புதன், 4 பிப்ரவரி, 2015

ஆம் ஆத்மியை மீது சேறு வாரி வீசும் மோடி! தோல்வி பயத்தில் புலம்பலோ புலம்பல்!

ஒவ்வொரு நாடாக சுற்றி கொண்டு இருந்த மோடியை தலைநகரை சுற்றி கொண்டிருக்க செய்த பெருமை கேஜ்ரிவாலையே சாரும்....அடுத்த வெளி நாடு பயணம். எப்போ..மோடி சார்? 
புதுடில்லி: டில்லி சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, பிரதமர் மோடி, நேற்று பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கடுமையாக சாடினார்.15 ஆண்டுகளாக..பெயர் குறிப்பிடாமல், பிரதமர் மோடி பேசியதாவது:அந்த தாயும், மகனும் சொல்வதை யாரும் கேட்பதில்லை. (சோனியாவும், ராகுலும்) பெரிய, பழமையான காங்,, இந்த நகரத்தை, 15 ஆண்டுகளாக சீரழித்து விட்டது. தற்காலிக கட்சி (ஆம் ஆத்மி) புதிதாக இருக்கிறது; சிறிய கட்சியான அது, ஓராண்டில் டில்லியை கெடுத்து விட்டது. கறுப்புப் பணத்தை பற்றி பேசும் கட்சி ஒன்று (ஆம் ஆத்மி), நள்ளிரவில், நான்கு மோசடி நிறுவனங்களிடம் இருந்து, தலா, 50 லட்சம் வீதம், இரண்டுகோடியை திரட்டி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றப் பார்க்கிறது.சுவிஸ் வங்கிக் கணக்குகளைப் பற்றி, விலாவரியாக பேசும் அந்தக் கட்சி, தனக்கு நிதியளித்த நான்கு பேர் யார் என, தெரியாமல் இருக்கிறதாம். இத்தகைய நேர்மையற்றவர்களிடம், இந்த மாநிலத்தை ஒப்படைக்கலாமா... தற்காலிக கட்சி தலைவர், மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
அதன்பின், விமானத்தில், முதல் வகுப்பில் பயணிக்கிறார். இத்தகையவர்களிடம் நாட்டைஒப்படைக்கலாமா?

மின் பற்றாக்குறை:


முன்னாள் பிரதமர் ராஜிவும் இப்படித் தான்,'நான் நேர்மையானவர்' என கூறி வந்தார்; அவருக்கு தேர்தலில் தண்டனை கிடைத்தது. நேர்மையானவர்கள் என, தங்களை காட்டிக் கொண்டவர்கள் எல்லாம், நேர்மையற்றவர்களாக இப்போது உறுதிபடுத்தப்பட்டு உள்ளனர். மின் பற்றாக்குறையால் பாதிப்புக்கு உள்ளாகி வரும் டில்லி, 'ஜெனரேட்டர் தலைநகராக' உள்ளது; அதை, 'மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தலைநகராக' மாற்றுவோம்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.  dinamalar.com

நீங்க கூட டீ கடையில வேலை பார்த்தேன்னு சொன்னீங்க , ஆனா இப்போ பெரும் முதலாளிங்களுக்கு மட்டுமே உங்கள் சிந்தனை/செயல் இருக்கு. இது வரையில் லஞ்சம் ஒழியல , நீங்க ஒரு நடவடிக்கையும் எடுக்கல, லஞ்சம் இந்த சமுதாயித்தின் புற்றுநோய் , கேஜ்ரிவால் அதற்கு மருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக