வெள்ளி, 23 செப்டம்பர், 2016

6000 கன அடிக்காக அவசரப்பட்டுவிட்ட கர்நாடகா.. காத்திருக்கிறது மிகப்பெரிய கண்டம்


Veera Kumar பட்டுத்துணிக்கு ஆசைப்பட்டபோது, கட்டியிருந்த கோவணமும் பறிபோனது.. என்ற சொலவடை யாருக்கு பொருந்துமோ, இல்லையோ, கர்நாடகாவுக்கு தற்போது சரியாக பொருந்தும். ஆம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டிய கர்நாடகாவோ, “23ம் தேதி இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவோம், அதுவரை தண்ணீர் திறக்க மாட்டோம்” என தடாலடியாக அறிவித்துள்ளது. அவைகளின் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, சட்டசபைvsஉச்சநீதிமன்றம் என்ற ஒரு போட்டியை உருவாக்கி, அரசியலமைப்பு சிக்கலை உருவாக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி நேற்று எல்லோருக்கும் முன்பாக, எக்ஸ்குளூசிவாக, ரிப்போர்ட் செய்திருந்தது ‘ஒன்இந்தியா தமிழ்’ அரசியலமைப்பு சிக்கல் இப்படி சிக்கலை உருவாக்க வேண்டும் என்று அரசை தூண்டியது கர்நாடகாவிலுள்ள சில முன்னணி பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், அதை சுப்ரீம்கோர்ட் பொருட்படுத்தாமல் தமிழகத்திற்கு தண்ணீர் விடச் சொல்லிவிட்டது. எனவே நாமும் சட்டசபை அதிகாரத்தை காண்பித்து இதை மீற வேண்டும் என்று தூண்டிவிட்டது அவர்கள்தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது. க
ர்நாடகாவுக்கு பின்னடைவு ஆனால், இப்படி செய்து, உச்சநீதிமன்றத்தின் கோபத்திற்கு ஆளாகப்போகிறது கர்நாடகா. கோபத்திற்கு ஆளாகுவோம் என்று தெரிந்தேதான் தோள் தட்டி நிற்கிறது அம்மாநிலம். இது கர்நாடகாவின் வருங்கால நலனுக்கு ஆபத்து என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
பெரிய அளவு இல்லை உச்சநீதிமன்றம் முதலில் 15 ஆயிரம் கன அடி, பிறகு 12 ஆயிரம் கன அடி என தமிழகத்திற்கு நீர் திறப்பை உறுதி செய்ய கூறிவந்த நிலையில், இப்போது, 6 ஆயிரம் கன அடிதான் திறக்க சொல்லியிருந்தது. இது ஒன்றும் மிகப்பெரிய அளவு தண்ணீர் கிடையாது.
மேற்பார்வை குழு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க கூறியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் சற்றே அதிகமாக, 6 ஆயிரம் கன அடி என கூறியிருந்தது. ஆனால் இதுவரை ஒழுங்காக தண்ணீர் திறந்து வந்த கர்நாடகா, கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை எதிர்த்து நிற்பதுதான் நகைச்சுவை என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
மேலாண்மை வாரியம் முக்கியம் கர்நாடகா இப்போது கவனம் வைத்திருக்க வேணடியது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் மீதுதானே, தவிர, வெறும் ஆறாயிரம் கன அடி தண்ணீர் மீது கிடையாது என கூறும் நடுநிலையாளர்கள், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால் கர்நாடகாவிலுள்ள 4 அணைகளுமே, மேலாண்மை வாரிய கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.
அதன்பிறகு, நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமே என சுட்டிக்காட்டுகிறார்கள். எதிர்த்து நிற்கிறது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திலுள்ள கர்நாடகா, 6 ஆயிரம் கன அடி தண்ணீருக்காக இப்போது, உச்சநீதிமன்றத்தையே எதிர்த்து நிற்கிறது. இ
னிமேல், மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது என உச்சநீதிமன்றத்தின் முன்பு கர்நாடகா சென்று நின்றாலும், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள் என்ற அவப்பெயரோடுதான் செல்ல வேண்டும் என்பதால், நீதிமன்றம் கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலிக்குமா என்பது கேள்விக்குறியே என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
பல சிக்கல்கள் அதுமட்டுமல்ல, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்துள்ள மனுவும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. மகதாயி உள்ளிட்ட மேலும் பல நதிநீர் பிரச்சினைகளுக்காகவும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா வழக்காடி வருகிறது.
இந்த பிரச்சினைகளின்போது கர்நாடகாவை உச்சநீதிமன்றம் எப்படி கையாளும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
இப்போது செய்தியின் முதல் வரியை திரும்ப படித்துப்பாருங்கள்.. கர்நாடகாவின் நிலைப்பாடு புரியும்.
at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக