புதன், 21 செப்டம்பர், 2016

நியூஸ் 7 நெறியாளர்கள் நெல்சன் சேவியர், செந்தில் தொலைபேசி எண்களை வைரலாக பரப்பும் ட்ரோல்கள்!

thetimestamil.com  :ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில்
சந்தேக மரணமடைந்தார். இதுகுறித்து விவாத நிகழ்ச்சியை  நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்கஸ், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சித்தண்ணன், ராம்குமார் வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த திலீபன் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திலீபன் மகேந்திரன், அவதூறாகப் பேசியதாகக் கூறி இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பத் தொடங்கினர். இதன் உச்சமாக பாஜக சார்புள்ள ஒரு நபர் நியூஸ் 7 தொகுப்பாளர்கள் நெல்சன் சேவியர், செந்தில் ஆகியோரின் எண்களைப் பகிர்ந்து, அதைப் பரப்புமாறு தனது முகநூலில் எழுதினார். இது அதிகமாகப் பகிரப்பட்டதுடன் வாட்ஸ் அப்பிலும் வைரலாகப் பரவியது. நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தொடர்ந்து அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் பலர் மிரட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.

surya-kanஇந்நிலையில் நியூஸ் 7 தொகுப்பாளர்களுக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.
எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் எழுதிய பதிவு:
நியூஸ் 7 தொலைகாட்சியில் இரண்டு தினங்க்ளுக்கு முன்பு திலீபன் மகேந்திரன் பயன் படுத்திய சில வார்த்தைகள் ஒரு பொது அரங்கில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள் அல்ல. அவை கண்டிக்கப்பட வேண்டியவையே. எந்த ஒரு சாதி சார்ந்தும் ’’ பாப்பாத்தி’’ போன்ற தூஷணையான் சொற்களைப் பயன்படுத்தி சாதியத்தை விமர்சிப்பது அந்த சாதியில் இருக்கக் கூடிய நேர்மையாக சிந்திக்ககூடியவர்களையும் அன்னியபடுத்திவிடும். ஆனால் இது எல்லா சேனல்களிலும் அவ்வபோது நடந்துகொண்டுதானிருக்கிறது. இந்த்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ அல்லது சாதிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ பிறர்மீது மிக இழிவான தாக்குதல்களை நேரலையில் செய்திருக்கின்றனர். நானே பலமுறை மதரீதியான் தாக்குதலுக்கு ஆளாக்கிகியிருக்கிறேன். இதைப்பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.
ஆனால் இதற்காக அந்த நெகிழ்ச்சியை நடத்திய நெறியாளர் நெல்சன் சேவியர் மீது நடத்தப்பட்ட்டு வரும் தாக்குதல்கள்கள் மிககேவலமானவை. உள்நோக்கம் கொண்டவை. நெல்சன் அன்று அந்த நிகழ்ச்சியை பாரபடசமற்ற வகையில் நடத்தினார் என்பதை நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அறிவார்கள். குறிப்பாக ராம்குமாரின் வழக்கறிஞரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார். சீமான் போன்ற ஒரு இயக்கத்தின் தலைவரே அருணனை நோக்கி என்ன பேசினார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் ஒருவர் வரம்புமீறி பொது ஊடகங்களுக்கு ஒவவாத வார்த்தைகளை பயன்படுத்த்தும் போது ஒரு நெறியாளர் செய்யக் கூடியது எதுவும் இல்லை. நெல்சன் மட்டுமல்ல, செந்தில், குணசேகரன், பாண்டே , ஹரிஹரன் , ஜென்ராம் என பலரும் இந்த சங்கடங்களை அனுபவித்திருக்க்கின்றனர். இந்துத்துவா- சாதிய சக்திகள் இதுவரை ஏகபோகமாக பயன்படுத்து வந்த இந்த மோசமான் ஆயுதத்தை இப்போது மற்றவர்களும் உபயோகிக்க ஆரம்பித்திருகின்றனர். இது அனாவசியமான சமூக கசப்புகளை உருவாக்கக் கூடிய ஒன்று.
வரம்பு மீறி பொது வெளிக்கு ஒவ்வாத வகையில் பேசக்கூடியவர்களையும் எவ்வித கட்டுபாடும் இன்றி மனம்போன போக்கில் பொறுப்பின்றி பேசக்கூடிய சிறு குழுக்களின் பிரதிநிதிகள் அல்லது தனி நபர்களை விவாதங்களுக்கு அழைக்கும் ஊடகங்கள் இனி சற்றே தயங்கவேண்டும். கலயாணராமன் போன்றவர்களை வளர்த்துவிட்ட ஊடகங்கள் இப்போது திலீபன் மகேந்திரன் போன்றவர்கள் பேசுவதைக் கண்டு அதிர்வதில் அர்த்தமில்லை.
இன்று நெல்சன் சேவியரை தாக்குகிறவர்கள் ஊடகங்களில் செயல்படும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை தொடுத்துவரும் பிற்போக்கு சக்திகள்தான் என்பதே உண்மை.
வழக்கறிஞர் உமர்கய்யாம்:
நியூஸ்7 தொலைக்காட்சியில் நேற்றைய முன் தினம் ராம்குமார் படுகொலை தொடர்பாக நடந்த நேரலையில் வழக்கறிஞர் தோழர் ராம்ராஜ் அவர்களும் தோழர் தீலிபன் மகேந்திரன் முன்னால் காவல்துறை அதிகாரி ஆகியோர் விவாதித்தார்கள். அந்த விவாதத்தில் ராம்குமார் படுகொலையில் இருக்கும் பின்னணி குறித்தும் அதில் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்களின் தொடர்பு குறித்தும் பேசப்பட்டது.
அந்த விவாதத்திற்கு பின் அந்த தொலைக்காட்சியின் நிலையத்திற்கு நேரிலும், தொலைபே
சியிலும் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்சியின் தொகுப்பாளர் நெல்சன் அவர்களின் தொலைபேசி மற்றும்செந்தில் தொலைபேசி எண்களை சமுகவளைதளங்களில் பரப்பி அவர்களை அவர்களை மிக இழிவாக பேசியும்,கடுமையாக மிரட்டவும் செய்திருக்கிறார்கள். எதிர்கருத்தை கருத்தால் வெல்ல இயலாத இந்த கோழைகள்… ஊடக பயங்கரவாதம் என்று கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் காட்டும் பெரும் அக்கரை சரியான ஊடக நெறியை வெளிப்படுத்தும் போதும் அதற்கு ஆதரவாக நிற்கவேண்டிய கடமையும்,பொருப்பும் நமக்கு இருக்கிறது.

அவர்களுக்கு நேரடியாக நியூஸ் 7 தொலைக்காட்சி நிலையத்திற்கு போய் மிரட்டும் தைரியம் இருக்கும் போது சரியானதிற்காக நேரில் ஆதரவு தருவது நமது கடமையாகும்.
சரியானவைகளை தொடர்ந்து அந்த தொலைக்காட்சி எடுத்து செல்ல அது உதவும் கூட..
சன் நியூஸ் தொலைக்காட்சியில் இருந்த ஒரு சிறந்த நெறியாளர் மேற்படி சக்திகளின் நெருக்கடியால் அந்த நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டார் ஒரு சில நாட்கள் உச் கொட்டிவிட்டு நாம் அடுத்தவேலைகளை பார்க்க நகர்ந்துவிட்டோம். தமிழ் ஊடகங்களில் சிறப்பான, நல்ல கருத்தியல் கொண்ட மதச்சார்பற்ற ஊடகவியலாளர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும்தான் ஊடக நெறிகளை தொடர்ந்து மக்களுக்கானதாக மாற்ற இயலும்…
இத்தகைய ஊடக தோழர்கள் பலர் இருக்க சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவிற்கு ஊடகம் குறித்து பேச ரங்கராஜ் பாண்டேவை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் முன் நின்று நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகத்தின் குறியீடாக ரங்கராஜ் பாண்டேதான் இவர்களின் கண்களுக்கு தெரிகிறது என்ற வருத்தத்துடன் இதை நாமும் கடந்து செல்கிறோம்.
சிவசங்கரன் சரவணன்
 தமிழ்நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளாக திமுக அதிமுக ஆட்சி தான் நடக்கிறது. இப்போதும் 80 சதவீத வாக்குகளை இந்த இரண்டு கட்சிகளுமே வைத்துள்ளன. இரண்டு கட்சித் தலைமைகளை பற்றி எத்தனையோ முறை டிவி உள்ளிட்ட ஊடகங்களில் விமர்சனம் செய்துள்ளார்கள். சிலமுறை எல்லை மீறி கூட விமர்சனம் செய்ததுண்டு. ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் யாரும் டிவி சேனல்கள் மீது தாக்குதல் நடத்தியதோ, சேனல் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததோ இல்லை .
ஆனால் புதிய தலைமுறை டிவி சேனல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இப்போது நியூஸ் 7 மீதும் அதன் ஊழியர்கள் மீது பாஜக வும் அதன் தோழமை இந்துத்வ சக்திகளும் மிரட்டல் விடுக்கின்றனர். பேஸ்புக் வாட்சப் என எல்லா வடிவங்களிலும் அந்த செய்தியை பகிர்கிறார்கள் . ஆட்சேபனையை வழக்கு தொடர்வது போன்ற சட்ட வடிவ நடவடிக்கைகள் மூலம் காட்டுவது என்பது வேறு, ஆனால் இதுபோல பகிரங்க மிரட்டல் விடுப்பது என்பது அறவே கண்டிக்கத்தக்கது!
தமிழ்நாட்டில் தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க திராணி இல்லாத இந்த நிலையிலேயே இவர்கள் இந்தளவுக்கு அராஜகம் செய்கிறார்கள் என்றால் இன்னும் திமுக அதிமுக போல மக்கள் செல்வாக்கு இருந்தால் இந்த மாநிலத்தை சுடுகாடாக மாற்றி விடுவார்கள் போல! தொடர்ந்து 50 ஆண்டுகளாக பவர் சென்டரிலேயே இருந்தும் இதுபோன்ற அராஜக செயல்களுக்கு தங்களுடைய தொண்டர்களை தூண்டாத திராவிட கட்சிகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், பார்ப்பனிய சக்திகள் வைத்தது தான் சட்டம் என்று நம்மை அடக்கி ஒடுக்கியிருப்பார்கள்…!
அருண் பகத்
ராம்குமார் மர்ம மரணம் தொடர்பாக நியூஸ் 7 இல் நடந்த விவாதத்தையடுத்து , நெறியாளர்கள் நெல்சன் சேவியர், செந்தில் இருவரது எண்களையும் முகநூலில் பரப்பி அவர்களுக்கு மிரட்டல் விடுப்பது, இழிவாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது காவி முண்டங்கள்.
நியாயத்தின் குரலை ஊடகத்தில் ஒலிக்கச் செய்த நெறியாளர்களுக்கு ஆதரவாக இத்தருணத்தில் அவர்களோடு நாம் இருப்போம்..
#We_stand_With_you_Nelson_and_Senthil.
பிரதாபன் ஜெயராமன்:
அடேய் சங்கீஸ்.. உலகிலேயே பெரிய தேச விரோதி, மனித குல விரோதி நீங்கதான். நீங்க திலீபன் மகேந்திரனை தேசவிரோதி என சொல்கிறீர்களா?
திலீபன் மகேந்திரனின் அரசியல் முறையை நானும் ஏற்கவில்லை. அதற்காக அவரை பேட்டி எடுத்ததற்காக , செய்தியாளர்கள் நெல்சன் சேவியர், செந்திலை தரக்குறைவாக பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று, ஆபாச வசவுகளை வீசுவது கேவலமான செயல். அதை சங்கீஸ்களால் மட்டுமே செய்ய முடியும். அறிவுள்ள மனிதர்களால் செய்ய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக