ஆயிரம் உண்மைக் கதைகளில் இருந்து உத்வேகம் பெற்று எடுக்கப்பட்ட கற்பனைக் கதை என்ற அறிவிப்போடு தொடங்கும் ஃபிராக், அந்த ஆயிரமாயிரம் கதைகளுக்கு நியாயம் செய்துள்ள ஒரு படம். முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை உறைய வைத்து, கட்டிப் போடுகிறது.
ஷேக்ஸ்பியரின் 'மேக்பெத்' நாடகத்தில் அரசனைக் கொல்லும் லேடி மேக்பெத்தின்
கைகளில் இருந்து ரத்தக்கறை அகல்வதே இல்லை. மீண்டும் மீண்டும் கைகளைக்
கழுவிக் கொண்டேயிருக்கும் மனப்பிறழ்வு நிலைக்கு அவள் செல்கிறாள்.
மதக் கலவரத்தின்போது தங்கள் உயிரைப் பாதுகாக்கச் சொல்லி சிலர் கதவைத்
தட்டும் ஓசையும், உயிருக்குப் போராடும் முஸ்லிம் பெண் ஜன்னலில் நின்று
மன்றாடும் சித்திரமும், லேடி மேக்பெத்தைப் போல தினம்தினம் மனதில்
எதிரொலித்து பயமுறுத்திக்கொண்டே இருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு
பெண், என்ன செய்வாள்?