வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

நடிகை ஷகிலா: திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் இல்லை

ஷகிலா தான் இயக்கி வரும் கன்னடப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தகவலை ஷகிலா முற்றிலும் மறுத்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள ஷகிலா, “இதில் எந்த உண்மையும் இல்லை. என்னை பற்றி திருமண வதந்திகள் வருவது ஒன்றும் புதிதில்லை. எனக்கும் நான் திருமணம் செய்துகொண்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. அந்த பையன் என் படத்தில் ஹீரோவாக நடிக்கிறான். அவனுக்கு 28 வயதாகிறது. எனக்கு 38 வயதாகிறது அவன் என் தம்பி மாதிரி. திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் எனக்கு இல்லை. சில தோழிகள் உனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் அதற்காகவாவது திருமணம் செய்து கொள் என்கிறார்கள். பூமிக்கு பாரமாக இன்னொரு உயிரை விட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை. இதனால் அனாதை குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு திருப்திகரமாக உள்ளது” என்று கூறுயுள்ளார் ஷகிலா  tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக