செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சம்பலுடன் சோறு சாப்பிட்டுவிட்டு பாடசாலைக்கு சென்றவன் நான் - ஜனாதிபதி மைத்திரி

நாம் கொடுத்த வாக்குறுதிகளை மாற்றிக்கொள்ள மாட்டோம், உரிய காலத்தில் நிலை நாட்டுவோம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றியமைக்கப்படும், நான் 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் மூன்று வேளையும் சோற்றை தவிர வேறு எதையும் உண்பது அரிது, நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சம்பலுடன் சோறு சாப்பிட்டுவிட்டு  பாடசாலைக்கு சென்றவன் என்ற வகையில் நாட்டு மக்களின் கஸ்டங்கள் தெரிந்தவன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக நேற்று அரச தொலைக்காட்சி சேவைக்கு அளித்த ஒன்றுக்கு நேரடி பேட்டியில் கூறினார்.நான் எனக்கு அளிக்கப்பட்ட அரச மாளிகையில் நான் குடியேறப்போவதில்லை, உலகத்தில் எந்தநாட்டிலும் இல்லாத அதிகாரம் இலங்கை அரச தலைவருக்கு உண்டு அதை அனைத்து தரப்பும் இணைந்து நாடாளுமன்றில் இந்த தனிமனித அதிகாரத்தை இல்லாதொழிக்க முன் வர வேண்டும் .அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் இங்கு கட்சிகள் என்ற சுயநலத்தை கைவிட்டு மக்களுக்கு என்று ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். thenee.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக