ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கணவன் கொலை மனைவி கற்பழிப்பு ! 41 ஆயிரம் ரூபா அபராதம்! பிகார் பஞ்சாயத்து தீர்ப்பு

Take Rs.41000, forget rape: Panchayat tells victim 41 ஆயிரத்தை வாங்கிவிட்டு, பாலியல் பலாத்காரத்தை மறந்துவிடு என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பீகார் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிகார் மாவட்டம் கோதா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரகாஷ் ரவிதாஸ் என்பவர், மகாதலித் சமூகத்தை சேர்ந்த திருமணமான பெண்ணை, இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி உதவிபெற ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார். மகாதலித் சமூகத்தை சேர்ந்த அந்தப்பெண் அங்கு சென்றபோது, அவரை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்றும் பிரகாஷ் மிரட்டியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊர் பஞ்சாயத்தாரிடம் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக விசாரித்த பஞ்சாயத்தார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.41 ஆயிரத்தை பிரகாஷ் கொடுக்கவேண்டும். அதனை வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரத்தை மறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் உள்ளூர் ரவுடியான பிரகாஷ் பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதுதொடர்பான தகராறில் அந்தப்பெண்ணின் கணவரையும் பிரகாஷ் தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கதிகார் போலீஸ் அதிகாரி ஷத்ரநீல் சிங்கை சந்தித்து புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். “பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட நரேஷ் ரவிதாஸ் என்பவரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் ரவிதாஸ் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்.’’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இதுபோன்ற சம்பவங்களுக்கு பணத்தை வாங்கிவிட்டு மறந்துவிட பஞ்சாயத்தார் உத்தரவிடுவது புதியது இல்லை. கடந்த ஆண்டு கிஷண்கஞ்ச் மாவட்டத்தில், சகோதரர்கள் 4 பேரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 7 மாத கர்ப்பிணியாக சிறுமி இருந்தபோது விசாரித்த பஞ்சாயத்தார், ‘பாலியல் பலாத்காரம் செய்தவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைத்து விட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். சிறுமியின் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைதுசெய்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கருவுற்றாள். அப்போதும், ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைக்கும்படி பஞ்சாயத்தார் மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக