சனி, 24 செப்டம்பர், 2016

முதல்வரின் குருதி மும்பைக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் அந்த வசதி இல்லையாம்!

தமிழ்நாட்டில் குருதி பரிசோதனை செய்ய வசதி இல்லை என்பது ஒரு வில்லங்கமான செய்தி போல தெரிகிறது. சாதாரண பரிசோதனை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  
மின்னம்பலம்.காம் : அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதும், சர்க்கரை உள்ளிட்ட சில அடிப்படை டெஸ்ட்களை உடனடியாக செய்துவிட்டார்கள். அதன் அடிப்படையில்தான் அவருக்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் மருத்துவர்கள். ஆனால் முதல்வருக்கு நுரையீரல் சம்பந்தமான பிரச்னை இருப்பதால், அவரது ரத்தத்தில் மேலும் சில பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த டெஸ்ட்கள் சென்னையில் செய்யும் வசதி இல்லை என்பதால் மும்பையில் உள்ள லேப்க்கு ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை எடுத்து விமானத்தில் அனுப்பியிருக்கிறார்கள்.
அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான் ஜெயலலிதாவின் ரத்தத்துடன் மும்பைக்குப் பறந்திருக்கிறார். டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் அதை உடனே அங்கிருந்து மெயில் அனுப்பி வைக்க சொல்லப்பட்டிருக்கிறது. அந்த டெஸ்ட் ரிசல்ட்க்குப்பிறகு முதல்வருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையில் சில மாறுதல்களை செய்வார்கள் அப்பல்லோ மருத்துவர்கள் என்று சொல்கிறார்கள்! **மின்னம்பலம்** _மின்னம்பலம்_ [மின்னம்பலம்](www.minnambalam.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக