வெள்ளி, 23 செப்டம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அனுமதி!

Tamil Nadu Chief Minister J Jayalalithaa was admitted to Apollo hospitals in Chennai on Thursday evening.
suffers from diabetes, hypertension and cellulitis. விகடன்.com  :தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வியாழக்கிழமை இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்த தகவலைத்தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.



முதல்வர் ஜெயலலிதா, பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனை வந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய மருத்துவர்கள், “ஜெயலலிதா காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இப்போது நலமாக இருக்கிறார்,” என்றனர்.

தகவல் பரவியதையடுத்து அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத்துவங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஆர்.பி., ஜோ.ஸ்டாலின், ந.பா.சேதுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக