டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியே வெற்றிவாகை சூடும் என்று தேர்தலுக்குப் பின் வெளியாகியுள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே - சிசரோ நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 39 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2013 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை விட 11 இடங்கள் அதிகமாகும். பாஜக 26 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 3 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் சுயேச்சைகள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நியூஸ் நேசன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி
கட்சிக்கு 39-43 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.