வியாழன், 22 செப்டம்பர், 2016

சென்னை சின்னமலை மெட்ரோ ரெயில் சேவை.... விதைத்தது திமுக, காங்கிரஸ்- விளம்பரம் செய்வது அதிமுக பாஜக !


Chennai மெட்ரோ ரயிலை விமான நிலையம் -  சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங் களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக் கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் மற்றும் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந் தபடி ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து விமானநிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் 6 ரயில் நிலையங்கள் உள்ளன.
விமான நிலையம், மீனம் பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கி மலை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், ''2-ம் கட்ட மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. 45 கி.மீல் இதுவரை 19 கி.மீக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும்'' என்றார்.
விமான நிலையம் - சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையம் - கோயம்பேடுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக