2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், கலைஞர்
டி.வி.க்கு சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாக கூறப்படும் விவகாரம்
குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னாள்
மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யைச் சேர்ந்த
சரத்குமார் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக நேற்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, இந்த வழக்கு குறித்த சட்ட ஆலோசனைகள் பெறபட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக