வியாழன், 5 பிப்ரவரி, 2015

எலி ! வடிவேலு அறிவிப்பு புதிய படம் ! ஆஹா எலிக்கு அடுக்குமொழி ?

 ’எலி’ யாக வரும் வடிவேலு
சென்னை,பிப்.05 (டி.என்.எஸ்) தமிழ் சினிமாவில் காமெடி ராஜாவாக இருந்த வைகை புயல் வடிவேலு, அரசியல் ஆசை காரணமாக கடந்த இரண்டு வரடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்து கடந்த ஆண்டில் ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது காமெடி கலவரத்தை தமிழ் சினிமாவில் தொடங்கினார். இப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை போதிய அளவு பூர்த்தி செய்யவில்லை என்றாலும், இனி வடிவேலுவை டிவி-யின் மட்டும் இன்றி, வெளித்திரையிலும் பார்க்கலாம், என்பதே ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. இதற்கிடையில், தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை இன்று வடிவேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்திலும் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
; ‘எலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு பவுல் லிவிங்ஸ்டோன் ஒளிப்பதிவு செய்ய, அரூர் தாஸ் வசனம் எழுதுகிறார். தோட்டா தரணி கலைதுரையை கவனிக்கிறார்.

சிட்டி சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.சதிஷ்குமார், எஸ்.அமர்நாத் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.  tamil.chennaionline.com/c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக