சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வாங்குவது போல் சென்னையில் நடந்து வரும் வருமானவரி செலுத்தாத வழக்கிலும் ஜெ., இன்று ஆஜராகவில்லை. இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., வரும் சனிக்கிழமை பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1991 -92 மற்றும் 1992-93 ஆண்டுகளில் ஜெ., மற்றும் அவரது தோழி சசி ஆகியோர் இணைந்து சசி என்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வந்தனர் . இந்த நிறுவனம் தொடர்பான வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் தமிழக முதல்வர் ஜெ.,இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரசு ஆடிட்டராக இருந்தவருக்கு விழுந்த அடி, சந்திரலேகா எம்.எல்.
பல முறை ஆஜராகாததால் ஜெ., இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் நேரம் இல்லை என்று மனுவில் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கென சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஒன்றையும் ஜெ.,வக்கீல் மேற்கோள் காட்டினார்.
இதற்கு வருமான வரித்துறை வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நிச்சயம் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினார். நீதிபதி இது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேர்தல் நேரம் என்பதால் நீதிபதி முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பெங்களூரு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு: இதற்கிடையில் பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், சசிகலாவும் நேரில் ஆதஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 5) காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் எனவும், ஜெ., ஆஜராகும் போது அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்து தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக