பதற்கும், விவசாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் சென்னை வந்தவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காவிரி பற்றி கருத்து உதிர்த்தபோது, ‘காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தற்காலிகமானதுதான். இது மறுபடியும் பிரச்னைகளையே உருவாக்கும். நதி நீர் இல்லாத சவூதி அரேபிய போன்ற நாடுகளில் கடல் நீரைப் பயன்படுத்தி அந்நாடு மக்களின் தண்ணீர் தேவையை 24 மணி நேரமும் பூர்த்தி செய்து வருகிறது. அதுபோல தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை சரி செய்யவும் தமிழக விவசாயிகளின் தேவைக்கும் கடல் நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். இது ஒன்றுதான் சிறந்த வழி என்று ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனால், அவர் தண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்களுடன் டீல் வைத்துள்ளார். எனவேதான், கலவரத்தைத் தூண்டிவிட்டு, அவர் அரசியல் செய்து டிராமா போடுகிறார்’ என்றும் கூறியுள்ளார். மின்னம்பலம்.com

சென்னை சின்னமலை மெட்ரோ ரெயில் சேவை.... விதைத்தது திமுக, காங்கிரஸ்- விளம்பரம் செய்வது அதிமுக பாஜக !


Chennai மெட்ரோ ரயிலை விமான நிலையம் -  சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங் களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக் கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.

கண்ணகி நகர் போலீஸ் அழைத்து சென்ற வாலிபர் மரணம்

ஆலந்தூர் துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் திடீரென இறந்தார். இதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த சினேகலதா (வயது 24) என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18-ந் தேதி இரவு சினேகலதா, மேட்டுக்குப்பம் சக்தி சீனிவாசன் தெருவில் நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் திடீரென சினேகலதாவை வழிமறித்து அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

நாம சொல்றதை யாரு கேட்கிறாங்க?’ - வேதனையில் வெடித்த கலைஞர் ..


மின்னம்பலம்.com  :மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் சைன் இன் ஆகியிருந்தது. ஸ்டேட்டஸ் லொக்கேஷன் ராயப்பேட்டை என்று காட்டியது.
“அண்மையில் கருணாநிதி – திருநாவுக்கரசர் சந்திப்பு நிகழ்ந்தது அல்லவா... அதைப்பற்றித்தான் சத்தியமூர்த்தி பவனில் பேச்சாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்குமுன்பு கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசர். அப்போது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பேச்சு வந்தபோது, கருணாநிதி பிடிகொடுக்காமலேயே பேசியிருக்கிறார். பேச்சு டிராக் மாறியிருக்கிறது. ‘அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் என் மகன் ராமச்சந்திரன் போட்டியிட்டான். ஆனால், ஜெயிக்க முடியலை. அதுக்குக் காரணம் திமுக -தான். புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் தங்கவேலு.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் மரணம் கொலைதான் !

tirupur student(N)  .thinaboomi.com :புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மர்மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ’அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை’ என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில், தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த மாணவர் சரவணன் எம்.டி., படிப்பில் சேர்ந்து படித்தார். இந்த நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி மர்மமான முறையில், தனது அறையில் இடந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

புதன், 21 செப்டம்பர், 2016

தமிழகம் மின்மிகை மாநிலம்தான் ... உறுதிப்படுத்திய ராம்குமார் ..

vikatan.com : உயிரோடு உலவும் மர்மக் கொலைக்காரர் யார்? சுவாதி கொலை... ராம்குமார் மர்ம மரணம்...கவர் ஸ்டோரி<>‘அம்மா சொன்ன மின் மிகை மாநிலத்தை ராம்குமார் டெஸ்ட் பண்ணி பார்த்து இருப்பார் போல!’
‘தோட்டா செலவு இல்லாமல் சிக்கனமாக என்கவுன்ட்டர் நிகழ்த்த முடியுமா?
என ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ் பிரமிப்பு!’
‘ஒய்.ஜி.மகேந்திரன் மேடைக்கு வரவும்!’
‘போலீஸ் சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும் என்று
எத்தனை உறுதியாக நம்புகிறது இந்த சமூகம்!’
‘இந்த வழக்கில் இதுவரை சுற்றப்பட்ட பூக்களிலேயே பெரிய பூ இந்த சாவுப்பூதான்!’

காவிரி பிரச்சினை: மோடி அரசே முதன்மை குற்றவாளி!

thetimestamil.com கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு
எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் பிரதமரோ, இந்தியாவின் உட்சப்பட்ச அதிகார அமைப்பான உச்சநீதி மன்றமோ இப்பிரச்சினையில் தலையிடவில்லை. கர்நாடக முதல்வர் எட்டு முறை கடிதம் எழுதியும் மோடியிடமிருந்து பதில் இல்லை. நேரில் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.
வன்முறைக்கு யார் காரணம்?
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தான் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் துவங்கின. தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறை தொழில்முறை கிரிமினல்களுக்கே உரிய முறையில் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. கன்னட இனவெறியின் பெயரால் இதை பின் நின்று தூண்டிவிட்டு இயக்கியது பா.ஜ.கவும் அதன் குரங்குப்படைகளான RSS இந்துமதவெறி கும்பலும் தான்.

நியூஸ் 7 நெறியாளர்கள் நெல்சன் சேவியர், செந்தில் தொலைபேசி எண்களை வைரலாக பரப்பும் ட்ரோல்கள்!

thetimestamil.com  :ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில்
சந்தேக மரணமடைந்தார். இதுகுறித்து விவாத நிகழ்ச்சியை  நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்கஸ், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சித்தண்ணன், ராம்குமார் வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த திலீபன் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திலீபன் மகேந்திரன், அவதூறாகப் பேசியதாகக் கூறி இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பத் தொடங்கினர். இதன் உச்சமாக பாஜக சார்புள்ள ஒரு நபர் நியூஸ் 7 தொகுப்பாளர்கள் நெல்சன் சேவியர், செந்தில் ஆகியோரின் எண்களைப் பகிர்ந்து, அதைப் பரப்புமாறு தனது முகநூலில் எழுதினார். இது அதிகமாகப் பகிரப்பட்டதுடன் வாட்ஸ் அப்பிலும் வைரலாகப் பரவியது. நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தொடர்ந்து அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் பலர் மிரட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.

என் கவுன்ட்டர் போல் மின் கவுன்ட்டர் செய்திருக்கலாம்!: சீமான்


மின்னம்பலம்.காம் : சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மரணமடைந்தார். அவர் மின் வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம்குமாரின் உடல்கூறாய்வுக்காக, சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.
ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. எனவே, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராம்குமாரின் உடலைப் பார்வையிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் ராம்குமாரின் உடலைப் பார்ப்பதற்கு காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ராம்குமார் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை. போலீசார் செய்யும் என்கவுன்ட்டர்களைப்போல் ராம்குமார் மின் கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது என்று சீமான் தெரிவித்தார்.

ஆறாயிரம் பேரோடு திமுக-வில் இணைந்த மதிமுக மணிமாறன்!


minnambalam.com மதிமுக-வின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த தென்சென்னை மாவட்டச் செயலாளர் மணிமாறன் நேற்று, தனது ஆதரவாளர்கள் ஆறாயிரம் பேருடன் திமுக-வில் இணைந்தார். மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.மதிமுக-வில் வைகோவுக்கு நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன். கட்சிக்காக தன் பணத்தை வாரியிறைக்க அஞ்சாதவர் என்று இவரைப்பற்றி குறிப்பிடுவார்கள். மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு, எடைக்கு எடை வெள்ளிக் கட்டிகளை அள்ளிக் கொடுத்தது, தங்கப் பேனா கொடுத்து அசத்தியது, தங்க வாள் கொடுத்து பிரமிக்க வைத்தது என்று விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி மதிமுக-வினரை வியக்கவைத்தவர் இந்த மணிமாறன்.

திமுக கூட்டணியில் கொ.ம.தே.க?


minnambalam.com கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி முதலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்தது. ஆனால், அதிமுக கூட்டணியில் சேர்க்கவில்லை. இதையடுத்து, திமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்தார் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். முதலில், அதிமுகவுடனான கூட்டணிக்கு முயற்சி செய்ததால், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்க்க விரும்பவில்லை திமுக பொருளாளர் ஸ்டாலின். இதையடுத்து, தனித்துப் போட்டியிட்டது கொங்குநாடு மக்கள் கட்சி.
சட்டமன்றத் தேர்தலில், கோவை, சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களை பொறுத்தவரை 90 சதவீதம் தொகுதிகளில் திமுக தோல்வியை தழுவியது.

சென்னை கோயம்புத்தூர் மாநகர மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது

சென்னை, தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
தற்போது இந்த அமைப்பு களின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் செலவுக்கான நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் பெண் களுக்கு 50 சதவீதம் இடஒதுக் கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது.

திமுகவின் முதுகில் குத்திய மூப்பனாரும் வாசனும் .. எந்நன்றி கொன்றார்க்கும்.....

கலைஞர் எப்போது திருந்துவார் ?
*******************************************************
1996 ல் கருப்பையா மூப்பனாருக்கு 40 தொகுதிகளை வாரிக்கொடுத்து...வெற்றி பெற வைத்து... சிதம்பரம் போன்ற சில்லறைகளை தலைவர்களாக உயர்த்திவிட்டார்..(இன்று அவரால் அவர் சொந்த ஊரில் கூட ஒரு வார்டில் கூட ஜெயிக்கமுடியாது )
அதற்கு பரிசாக மூப்பனார் என்ன செய்தார் தெரியுமா ?
மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்த துரோகி கலைஞர் என்று என்று பழி சுமத்தினார்....மேலும் 2001 ல் ஜெயாவோடு கூட்டணி வைத்து கலைஞரை தோற்கடித்து பழி வாங்கினார்..மூப்பனார்...

தந்தையை பின் பற்றி...கடந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க நால்வர் அணியோடு இணைந்தார் ஜி கே வாசன்... டெபாசிட் இழந்த நிலையில் தங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக மீண்டும் கலைஞரை தேடி வருகிறார் ....
ஜெயாவை நேரடியாக ஆதரித்து ஜெயா வெற்றிக்கு வழி வகுத்த வாசனுக்கு அறிவாலயத்தில் என்ன வேலை ?
வாசன் போயஸ் தோட்டத்துக்கு போகட்டுமே...
தலைவர் தவறுக்கு மேல் தவறு செயகிறார்..
திமுக விற்கு யார் தயவும் தேவை இல்லை...மக்கள் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள் நமக்கு மக்களோடு மட்டும் கூட்டணி போதும்.
காங்கிரஸ் உட்பட யாரோடும் கூட்டணி வேண்டாம்..
செத்த பிணங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டாமென்று தலைவரை பணிந்து வேண்டுகிறேன்.  முகநூல் பதிவு   தாமோதரன்  சென்னை

கல்வி வரியை இந்திக்காரர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கவும்..!

theekkathir.in :மத்திய உள்துறை இணை அமைச்சர் ரிஜ்ஜூ “இந்து” ஏட்டுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் மோடி அரசு இந்தியை திணிக்காது என்று சொல்லிக்கொண்டு, ஆனால் “அதை முடிந்த அளவு வளர்ப்போம்” என்று சொல்லியிருக்கிறார். தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளைப் பொறுத்தவரை “அவற்றை வளர்க்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு” என்றும் திருவாய் மலர்ந்தருளியிருககிறார்! பிறகு எதற்கு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் வருமான வரியோடு கல்வி வரியை வசூலிக்கிறது மத்திய அரசு? இந்திக்காரர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கவும்..!

பட்டாக்கத்தி கொள்ளையருடன் போராடி இளம்பெண்ணை காப்பாற்றிய சேகர்

சேகர் மற்றும் மனைவி கலாவதி
tamilthehindu.com சேகர் மற்றும் மனைவி கலாவதி
டெல்லியில் நேற்று ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இளம் பெண் ஒருவர் சுமார் 30 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையானபோது யாரும் உதவிக்கு வராதது போலவே டெல்லி சம்பவத்திலும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துவிட்டு சாதாரணமாக கலைந்து செல்கின்றனர்.
ஆனால், நேற்று முன் தினம் சென்னையில் இளம் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேரை தன்னந்தனி ஆளாக போராடி காப்பாற்றியுள்ளார் சேகர்(42).
சென்னை துரைப்பாக்கம் அருகில் குமரன்குடில் பகுதியில் மளிகைக் கடை வைத்திருப்பவர் சேகர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தனது கடையில் அமர்ந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் இளம் பெண்ணின் அபயக்குரல் கேட்டது. அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தபோது சற்று தொலையில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றுகொண்டிருந்தனர்.

உள்துறை நாடாளுமன்ற குழுத் தலைவராக ப.சிதம்பரம் நியமனம்!


மின்னம்பலம்.com : மத்திய அரசின் அமைச்சக செயல்பாடுகளை கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும், நாடாளுமன்றத்தில் பல்வேறு நிலைக்குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களுக்கான தலைவர்கள் நாடாளுமன்றத் தலைவரால் நியமிக்கப்படுவர். சில குழுக்களில் இடம்பெறுபவர்கள், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளது பலத்தினடிப்படையிலான விகிதாச்சாரப்படியும், இன்னும் சில குழுக்களில் இடம்பெறுபவர் அவையின் வாக்கெடுப்பின் அடிப்படையிலும் நியமிக்கப்படுவர்.
பொருளாதார நிலைக்குழு, துறைசார் நிலைக்குழு, இதர நிலைக்குழுக்கள் என மூன்றுவகையில் உள்ளது. இவற்றில் மதிப்பீட்டுக் குழு, பொதுப்பணி பொறுப்பேற்புக் குழு (Public Undertaking Committee), பொது கணக்குக் குழு ஆகியவை பொருளாதார குழுக்களாகவும், துறைசார் நிலைக்குழு என்பது 24 அமைச்சரகங்களுக்கும் துறைகள் வாரியான நிலைக்குழுக்கள் இருக்கும். அதேபோல், இதர நிலைக்குழுக்கள் உள்ளன.

சித்தராமையா :நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாது!: Anti Court ஹீரோவாக தேர்தலை சந்திக்க திட்டம்


தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் 4 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

திருப்பனந்தாள் காசிமட இணை சுந்தரமூர்த்தி தம்பிரான் சாவில் சந்தேகம்? பிரதே பரிசோதனைக்கு கோரிக்கை

திருப்பனந்தாள் காசி மடத்தின் இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சாவில் சந்தேகம் உள்ளதால் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் மடம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபராக முத்துக்குமாரசுவாமி தம்பிரான் உள்ளார். இணை அதிபரான சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் (வயது 64) நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே மடத்துக்கு வந்த டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் உடலுக்கு திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் முன்னிலையில் தருமபுரம் ஆதீனம் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சுவாமிநாததம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.

BBC :டெல்லில் சாலையில் பெண் குருரமாக வெட்டி கொலை


 டெல்லியின் பரப்பான சாலை ஒன்றில், 20 முறைக்கும் அதிகமாக கத்தியால் குத்தப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
டெல்லியின் வடக்கு பகுதியான புராரியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆண், கருனா என்னும் 22 வயதுடைய பள்ளி ஆசிரியையின் அருகில் வருவதும் கத்தியால் பல முறை அவரை தாக்குவதும் சிசிடிவி விடியோ காட்சியாக பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சியின்படி, முதலில் மக்கள் நடந்து செல்கையில், தொடர்ச்சியாக அவரை கத்தியால் குத்துவதும் பின்னர் அப்பெண்ணின் நெற்றியில் கல்லால் அடித்து பின்பு எட்டி உதைப்பதும் பதிவாகியுள்ளது.
தப்பிக்க முயன்ற அவரை அங்கிருந்த பொது மக்கள் போலிசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
அப்பெண் காலை 9 மணியளவில் தனது உறவினருடன் நடந்து செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.

திமுகவில் உச்சகட்ட மோதல் என்று வதந்தி அல்லது உண்மை?

சென்னை: திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திமுக நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்... திமுகவின் முகமாக அரை நூற்றாண்டுகாலமாக கருணாநிதிதான் இருந்து வருகிறார். இப்போது திமுக என்றால் 'தளபதி' ஸ்டாலின் என்ற நிலை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. கலைஞர்  குடும்பத்தில் ஸ்டாலினுக்கு இணையாக மு.க. அழகிரியும் தன்னை முன்னிறுத்திப் பார்த்தார். ஆனால் இந்த யுத்தத்தில் அழகிரி தோற்றுப் போனார். 
கனிமொழிக்கு ரெட்கார்ட் அழகிரியைப் போலவே கனிமொழியும் தம் பங்குக்கு தலைதூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரையும் ஓரம்கட்டி ஒதுக்குவதில் ஸ்டாலின் தரப்பு படுதீவிரமாக இருந்து வருகிறது. இதுதான் ஸ்டாலின் மீதான கருணாநிதியின் கோபத்துக்கு அடிப்படை காரணம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். 

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நிறுத்திவைப்பு! நீதிபதிகள் விலை போய்விட்டனர்?

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.எம்,சி.யைச் சேர்ந்த செல்வக்குமார், ராயப்பேட்டையில் உள்ள பிரேத பரிசோதைனை நிபுணர்களான மணிகண்டன், வினோத் ஆகியோருடன் இணைந்து ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். வீடியோ பதிவுடன் இந்த பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராம்குமார் தந்தை பரமசிவம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி நீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று முக்கிய ஆணையினைப் பிறப்பித்துள்ளது. 1. தமிழ்நாட்டுக்கு நாளை முதல் 27 ஆம் தேதிவரை நாள்தோறும் 6000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும், 2. நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்யவேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
உண்மையிலேயே இது வரவேற்கப்படவேண்டிய ஆணையாகும். சட்டப்படி காலந்தாழ்த்தாமல் கருநாடக மாநிலம் செயல்படுத்தியே தீரவேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - அது தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு 5.2.2007 அன்றுதான் வழங்கப்பட்டது. நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும் - ஆறு ஆண்டுகள் கழித்தே அந்தத் தீர்ப்பு மத்திய அரசு கெசட்டில் வெளியிடப்பட்டது (19.2.2013).

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

பிரான்ஸ் தமிழச்சி : சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல ‘கொலைகள்’ தொடரும்

index  தமிழச்சி எந்நேரமும் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப் படலாம்!! index11
சென்னை: சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல ‘கொலைகள்’ தொடரும் என்று பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு பீதியை கிளப்பியுள்ளார். சுவாதி கொலை வழக்கில் தொடர்ந்து பல்வேறு தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வருகிறார் தமிழச்சி. சுவாதி கொலை வழக்கில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்றும் தமிழச்சி தம்முடைய பதிவுகளில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் மர்ம மரணம் குறித்து தமிழச்சி எழுதியுள்ளதாவது: சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன.
அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சி காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது.
முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவரை குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை? என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை.
இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.

பிரதமர் மோடி : பயங்கரவாத பாகிஸ்தானை தனிமைப்படுத்துங்கள்


புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடுங்கோபமடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் உட்பட, சர்வதேச அரங்கில், அதன் முகத்திரையை கிழிக்கும் விதமாக, ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார். முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது, பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்தினர்; இதில், 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; 19 பேர் காயமடைந்தனர். எதிர் தாக்குதலில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மோடி ஆலோசனை< இந்நிலையில், டில்லியில் சிகிச்சை பெற்று வந்த, ஒரு ராணுவ வீரர் நேற்று உயிரிழந்தார். அதையடுத்து, இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.