வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

Spy camera வுடன் களம் இறங்கும் ஆம் ஆத்மி ! 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை ஆதரவாளர்களுக்கு .....


டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், மது பாட்டில்களை கொடுப்பதாக பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், இதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டும் வகையில் ஆம் ஆத்மி தனது ஆதரவாளர்களுக்கு 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை கொடுத்திருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் அசுதோஷ் தெரிவித்தார். ஆங்காங்கே, பா.ஜ.கவினர் யாராவது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயலில் ஈடுபட்டால் அதை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் ஸ்பை கேமிராவில் படம் பிடித்து உடனடியாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பை கேமிராவில் பதிவு செய்யப்படும் வீடியோ மற்றும் விசுவல் உடனடியாக பெற பிரத்யேகமாக மையங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதாம்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக